வாஷிங்டன் டிசியில் ரெட்-ஐ விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தப்போது, கருத்து எழுத்தாளர் ஆர்தர் புருக்ஸ் ஒரு வயதான பெண்மணி தன் கணவனிடம் ‘நீங்கள் யாருக்கும் தேவையில்லை என்பது உண்மை அல்ல” என்று கிசுகிசுப்பதைக் ஒட்டுக் கேட்டார். அந்தக் கணவர் தான் இறந்துவிட்டால் நலமாயிருக்கும் என்று முணுமுணுப்பதைக் கேட்ட அவள் ‘ஓ! அப்படிச் சொல்வதை நிறுத்துங்கள்” என்று கூறினாள். விமானப் பயணம் முடிந்தவுடன் புருக்ஸ் திரும்பிப் பார்த்து உடனடியாக அந்த நபரை அடையாளம் கண்டுக்கொண்டார். அவர் ஒரு உலகப் புகழ்ப்பெற்ற கதாநாயகன். மற்றப் பயணிகள் அவரோடு கைக்குலுக்கினர். பல தசாப்தங்களுக்கு முன் அவர் காட்டிய தைரியத்திற்கு பைலட் நன்றி தெரிவித்தார். இப்படிப்பட்ட பேராற்றல் வாய்ந்தவர் எப்படி விரக்தியில் மூழ்க முடியும்?
எலியா திர்க்கதரிசி தைரியமாகவும், தனியாகவும் நின்று 450 பாகால் திர்க்கதரிசிகளை தோற்கடித்தார் (1 இரா. 18). என்றாலும் அவர் அதைத் தனியாகச் செய்யவில்லை. தேவன் அவரோடே கூட இருந்தார்! ஆனால் பின்னர் தனிமையாக உணர்ந்த அவர் தேவனிடம் தன் ஜீவனை எடுத்துக்கொள்ளும்படி கேட்டார்.
தேவன் எலியாவை தன்னுடைய பிரசன்னத்தில் கொண்டுவந்து, அவரைச் சேவிக்க புதிய மனிதர்களைக் கொடுத்து, அவருடைய ஆவியை உயிர்ப்பித்தார். அவர் போய் “ஆசகேலை சீரியாவின் மேல் இராஜாவாகவும்”, ‘யெகூவை இஸ்ரவேலின் மேல் இராஜாவாகவும்”, ‘எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” என்று தேவன் கூறினார் (19:15-16). புதிய நோக்கத்தால் பலப்படுத்தப்பட்டு எலியா தன்னுடைய வாரிசைக் கண்டுபிடித்து வழிநடத்தினார்.
உங்கள் பெரிய வெற்றிகள் பின்பக்க கண்ணாடியில் தோற்றமளிக்கலாம். உங்கள் வாழ்க்கையின் உச்சத்தை அடைந்நதாக உணரலாம். பரவாயில்லை, சுற்றிப்பாருங்கள். போர்கள் சிறியதாகத் தோன்றலாம், பங்குகள் ஆழம் குறைவாக இருக்கலாம், ஆனால் நீங்கள் தேவைப்படும் மற்றவர்கள் இருக்கிறார்கள். இயேசுவினிமித்தம் அவர்களுக்கு நன்றாக சேவை செய்யவும், அது கணக்கில் கொள்ளப்படும். அவர்கள் தான் உங்களுடைய நோக்கம் – நீங்கள் இன்னும் இருப்பதற்கு அவர்கள் தான் காரணம்.
கிறிஸ்துவுக்காக இன்றைக்கு நீங்கள் யாருக்கு சேவை செய்ய முடியும்? தேவனுடைய அன்போடு மற்றவர்களை அணுகுவது ஏன் நமக்கு மிக முக்கியமானது?
பரிசுத்த ஆவியானவரே, இயேசுவினிமித்தம் நான் சேவை செய்ய வேண்டியவர்களுக்காக என் கண்களைத் திறந்தருளும்.