சூரியன் அஸ்தமித்து நீண்ட நேரத்திற்குப் பிறகு எங்களுக்கு மின் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டது. என்னுடைய இரண்டு இளைய பிள்ளைகள் என்னோடே இருந்தார்கள், மற்றும் இதுதான் முதல் முறை அவர்கள் மின்தடையை அனுபவிக்கிறார்கள். மின் தடைப் பற்றி மின்வாரி நிறுவனம் அறிந்திருக்கிறதா என்று சரிபார்த்த பிறகு, சில மெழுகுவர்த்திகளை ஏற்றி நானும் என் குழந்தைகளும் சமையலறையில் ஒளிர்கின்ற சுடர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். அவர்கள் பதற்றமாகவும் அமைதியற்றவர்களாகவும் தோன்றினதால் நாங்கள் பாட ஆரம்பித்தோம். விரைவில் அவர்களுடைய முகத்தில் இருந்த சோகமான தோற்றம், புன்னகையாக மாறியது. சில நேரங்களில் நம்முடைய இருண்ட தருணங்களில் நமக்கு பாடல் தேவைப்படுகிறது.
தேவனுடைய பிள்ளைகள் நாடுகடத்தப்பட்டதிலிருந்து, தரிசு நிலமாய் மாறிப்போன தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பி வந்தப் போது 103ம் சங்கீதம் ஜெபமாகவோ அல்லது பாடலாகவோ ஏறெடுக்கப்பட்டது. அந்த நெருக்கடியின் தருணத்தில் அவர்கள் பாடவேண்டியிருந்தது. ஆனால் ஏதோ ஒரு பாடல் அல்ல, தேவன் யார் என்றும் அவர் என்ன செய்கிறார் என்றும் பாடவேண்டியிருந்தது. அவர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் என்பதை நினைவுகூற 103ம் சங்கீதம் உதவுகிறது (வச. 8). ஒருவேளை நம் பாவத்தின் தீர்ப்பு இன்னும் நம் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது என்று நாம் நினைத்தால், தேவன் கோபமடையவில்லை, அவர் மன்னித்துவிட்டார், அவர் இரக்கமுள்ளவர் என்று சங்கீதம் நமக்கு அறிவிக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் இருண்ட இரவுகளில் நாம் பாடுவதற்கு அவைகளே நல்ல விஷயங்கள்.
ஒரு இருண்ட மற்றும் கடினதான இடத்தில் நீங்கள் இருப்பதாக காணலாம். தேவன் உண்மையாகவே நல்லவரா என்று அவருடைய அன்பை கேள்விக்குரியாக்குகிறீர்களா? அப்படியானால், ஜெபித்து அன்பு நிறைந்தவரைப் பாடுங்கள்.
இயேசுவின் மூலம் தேவனுடைய இரட்சிப்பின் செயல் அவர் யார் என்பதை மேலானதாக சித்தரிக்கிறது? அவர் உங்களை எப்படிப் பார்க்கிறார்?
அனபுள்ள இயேசுவே, தேவன் தம்முடைய அன்பை உம்முடைய வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் வெளிப்படுத்தினதைக் காண உதவிச் செய்யும்.