அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக்கா 2: 7

கிறிஸ்துமஸ் என்பது வெறும் நமது நகரம், தெரு, மற்றும் நமது வீடுகளை மட்டும் நாம் ஒளிரச்செய்யும் காலமல்ல, நம்மையும் ஒளிரச்செய்யும் காலம், நம்முடைய சரீரத்தை உடுத்துவிப்பது என்று வரும் போது, சென்ற காலத்தின் உடைகளை விட மெருகேற்றவேண்டும் என்ற உந்துதல் புனித காற்றில் மேலோங்கி நிற்கிறது. நான் குழந்தையாக இருந்தபோது, ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த சிலையை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது என் நினைவுக்கு வருகிறது, அந்த சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த ஆடை என்மேல் எவ்வளவு அழகாக இருக்கும் என்று பிரமித்துக்கொண்டிருந்தேன். நம் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நாளுக்கு முன் கடைகளில் பொருட்களை வாங்கும் நெருங்கிய நினைவு இருக்கும் என்று நம்புகிறேன். சில நேரங்களில் நம் குழந்தைத்தனமான விருப்பம் நிறைவேறும். சில நேரம் நம்மால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை மட்டுமே கேட்கும்படி அறிவுறுத்தப்படுவோம். இவை அனைத்தும் நம் பெற்றோரின் பை எவ்வளவு ஆழம் என்பதை பொறுத்தது.

முதல் கிறிஸ்துமஸிற்க்கு முந்தைய நாள் இரவு, குழந்தை கிறிஸ்துவுக்கு அணிந்துகொள்ள அநேக துணிகள் இல்லை. சொல்லப்போனால், ‘மரியாள்’ அவரை போர்வையால் இறுக சுற்றி முன்னணியில் கிடத்தினாள். இந்த சுருட்டும் துணி என்பது சால்வை போன்றது, பொதுவாக பருத்தி, உண்மையாக அது ஆடையில் வரும் “துணியல்ல”. புதிதாக பிறந்த குழந்தைகளை இதைப்போன்ற துணி சுருள்களில் சுற்றுவதென்பது வழக்கம் ஆகும். அடுத்தமுறை இயேசு வெள்ளைத்துணியில் சுற்றி இருக்க நாம் காண்பது, கல்லறையின் இருளில், ஓய்வில் அவர் வைக்கப்பட்டிருந்தபோது, அவர் வாழ்வில் பிறப்பு முதல் மரணம் வரை பொதுத்தன்மையால் குறிக்கப்பட்டிருந்தது.

தேவ குமாரன் தொழுவத்திலே பிறந்தார்; அவர் ஒரு பிரயாணம் பண்ணும் பெற்றோர்களின் குமாரன், அவர்கள் ஐஸ்வர்யவான்களோ அல்லது அதிகாரம் மிக்கவர்களோ கிடையாது. அதனால் தான் பின்னர் அவர் தன் சீஷர்களுடன் இவ்வாறு சொல்கிறார், 12 கவலைப்படாதிருங்கள்” (மத்தேயு 6:26). அவர் இழப்பு மற்றும் தேவையை புரிந்துகொள்கிறார். அவர் அனுபவத்திலிருந்து பேசினார்.

நம் ஒவ்வொருவருடைய சிலுவையும் வெவ்வேறு அளவுடையதும், பாரமானதாயும் இருக்கிறது. இன்று நம்மில் பலருக்கு மிகப்பெரிய கவலை என்பது எப்பொழுது நம்முடைய அடுத்த உணவை உண்போம் அல்லது எதை நாம் உடுத்துவோம் என்பதல்ல. நாளை நாம் என்ன புதிய கருவியை வாங்குவது அல்லது நாம் எந்த வகையான நாகரிக உடையை உடுத்துவது? என்பதாக அது இருக்கலாம். அடுத்த வேலை உணவு எப்படி கிடைக்கும் என்ற பயத்தோடு எழும்பும் எண்ணற்றவர்களுக்கு, நவநாகரிக உடைவாங்குவது என்பது அவர்களால் கொள்ளமுடியாதஒன்றாக இருக்கிறது. இது இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், கிறிஸ்துவை ஆராதிப்பதற்கான விலையை, நாம் கேள்வி கேட்கும்படி செய்கிறது. இதற்க்கு அர்த்தம் புத்தாடைகள் மீதான கவர்ச்சியை விட்டுக்கொடுப்பதா? அதை வாங்க முடியாதவர்களுக்கான கிறிஸ்துமஸ் செய்தியாக நாம் இருக்கலாமா? உலகம் நம்பிக்கையின் மிகுந்த தேவையில் உள்ளது. எனவே, கிறிஸ்துமஸை நாம் அணுகும்போது, நமது வாழ்கை, தேவையில் உள்ளவர்களுக்காக அக்கறைகொள்ளும் நம்முடைய ரட்சகரை எடுத்துக்காட்டுவதாக இருக்கட்டும்.

அன்புள்ள பிதாவே, உம்முடைய மிகுந்த கிருபையாலே உம் பராமரிப்பை எங்களிடம் நீட்டித்திருக்கிறீர்; அதற்கு பதிலாக, இந்த காலத்தில் நாங்கள் உம்முடைய அன்புள்ள தயவை தேவையானவர்களிடத்தில் வெளிப்படுத்த உதவும். ஆமென்.

– Ps. ஆனந்த் பீகாக்