Archives: டிசம்பர் 2020

கிறிஸ்மஸ் கால விற்பனை

ஒரு தாயார் தான் கிறிஸ்மஸ் பரிசுகளுக்காக அதிகமான பணம் செலவு செய்வதை உணர்ந்தார்கள். அதனால் ஒரு வருடம் எதாவது வித்தியாசமாக முயற்சி செய்ய நினைத்தார்கள். கிறிஸ்மஸ் விடுமுறைக்கு சில மாதங்களுக்கு முன்பு, முற்றத்தில் விற்பனையாகும் மலிவான மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களை எடுத்துக்

கொண்டார்கள், அவர்கள் வழக்கத்தைவிட அதிகமான பொருட்களை வாங்கினார்கள் ஆனால் குறைந்த விலையில். கிறிஸ்மஸ்க்கு முந்தய நாளில், அவருடைய பிள்ளைகள் தங்கள் தங்கள் பரிசுகளை ஒன்றின்பின ஒன்றாக பிரித்தனர். அடுத்த நாள் இன்னும் அனேக பரிசுகள் காத்திருந்தன. புதிய பரிசுகளை வாங்காதது அந்த தாயாருக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியதால், கிறிஸ்மஸ் அன்றைக்கும் காலையில் கூடுதலாக பரிசுகளை வாங்கி வைத்தார் அம்மா. பிள்ளைகள் பரிசுகளை பிரித்து கொண்டு விரைவாக 'இனி பரிசுகளை திறக்க நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். எங்களுக்கு மிக அதிகமாக கொடுத்தீர்கள்" என்று குறை கூறினார்கள். இது பிள்ளைகளிடமிருந்து கிறிஸ்மஸ் அன்றைக்கு பொதுவாக வரும் பதில் இல்லை.

தேவன் நம்மை எவ்வளவு அதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார், ஆனால் நாம் இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கிறோம். ஒரு பெரிய வீடு, ஒரு நல்ல கார், மிக பெரிய வங்கி கணக்கு, அல்லது வெற்றிடத்தை நிரப்பிக் கொள்ளுங்கள்ஸ. பவுல், தீமோத்தேயு தன் சபை மக்களுக்கு 'இந்த உலகத்திற்கு நாம் ஒன்றும் கொண்டுவந்ததில்லை, இதிலிருந்து ஒன்றும் கொண்டுபோவதுமில்லை. உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்று இருக்கக்கடவோம்" என்று நினைப்பூட்ட உற்சாகப்படுத்தினார் (1 தீமோ. 6:7-8).

தேவன், நம்முடைய தேவைகளை கொடுப்பது மட்டுமில்லாமல், நமக்கு சுவாசத்தையும் ஜீவனையும் கொடுத்திருக்கிறார். அவர் கொடுக்கும் ஆசீர்வாதங்களை புத்துணர்ச்சியோடு அனுபவித்து 'நீர் எங்களுக்கு எவ்வளவு அதிகமாய் கொடுத்திருக்கிறீர். இன்னும் எங்களுக்கு தேவையில்லை" என்று சொல்லி திருப்தியாயிருக்க வேண்டும். போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (வச. 6).

இடைவிடாத அன்பு

ஹேடி மற்றும் ஜேஃப், உஷ்ணமான பருவநிலையில் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையலிருந்து தங்களுடைய வீட்டிற்க்கு வந்தனர். குளிர் காலம் நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்கு அருகில் குடும்பமாக தங்கினர். அவர்களுடைய பத்து பிள்ளைகளில் பலருக்கு இதுவே பனியின் இயற்க்கை அழகை கண்ட முதல் அனுபவமாக இருக்கும்.

