அவரது பெயர் யான். அவர் தன்னை உலகத்தின் மாணவன் என்று கருதுகிறார். அவர் கடந்து வந்த எல்லா நகரங்களைக் குறித்து ‘இது ஒரு பெரிய பள்ளி’ என்று கூறுகிறார். மக்களை சந்தித்து அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள அவர் 2016ம் ஆண்டு தனது சைக்கிளில் நான்கு வருட பயணத்தை துவங்கினார். மொழி ஒரு தடையாக இருக்கும்போது, சில நேரங்களில் மக்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதிலேயே புரிந்துக்கொள்ளுகிறார்கள் என்று கண்டார். அவர் மக்களிடம் தொடர்பு கொள்ள தன் தொலைபேசியில் உள்ள மொழிபெயர்ப்பு பயன்பாட்டை சார்ந்திருக்கிறார். அவர் தான் பயணித்த மைல் கணக்கிலோ அல்லது அவர் பார்த்த காட்ச்சிகளையோ வைத்து அவர் தனது பயணத்தை அளவிடவில்லை. அதற்கு பதிலாக தன்னுடைய இதயத்தில் முத்திரை பதித்த மக்களைக் கொண்டு அளவிடுகிறார்: ‘உங்கள் மொழி எனக்குத் தெரியாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் யார் என்பதைக் கண்டுக்கொள்ள விரும்புகிறேன்”.
இது மிகப் பெரிய உலகம். இருந்தாலும் அதைப்பற்றின எல்லாவற்றையும், அதன் மக்களைப்பற்றியும் தேவன் முழுமையாக அறிந்திருக்கிறார். சங்கீதக்காரனாகிய தாவீது தேவனின் விரல்களின் கிரியையாகிய வானங்களையும், அவர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும், பார்க்கும்போது மிகவும் ஆச்சரியப்பட்டார் (சங். 8:3). ‘மனுஷனை நினைக்கிறதற்கும், அவனை விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்” என்று வியந்தார் (வச. 4).
தேவன் மற்ற யாரை விடவும் உங்களை நன்கு அறிந்திருக்கிறார் மற்றும் அவர் உங்கள் மேல் கவனமாயிருக்கிறார். ‘எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது” (வச. 1,9) என்று நாமும் துதிக்கலாம்.
தேவன் உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்பதையும் அவர் உங்களை நேசிக்கிறார் என்பதையும் நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் இந்த சத்தியத்தை நம்புவது எப்படி இருக்கிறது?
அன்புள்ள தேவனே, உம்முடைய முழு படைப்பையும் நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்பது மிகவும் அருமையான ஒன்று. என்னை தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறதினால் உம்மை நேசிக்கிறேன்.