சில வருடங்களுக்கு முன்பு எனது வீட்டின் மேல் மாடியில் மரம் கொத்தி பறவை ஒன்று கொத்திக் கொண்டே இருந்தது, அதை நாங்கள் அதிகமாக பொருட்படுத்தவில்லை. அது எங்கள் வீட்டின் வெளியே என்று எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் சில நாட்களுக்கு பிறகு நானும் என் மகனும் வீட்டு மேலே சென்று பார்க்கும் போது அந்தப் பறவை வீட்டினுள்ளே கொத்தி வைத்திருந்தது நினைத்ததை விட மிகவும் மோசமாக இருந்தது.

இயேசு எருசலேமுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவர்களுடைய வெளிப்படையான பிரச்சினையாகிய ரோமர்களிடம் அடிமைப்பட்டிருப்பதை அவர் மாற்றுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆரவாரத்துடன் “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் உன்னதத்தில் ஓசன்னா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் (மத்தேயு 21:9). இதற்காகத்தான் அந்த மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்; தேவன் நியமித்த ராஜா இறுதியில் வந்து விட்டார். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மீட்பர் விஷயங்களைச் சீர்திருத்தத் தொடங்கினால், அவர் அங்குள்ள எல்லா தவறுகளிலிருந்து தானே தொடங்க வேண்டும்? ஆனால் சுவிசேஷங்களில் இயேசு எருசலேமுக்குள் நுழைந்தவுடன் தேவாலயத்தில் சுரண்டல் பண பரிமாற்றங்கள் செய்துக் கொண்டிருந்தவர்களை முதலில் விரட்டியடிக்கிறார் (வச 12-13). அவர் வீட்டில் உட்புறத்திலிருந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

இயேசுவை இராஜாவாக நாம் ஏற்றுக் கொள்ளும் போது இது தான் நடக்கும்; அவர் வந்து கோணலானவைகளை சீர்படுத்துகிறார் -அதை நம்மிடத்திலிருந்தே தொடங்குகிறார். நமக்குள் இருக்கும் தீமையை எதிர்கொள்ள செய்கிறார்.

நம் இராஜாவாகிய இயேசுநம்மிடத்திலிருந்து நிபந்தனையற்ற சரணடைதலை எதிர்பார்க்கிறார், இதனால் அவருடைய சமாதானத்தை நாம் அனுபவிக்க முடியும்.