ஆனால் இங்கிருக்கும் குளிர்ச்சியான பருவநிலைக்கு அநேக வெதுவெதுப்பான உடைகள், மேல் சட்டை, கையுறைகள், மற்றும் பூட்ஸ் ஆகியவை தேவைப்படும். ஒரு பெரிய குடும்பத்திற்கு, வரப்போகும் இந்த கடுமையான குளிர் காலத்திற்கான உடைகளுக்காகும் செலவு மிக அதிகமாகும். ஆனால் தேவன் அதை சந்தித்தார். முதலில் ஒரு அண்டை வீட்டுகாரர் காலணிகள், பின்பு பனியில் அணியும் கால் சராகை, பின்பு தொப்பி மற்றும் கையுறைகளை கொண்டுவந்தார். பின்பு ஒரு தோழி தன்னுடைய சபையிலுள்ள மற்றவர்களை, அந்த குடும்பத்திலுள்ள பன்னிரெண்டு பேருக்கும் பொருத்தமான அளவிலான வெதுவெதுப்பான உடைகளை சென்று சேகரிக்க சொன்னார். பனி பொழிய தொடங்கியபோது, அந்த குடும்பத்திற்கு சரியாக எது தேவையோ அனைத்தும் அவர்களிடமிருந்த்து.

தேவனுக்கு ஊழியம் செய்யும் வழிகளில் ஒன்று தேவையுள்ளவர்களுக்கு ஊழியம் செய்வது. 1 யோவான் 3:16-18 நம்முடையவைகளின் ஏராளத்திலிருந்து மற்றவருக்கு உதவுவதை ஊக்குவிக்கிறது. ஊழியம் செய்வது நாம் இன்னும் அதிகமாய் இயேசுவை போல் மாற உதவுகிறது. மக்களை எப்படி அவர் அன்புகூர்ந்து, காண்கிறாரோ அப்படியே நாமும் செயல்பட தொடங்கிறோம்.

தேவன் பெரும்பாலும் தன்னுடைய பிள்ளைகளை கொண்டே தேவைகளை சந்திக்கவும் மற்றும் ஜெபத்திற்கு பதிலளிக்கவும் செய்கிறார். நாம் ஊழியம் செய்யும்போது மற்றவர்கள் உற்சாகம் அடைவது போல நாமும் உற்சாகம் அடைகிறோம். அதன் பலனாக, புதிய வழிகளில் நாம் ஊழியம் செய்ய தேவன் நம்மை தயார் செய்யும்போது நம்முடைய விசுவாமும் வளர்கிறது (வச.18).

ஜெபத்தின் சலுகை

நாட்டுப்புற பாடலாசிரியர் கிறிஸ் ஸ்டேபிள்டன் அவர்களால் எழுதப்பட்ட “டேடி டஸன்ட் ப்ரே எனிமோர்” என்ற பாடல் தன்னுடைய தகப்பனார் தனக்காக ஏறெடுக்கும் ஜெபத்தினால் ஈர்க்கப்பட்டு எழுதியது. அதன் கடுமையான வாரிகள், தன் தகப்பனாரின் ஜெபம் ஏமாற்றத்தாலோ, சோர்வினாலோ முடிவடைந்ததினால் அல்ல, ஆனால் அவருடைய மரணத்தில் முடிவடைந்ததை வெளிப்படுத்துகிறது. தன் தகப்பன் ஜெபத்தில் இயேசுவோடு பேசுவதற்கு மாறாக இயேசுவுடன் நடந்துக்கொண்டு முகமுகமாய் அவருடன் பேசிக்கொண்டிருப்பதை கற்பனை செய்கிறார்.

