‘’அவருடைய வருகையை எந்தக் காதும் கேட்காது, ஆனால் இந்த பாவ உலகத்தில், சாந்தகுணமுள்ள ஆத்துமாக்கள் அவரை ஏற்றுக்கொள்ளும் காலகட்டத்தில் அன்பான இயேசு பிறக்கிறார்.” எல்லோராலும் நேசிக்கப்பட்ட “ஓ லிட்டில் டவுன் ஆஃப் பெத்லெஹேம்” என்ற பாடலின் வரிகள் கிறிஸ்மஸ்ஸின் மைய கருத்தை சுட்டிக்காட்டுகிறது. நம்மை பாவத்திலிருந்து மீட்கவும், தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் தேவனோடு ஒரு புதிய மற்றும் முக்கியமான உறவை ஏற்படுத்தவும் இயேசு கிறிஸ்து, உடைந்துபோன இந்த உலகத்திற்கு வந்தார்.
இந்தப் பாடல் எழுதிய பல வருடங்களுக்குப்பின், இந்த பாடலாசிரியர் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அனுபவித்த இந்த உறவைப் பற்றி ‘இது எனக்கு எவ்வளவு தனிப்பட்டதாக வளர்கிறது என்று கூற முடியாது. அவர் இங்கே இருக்கிறார். அவர் என்னை அறிந்திருக்கிறார், நானும் அவரை அறிந்திருக்கிறேன். இது வெறும் வார்த்தை அல்ல. உலகத்தில் இது மிக உண்மையானது, மற்றும் ஒவ்வொரு நாளும் இதை அதிக உண்மையாக்கி கொண்டே இருக்கிறது. வருடங்கள் செல்லும்போது இது எப்படி வளரும் என்று ஆச்சரியப்பட வைக்கிறது” என்று விவரிக்கிறார்.
தன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய பிரசன்னத்தை உறுதியாய் கூறுவது, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்ட பெயர்களில் ஒன்றான ‘ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” (ஏசாயா 7:14) என்பதை பிரதிபலிக்கிறது. மத்தேயு எழுதின சுவிஷேத்தில் எபிரேய மொழியில் இம்மானுவேல் என்பதற்கு ‘தேவன் நம்மோடிருக்கிறார்” என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது (12:23)
தேவன், நாம் எப்போதும் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்துக்கொள்ள, இயேசுவின் மூலமாக நம்மிடம் வந்தார். அவர் நம்முடன் இருப்பதே நம் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய பரிசு.
தேவன் உன்னை அதிகமாக நேசிப்பதும், எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புவதும் உனக்கு எப்படி தோன்றுகிறது. இன்று நீ எப்படி அவருடன் நெருக்கமாவாய்.
அன்பான தேவனே, இந்த உலகத்தில் எனக்காக உம்முடைய ஜீவனைத் தந்ததற்காகவும், சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்ததற்காகவும் உமக்கு நன்றி, இன்றும் என்றும் உமக்காக வாழ உதவி செய்யும்.