Archives: டிசம்பர் 2020

தேவனின் வழிகாட்டுதல்

அவர்களது வங்கி தற்செயலாக 90 லட்சம் ரூபாயை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்த போது, அந்த தம்பதியினர் பொருட்கள் வாங்குவதற்கு தீவிரமாகிவிட்டனர். அவர்கள் கடன்களை அடைத்தது மட்டுமல்லாமல் ஒரு சொகுசு கார், ஒரு புதிய வீடு, இரண்டு நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கினர். டெபாசிட் பிழையைக் கண்டறிந்த வங்கி, தம்பதியரிடம் பணத்தை திருப்பித்தருமாறு கேட்டனர். துரதிர்ஷ்;டவசமாக அந்த கணவனும் மனைவியும் ஏற்கனவே பணத்தை செலவழித்து விட்டனர். பின்னர் அவர்கள் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தம்பதியினர் உள்ளூர் நீதிமன்றத்திற்கு வந்தபோது ஒரு நிருபரிடம் 'நாங்கள் சில மோசமான சட்ட ஆலோசனைகளை எடுத்தோம்" என்று கூறினார். மோசமான ஆலோசனைகளை பின்பற்றுவதும் (தங்களுடையது அல்லாதவைகளை செலவிடுவதும்) தங்களுடைய வாழ்க்கையில் குழப்பத்தை உண்டுபண்ணும் என்று கற்றுக்கொண்டனர்.

இதற்கு நேர்மாறாக, சங்கீதக்காரன், வாழ்க்கையில் குழப்பத்தை தவிர்க்க உதவும் புத்திசாலித்தனமான ஆலோசனைகளை பகிர்ந்துக்கொண்டார். நேர்மையான நிறைவேற்றத்தைக் கண்டவர்கள் - ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்- தேவனை சேவிக்காத மக்களின் ஆலோசனைகளின்படி செல்ல மறுக்கின்றனர் (சங்கீதம் 1:1). விவேகமற்ற, தேவபக்தியற்ற ஆலோசனைகள் நாம் எதிர்பாராத ஆபத்துகளையும் மிகப்பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று அறிவார்கள். மேலும், அவர்கள் வேதாகமத்தின் மாறாத மற்றும் அசைக்கமுடியாத சத்தியத்தில் பிரியமாயிருப்பதும், ஆர்வமாய் தியானிப்பதிலும் உந்தப்படுகிறார்கள் (வச. 2). தேவனுடைய வழிகாட்டுதலுக்கு ஒப்புக்கொடுப்பது ஸ்திரத்தன்மை மற்றும் பலனளிப்பதற்கு வழிவகுக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர் (வச. 3).

நம்முடைய தொழில், பணம், உறவுகள், மற்றும் அனேக காரியங்களில், சிறிதாயிருந்தாலும் பெரிதாயிருந்தாலும் நாம் முடிவுகளை எடுக்கும்போது, வேதாகமத்திலுள்ள தேவனுடைய ஞானத்தையும், தெய்வீக ஆலோசனைகளையும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலையும் நாடுவோமாக. நாம் குழப்பமில்லாமல், நிறைவான வாழ்க்கை வாழ அவருடைய வழிநடத்துதல் நமக்கு அவசியமும், நம்பகமானதுமாயிருக்கிறது.

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.…

அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக்…

அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2: 7

கிறிஸ்துமஸ் என்பது வெறும் நமது நகரம், தெரு,…

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரெயர் 11: 1

பாடகர் குழுவாக நாங்கள் பார்வையிட சென்ற இடங்களின் மனநிலை, சூழல், மற்றும் அமைதியின் அடிப்படை உணர்வு,…

“இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.” 2 கொரிந்தியர் 2:15

கிறிஸ்துமஸ் என்பது நிறைய காரணங்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காலமாகும். அவற்றில் நிச்சயமாக ஒன்று வீட்டில்…

"“...அந்தபடி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியை பெறாமல், அப்பா பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.”.
ரோமர் 8:15

நான் வளரும்போது கிறிஸ்துமஸ் தினத்தன்று…

"“நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.”

2 கொரிந்தியர் 3:18

கிறிஸ்துமஸ் என்பது காற்றில்…