‘சொல்வதினால் மட்டும் அவர்கள் யார் என்பதை ஒருவர் அறிந்துக்கொள்ளுவதில்லை. அவைகள் காட்டப்படவேண்டும்” என்று பாஸ்டர் டிம் கெல்லர் கூறுகிறார். இது செயல்கள் சொற்களைவிட சத்தமாக பேசுகின்றன என்ற பழமொழியின் ஒரு பயன்பாடு. தங்கள் துணைகள் தங்களை கவனிப்பதும், தங்களிடம் அன்பு செலுத்துவதின் மூலமே பாராட்டப்படுகின்றனர் என்று வாழ்க்கைத்துணைகள் காண்பிக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அன்பாக கவனிப்பதன் மூலம் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று காண்பிக்கின்றனர். பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்களை அவர்களுடைய வளர்ச்சியில் முதலீடு செய்வதன் மூலம் திறனைக் காட்டுகிறார்கள். மற்றும் அது அப்படியே நீடிக்கிறது. அதே போல வேறுபட்ட செயலானது மக்களுக்கு வலிமிகுந்த இருண்ட செய்திகளை கொடுக்கும்.
ஊலகத்தில் உள்ள அனைத்து செயல்-அடிப்படையிலான செய்திகளிலும் மிக முக்கியமானது ஒன்று உள்ளது. தேவனின் பார்வையில் நாம் யார் என்றுக் காட்ட விரும்பும்போது சிலுவையில் அவர் செய்த செயல்களைத் தவிர வேறு எதையும் பார்க்கவேண்டியதில்லை. ரோமர் 5:8ல் பவுல் இவ்வாறாக கூறுகிறார், ‘நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”. நாம் யாரென்று சிலுவை நமக்கு காண்பிக்கிறது : தேன் தம்முடைய ஒரே பேரான குமாரனைத் தந்தருளி இவ்வளவாய் நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார் (யோவா. 3:16).
உடைந்துப்போன மக்களின் உடைந்த கலாச்சாரத்தின் கலப்பு செய்திகளுக்கும், குழப்பமான செயல்களுக்கும் எதிராக தேவனுடைய இதயத்தின் செய்தி மிகத் தெளிவாக இருக்கிறது. நீங்கள் யார்? உங்களை மீட்டெடுக்க தன்னுடைய குமாரனையே கொடுத்து, தேவனால் அதிகமாக நேசிக்கப்பட்வர்கள் நீங்களே. அவர் உங்களுக்காக செலுத்திய விலைக்கிரயத்தை கருத்தில் கொள்ளுங்கள், அற்புதமான உண்மை என்னவென்றால், அவரைப் பொறுத்தவரை, நீங்கள் எப்போதும் மதிப்புக்குரியவர்கள்.
நீங்கள் உங்களுடைய மதிப்பை எவ்வாறு வரையறுக்கிறீர்கள்? தேவன் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பைப் புரிந்துக்கொள்வதற்கு ஈடாக நீங்கள் எந்தத் தவரான செய்திகளை நிராகரிக்க வேண்டும்?
பிதாவே, நீர் ஏன் என்னை இவ்வளவாய் நேசித்து, என்னுடைய மன்னிப்புக்காக உம்முடைய குமாரனை கொடுத்தீர் என்று என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. உம்முடைய அன்பு ஆராய்ந்து அறிய முடியாது மற்றும் உம்முடைய கிருபை ஆச்சரியமானது. என்னை உம்முடைய பிள்ளையாக ஏற்றுக்கொண்டதற்காக நன்றி.