ஹேடி மற்றும் ஜேஃப், உஷ்ணமான பருவநிலையில் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையலிருந்து தங்களுடைய வீட்டிற்க்கு வந்தனர். குளிர் காலம் நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்கு அருகில் குடும்பமாக தங்கினர். அவர்களுடைய பத்து பிள்ளைகளில் பலருக்கு இதுவே பனியின் இயற்க்கை அழகை கண்ட முதல் அனுபவமாக இருக்கும்.
ஆனால் இங்கிருக்கும் குளிர்ச்சியான பருவநிலைக்கு அநேக வெதுவெதுப்பான உடைகள், மேல் சட்டை, கையுறைகள், மற்றும் பூட்ஸ் ஆகியவை தேவைப்படும். ஒரு பெரிய குடும்பத்திற்கு, வரப்போகும் இந்த கடுமையான குளிர் காலத்திற்கான உடைகளுக்காகும் செலவு மிக அதிகமாகும். ஆனால் தேவன் அதை சந்தித்தார். முதலில் ஒரு அண்டை வீட்டுகாரர் காலணிகள், பின்பு பனியில் அணியும் கால் சராகை, பின்பு தொப்பி மற்றும் கையுறைகளை கொண்டுவந்தார். பின்பு ஒரு தோழி தன்னுடைய சபையிலுள்ள மற்றவர்களை, அந்த குடும்பத்திலுள்ள பன்னிரெண்டு பேருக்கும் பொருத்தமான அளவிலான வெதுவெதுப்பான உடைகளை சென்று சேகரிக்க சொன்னார். பனி பொழிய தொடங்கியபோது, அந்த குடும்பத்திற்கு சரியாக எது தேவையோ அனைத்தும் அவர்களிடமிருந்த்து.
தேவனுக்கு ஊழியம் செய்யும் வழிகளில் ஒன்று தேவையுள்ளவர்களுக்கு ஊழியம் செய்வது. 1 யோவான் 3:16-18 நம்முடையவைகளின் ஏராளத்திலிருந்து மற்றவருக்கு உதவுவதை ஊக்குவிக்கிறது. ஊழியம் செய்வது நாம் இன்னும் அதிகமாய் இயேசுவை போல் மாற உதவுகிறது. மக்களை எப்படி அவர் அன்புகூர்ந்து, காண்கிறாரோ அப்படியே நாமும் செயல்பட தொடங்கிறோம்.
தேவன் பெரும்பாலும் தன்னுடைய பிள்ளைகளை கொண்டே தேவைகளை சந்திக்கவும் மற்றும் ஜெபத்திற்கு பதிலளிக்கவும் செய்கிறார். நாம் ஊழியம் செய்யும்போது மற்றவர்கள் உற்சாகம் அடைவது போல நாமும் உற்சாகம் அடைகிறோம். அதன் பலனாக, புதிய வழிகளில் நாம் ஊழியம் செய்ய தேவன் நம்மை தயார் செய்யும்போது நம்முடைய விசுவாமும் வளர்கிறது (வச.18).
உங்களை சுற்றியுள்ளவர்களின் எண்ணற்ற தேவைகளை கவனிக்கும்போது, நடைமுறையில் தேவனுடைய அன்பை எவ்வாறு காண்பிப்பீர்கள்? தேவனுக்கு ஊழியம் செய்வது எப்படி உங்களுடைய விசுவாசத்தை வளர்க்க உதவுகிறது?
பரலோக தேவனே, எனக்கு அன்பானவர்களை உமக்கு முன்பாக நிறுத்தி அவர்களுடை வாழ்க்கையில் உம்முடைய சித்தம் நிறைவேற்ற ஜெபிக்கிறேன்.