அவர்களது வங்கி தற்செயலாக 90 லட்சம் ரூபாயை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்த போது, அந்த தம்பதியினர் பொருட்கள் வாங்குவதற்கு தீவிரமாகிவிட்டனர். அவர்கள் கடன்களை அடைத்தது மட்டுமல்லாமல் ஒரு சொகுசு கார், ஒரு புதிய வீடு, இரண்டு நான்கு சக்கர வாகனங்களையும் வாங்கினர். டெபாசிட் பிழையைக் கண்டறிந்த வங்கி, தம்பதியரிடம் பணத்தை திருப்பித்தருமாறு கேட்டனர். துரதிர்ஷ்;டவசமாக அந்த கணவனும் மனைவியும் ஏற்கனவே பணத்தை செலவழித்து விட்டனர். பின்னர் அவர்கள் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தம்பதியினர் உள்ளூர் நீதிமன்றத்திற்கு வந்தபோது ஒரு நிருபரிடம் ‘நாங்கள் சில மோசமான சட்ட ஆலோசனைகளை எடுத்தோம்” என்று கூறினார். மோசமான ஆலோசனைகளை பின்பற்றுவதும் (தங்களுடையது அல்லாதவைகளை செலவிடுவதும்) தங்களுடைய வாழ்க்கையில் குழப்பத்தை உண்டுபண்ணும் என்று கற்றுக்கொண்டனர்.
இதற்கு நேர்மாறாக, சங்கீதக்காரன், வாழ்க்கையில் குழப்பத்தை தவிர்க்க உதவும் புத்திசாலித்தனமான ஆலோசனைகளை பகிர்ந்துக்கொண்டார். நேர்மையான நிறைவேற்றத்தைக் கண்டவர்கள் – ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்- தேவனை சேவிக்காத மக்களின் ஆலோசனைகளின்படி செல்ல மறுக்கின்றனர் (சங்கீதம் 1:1). விவேகமற்ற, தேவபக்தியற்ற ஆலோசனைகள் நாம் எதிர்பாராத ஆபத்துகளையும் மிகப்பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று அறிவார்கள். மேலும், அவர்கள் வேதாகமத்தின் மாறாத மற்றும் அசைக்கமுடியாத சத்தியத்தில் பிரியமாயிருப்பதும், ஆர்வமாய் தியானிப்பதிலும் உந்தப்படுகிறார்கள் (வச. 2). தேவனுடைய வழிகாட்டுதலுக்கு ஒப்புக்கொடுப்பது ஸ்திரத்தன்மை மற்றும் பலனளிப்பதற்கு வழிவகுக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர் (வச. 3).
நம்முடைய தொழில், பணம், உறவுகள், மற்றும் அனேக காரியங்களில், சிறிதாயிருந்தாலும் பெரிதாயிருந்தாலும் நாம் முடிவுகளை எடுக்கும்போது, வேதாகமத்திலுள்ள தேவனுடைய ஞானத்தையும், தெய்வீக ஆலோசனைகளையும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலையும் நாடுவோமாக. நாம் குழப்பமில்லாமல், நிறைவான வாழ்க்கை வாழ அவருடைய வழிநடத்துதல் நமக்கு அவசியமும், நம்பகமானதுமாயிருக்கிறது.
தெய்வீக முடிவுகளை எடுக்க ஏன் வேதாகமம் அவசியமானது என்று நம்புகிறீர்கள்? ஞானமாய் ஆலோகனைகளை வழங்குவதில் உங்களுக்கு உதவி செய்பவர்கள் யார்? அவர்கள் ஏன் நம்பத் தகுந்தவர்கள்?
அன்புள்ள தேவனே, எனக்கு தெறியாத காரியங்களில் உம்முடைய ஆலோசனைகளை நாடுவதற்கு முன் – எங்கு வாழவேண்டும், யாரைத் திருமணம் செய்ய வேண்டும், எந்தத் தொழில் தொடரவேண்டும் - உம்மையும் மற்றவர்களையும் நேசிப்பது உட்பட எனக்கு தெரிந்த பகுதிகளில் உமக்கு கீழ்படிய உதவி செய்யும்.