கி.மு. 27 ல், ரோமானிய ஆட்சியாளரான ஆக்டேவியன், தனது அதிகாரங்களை ஒப்படைக்க செனட் முன் வந்தார். அவர் ஒரு உள்நாட்டுப் போரை வென்று, உலகின் அந்த பிராந்தியத்தின் ஒரே ஆட்சியாளராகி ஒரு பேரரசரைப் போல செயல்பட்டு வந்தார். ஆயினும், அப்படிப்பட்ட அதிகாரம் சந்தேகத்துக்குரியதாக பார்க்கப்பட்டதாக அவர் அறிந்திருந்தார். அதனால், ஆக்டேவியன் தனது அதிகாரங்களை செனட்டுக்கு முன்பாக ஒப்படைத்து, நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாக செயல்பட சாபதமெடுத்தார். அவர்களின் பதில் ? ரோமானிய செனட், ஆட்சியாளரை ஒரு குடிமைக் கிரீடத்தால் முடிசூட்டி, ரோமானிய மக்களின் சேவைக்காரன் என்று பெயரிட்டு கௌரவித்தது. அவருக்கு அகஸ்டஸ் – “மகா பெரியவர்” – என்ற பெயரும் வழங்கப்பட்டது.
இயேசு தன்னை வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்ததைக் குறித்து பவுல் எழுதுகிறார். அகஸ்டஸ் தனது அதிகாரங்களை ஒப்படைப்பதைப் போலவே செயல்பட்டார். ஆனால் அதை தனது சொந்த லாபத்திற்காக செய்துக் கொண்டிருந்தார். இயேசு “ மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரயபரியந்தமும் கீழ்படிந்தவராகித், தம்மைத் தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:8). ரோமானிய சிலுவையில் மரணம் என்பது அவமானம் மற்றும் அவமானத்தின் மோசமான வடிவமாகும்.
இன்று மக்கள் “ஊழியத் தலைமையை” ஒரு நல்லொழுக்கமாகப் புகழ்வதற்கு காரணம் இயேசுவே. தாழ்மை ஒரு கிரேக்க மற்றும் ரோமானிய நல்லொழுக்கம் அல்ல. இயேசு நமக்காக சிலுவையில்
மரித்ததால், அவரே உண்மையான ஊழியக்காரன். அவரே உண்மையான இரட்சகர்.
நம்மை இரட்சிக்கும்படியாக கிறிஸ்து ஒரு அடிமையானார். உண்மையிலேயே மிகப்பெரிய பரிசாகிய, இரட்சிப்பு மற்றும் நித்திய ஜீவன், இவைகளை நாம் பெற்றுக்கொள்ளும்படியாக அவர் “தம்மைத் தாமே வெறுமையாக்கினார்”.
தேவன் நம்மை அடையக்கூடாதபடி நாம் எப்போதும் தூரமானவர்கள் அல்ல என்பது ஏன் உண்மையாகிறது? உங்களை இரட்சிப்பதற்காகவே பாடுபட்டு மரித்த உண்மையான ஊழியக்காரன் இயேசு என்பது உங்களுக்கு அர்த்தம் என்ன?
ஆன்புள்ள இயேசுவே, உம்முடைய ஜீவனை எனக்காக கொடுத்ததற்காக நன்றி. உம்முடைய ஊழியக்காரத்தன்மை ஒரு நிகழ்ச்சி அல்ல ஆனால் நீர் என்மீது வைத்திருக்கும் அன்பின் உண்மை. இன்று என்னுடைய இதயத்தை அன்பினாலும் நன்றியினாலும் நிரப்பும். நீரே உத்தம ஊழியக்காரனும் உலகத்தின் இரட்சகருமாயிருக்கிறீர்.