தன் தகப்பன் தனக்காக செய்யும் ஜெபத்தினை நினைக்கும்போது, வேதத்தில் ஒரு தகப்பன் தன் மகனுக்காக ஜெபிப்பதை நினைவுபடுத்துகிறது. தாவீது ராஜா தன் கடைசி நாட்களிலே தன் மகன் சாலொமோன் இஸ்ரவேலின் அடுத்த புதிய ராஜாவாக பதவியேற்க ஆயத்தம் பண்ணினார். சாலொமோனை அபிஷேகம் பண்ண தேசத்தை ஒன்று கூட்டின தாவீது ராஜா எப்போதும் போலவே ஜனங்களை ஜெபத்தில் வழி நடத்தினார். இஸ்ரவேலின் மேல் தேவனுடைய கிருபையை நினைவுகூர்ந்த ராஜா, இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு எப்போதும் விசுவாசமாயிருக்க ஜெபித்தார். பிறகு, ராஜா தேவனிடம் தன் மகனுக்காக ஒரு தனிப்பட்ட வேண்டுதலாக 'என் குமாரனாகிய சாலொமோன், உம்முடைய கற்பனைகளையும், உம்முடைய சாட்சிகளையும், உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கு அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும்" (1 நாளாகமம் 29:19) என்று ஜெபித்தார்.

தேவன் நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கிற மக்களுக்காக விசுவாசத்தோடு ஜெபிப்பதற்காக குறிப்பிட்ட உரிமையை தந்திருக்கிறார். நம்முடைய விசுவாசத்தின் மாதிரி ஜீவியம் நாம் மரித்த பின்பும் அழியாத தாக்கத்கை ஏற்படுத்தும். சாலொமோனுக்காகவும், இஸ்ரவேலுக்காகவும் தாவீதின் வேண்டுதலை, தாவீது மரித்த பின்பும், தேவன் பதிலளித்தது போல நம்முடைய ஜெபத்தின் தாக்கமும் நம் காலம் கடந்து வாழ்ந்திருக்கும்.

கிறிஸ்மஸ் பிரசன்னம்

‘’அவருடைய வருகையை எந்தக் காதும் கேட்காது, ஆனால் இந்த பாவ உலகத்தில், சாந்தகுணமுள்ள ஆத்துமாக்கள் அவரை ஏற்றுக்கொள்ளும் காலகட்டத்தில் அன்பான இயேசு பிறக்கிறார்." எல்லோராலும் நேசிக்கப்பட்ட “ஓ லிட்டில் டவுன் ஆஃப் பெத்லெஹேம்" என்ற பாடலின் வரிகள் கிறிஸ்மஸ்ஸின் மைய கருத்தை சுட்டிக்காட்டுகிறது. நம்மை பாவத்திலிருந்து மீட்கவும், தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் தேவனோடு ஒரு புதிய மற்றும் முக்கியமான உறவை ஏற்படுத்தவும் இயேசு கிறிஸ்து, உடைந்துபோன இந்த உலகத்திற்கு வந்தார்.

இந்தப் பாடல் எழுதிய பல வருடங்களுக்குப்பின், இந்த பாடலாசிரியர் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அனுபவித்த இந்த உறவைப் பற்றி 'இது எனக்கு எவ்வளவு தனிப்பட்டதாக வளர்கிறது என்று கூற முடியாது. அவர் இங்கே இருக்கிறார். அவர் என்னை அறிந்திருக்கிறார், நானும் அவரை அறிந்திருக்கிறேன். இது வெறும் வார்த்தை அல்ல. உலகத்தில் இது மிக உண்மையானது, மற்றும் ஒவ்வொரு நாளும் இதை அதிக உண்மையாக்கி கொண்டே இருக்கிறது. வருடங்கள் செல்லும்போது இது எப்படி வளரும் என்று ஆச்சரியப்பட வைக்கிறது" என்று விவரிக்கிறார்.

தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய பிரசன்னத்தை உறுதியாய் கூறுவது, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட பெயர்களில் ஒன்றான 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்" (ஏசாயா 7:14) என்பதை பிரதிபலிக்கிறது. மத்தேயு எழுதின சுவிஷேத்தில் எபிரேய மொழியில் இம்மானுவேல் என்பதற்கு 'தேவன் நம்மோடிருக்கிறார்" என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது (12:23)

தேவன், நாம் எப்போதும் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்துக்கொள்ள, இயேசுவின் மூலமாக நம்மிடம் வந்தார். அவர் நம்முடன் இருப்பதே நம் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய பரிசு.