அர்ஜென்டினாவின் பெண்கள் கூடைப்பந்து அணியினர் தவறான சீருடைகளை அணிந்துக்கொண்டு போட்டிக்கு வந்தனர். அவர்களின் அடர்நீல நிற ஜெர்சிகள் கொலம்பியாவின் அடர் நீல நிற ஜெர்சிகளுக்கு மிகவும் ஒத்திருந்தன. அதுமல்லாமல் அவர்கள் வருகை தந்த அணியாயிருந்ததினால் அவர்கள் வெள்ளை நிற ஜெர்சியை அணிந்திருக்க வேண்டும். மாற்று சீருடைகளை பெற்றுக்கொள்ளவும் மற்றும் அதனை மாற்றிக்கொள்ளவும் நேரமில்லாததால் அவர்கள் விளையாட்டை இழக்க நேரிட்டது. எதிர்காலத்தில் அர்ஜென்டினா நிச்சயம் அவர்கள் அணிந்திருப்பதை இருமுறை சரிபார்க்கும்.
சகரியா தீர்க்கதரிசியின் காலத்தில், தேவன் அவருக்கு ஒரு தரிசனத்தைக் காட்டினார். அதில் பிரதான ஆசாரியனான யோசுவா அழுக்கு உடைகளைத் தரித்துக்கொண்டு தேவனுக்கு முன்பாக வந்தார். சாத்தான் பரிகாசம் செய்து சுட்டிக்காட்டினான். அவர் தகுதியற்றவர்! விளையாட்டு முடிந்தது! ஆனால் உடையை மாற்றிக்கொள்ள நேரமிருந்தது. தேவன் சாத்தானைக் கடிந்துக்கொண்டார். யோசுவாவின் அழுக்கு வஸ்திரங்களை அகற்றும்டபடி தம்முடைய தூதருக்கு கட்டளையிட்டார். தேவன் யோசுவாவை நோக்கி ‘பார். நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து உனக்கு சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்” என்றார் (சக. 3:3).
ஆதாமின் பாவத்தின் துர்நாற்றத்தை அணிந்துக்கொண்டு இவ்வுலகத்தில் வந்தோம். நம்முடைய சொந்த பாவத்தையும் இதோடு அடுக்கிக்கொண்டோம். நாம் நம்முடைய அழுக்கு வஸ்திரத்தோடு இருந்தால் நம்முடைய வாழ்க்கை விளையாட்டை இழந்து விடுவோம். நம்முடைய பாவத்தால் நாம் வெறுப்படைந்து தேவனிடம் திரும்பினால் அவர் நம்மை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலும் தம்மை மற்றும் தம்முடைய நீதியினால் நம்மை அணிவிப்பார். நாம் யாரை அணிந்துக் கொண்டிருக்கிடிறோம் என்று சரிபார்க்க வேண்டிய நேரம் இது. ‘தி சாலிட் ராக்” என்ற ஆங்கிலப் பாடலின் இறுதி சரணம் நாம் எவ்வாறு வென்றோம் என்று விளக்குகிறது. ‘அவர் எக்காள சத்தத்தோடு வரும்போது… ஓ! நான் அவரிடத்தில் காணப்படுவேன், ஃ அவருடைய நீதியின் ஆடை மட்டுமே அணிந்து, ஃ குற்றமில்லாமல் சிங்காசனத்திற்கு முன் நிற்பேன்”.
நீங்கள் யாரை அணிந்துக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் உங்கள் சொந்த நன்மையையா அல்லது இயேசுவையா நமபுகிறீர்கள்? உங்களுக்கு எது தேவை. தேவனா அல்லது மற்றவர்களுடைய கவனமா?
இயேசுவே, என்னுடைய பாவங்கள் நீங்க வழி காட்டியதற்காகவும் உம்முடைய நீதியினால் என்னை மூடியிருப்பதற்காகவும் நன்றி.