Archives: நவம்பர் 2020

மரங்களுடன் மெல்ல பேசுபவர்

டோனி ரிநாயுடோ வேர்ல்ட் விஷன் ஆஸ்திரேலியாவின் "மரங்களுடன் மெல்ல பேசுபவர்" அழைக்கப்பட்டார்.  அவர் ஒரு மிஷனரியாகவும், வேளாண்மை விஞ்ஞானியாகவும் பணியாற்றி வந்தார். 30 வருடமாக இயேசுகிறிஸ்துவை  பற்றி பகிருவதிலும், அழிந்துவரும் காடுகளான ஆப்பிரிக்காவின் சாஹில் என்கிற சஹாராவின்  தெற்கே உள்ளவைகளை காப்பதில் தம்மை ஈடுபடுத்திவந்தார்.

காலப்போக்கில் புதர் செடிகள் உறங்கும் மரங்கள் என்று ரிநாயுடோ கண்டுபிடித்தபின்பு, அப்புதர்களை பயன்படுத்தவும், அதை சுத்தம்பணி நீர்பாய்ச்ச ஆரம்பித்தார். இவரின் இச்செயல் மூலம் பல்லாயிரம் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டார்கள். அந்த புதர்களை காப்பதின் மூலம் மணல் அரிப்பினால் அவர்களின் அழியும் விவசாய நிலங்கள் காக்கப்பட்டன. இதன் விளைவாக நைகரிலுள்ள விவசாயிகள் தங்கள் வருமானத்தை இரு மடங்கு அதிகரித்தார்கள். அதுமாத்திரம் அல்ல ஒரு வருடத்தில் 23 லட்சம் மக்களுக்கு அதிகமாக ஆகாரம் அளிக்க முடிந்தது.

இந்த விவசாயத்தை சிருஷ்டித்த இயேசு, இதே போன்ற விவசாய தந்திரோபாயங்களை பற்றி யோவான் 15ல் " நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்" என்றுகூறுகிறார்

நம் ஆத்துமா உலர்ந்து போகாத படி தேவன் அனுதினமும் சுத்திகரிக்கிறார். வசனம் சொல்லுகிறதுபோல் அவருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருந்தாள் "அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்" (சங். 1: 3). அவருக்குள் நாம் ஆழமாய் நடப்பட்டால் நம் வாழ்வு புதுப்பிக்கப்பட்டு பசுமையாயிருக்கும்.

எல்லாவற்றையும் கேட்கும் தேவன்

உலகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிக நேரமெடுத்து போய் சேர்ந்தடைந்த அஞ்சல் 89 வருடம் கழித்து பெறுநரிடம் போய் சேர்ந்தது. 2008ஆம் ஆண்டில் யுகேவை சேர்ந்த ஒருவருக்கு, அவர் முகவரியில் குடியிருந்தவருக்கு, 1918ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஒரு விருந்து அழைப்பிதல் வந்தது. "ராயல் மெயில்"  முழுமையாக அனுப்பப்பட்ட இந்த அஞ்சல் இத்தனை வருடம் தாமதமான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகத்தின் தலைசிறந்த தொடர்புகொள்ளும் முறைகள் கூட நம்மை சில நேரங்களில் கைவிடலாம். ஆனால் வசனம் நமக்கு தெளிவாக கூறுவது என்னவென்றால் விசுவாசிகளின் ஜெபத்தை தேவன் கேட்காமல் போவதில்லை. யெகோவா தேவனுக்கும், பாகாலுக்குமுள்ள வித்யாசத்தை தெளிவாக எலியா 1 இராஜாக்கள் 18'ல் நிரூபித்தான்.  அங்கு உண்மையான தேவன் யார் என்று நிரூபிக்கும் பாகால் தீர்க்கதரிசிகளின் நீண்ட நேர ஜெபத்தை பார்த்து எலியா கேலி  செய்தான். "உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்" (வச. 27). அதன் பிறகு எலியா, அந்த மக்கள் விசுவாசத்திற்கு திரும்பும்படியாக தேவன் அவனுக்கு பதிலளிக்கும்படியாக ஜெபித்தான். அவர் வல்லமை மிகவும் தெளிவாக அங்கு விளங்கினது.

நம் ஜெபங்கள் எலியாவின் ஜெபத்தைபோல் உடனடியாக பதிலளிக்கப்படவில்லை என்றாலும், அவைகளை தேவன் கேட்டுகொண்டியிருக்கிறார்  என்று நிட்சயித்துகொள்வோம் (சங். 34:17). பரிசுத்தவான்களுடைய ஜெபங்களை, பொற்கலசங்களிலுள்ள தூபவர்கங்களைப் போல அவர் நம் ஜெபங்களை பொக்கிஷிமாக கருதுகிறார் (வெளி. 5:8) என்று வாசிக்கிறோம். தேவன் நம் ஜெபங்களை தம்முடைய சொந்த வழியிலும், விலைமதிப்பற்ற ஞானத்தினாலும் தகுந்த சமயத்தில் பதிலளிக்கிறார். பரலோகத்துக்கு அனுப்பின எந்த கடிதமும் தொலைந்துபோவதில்லை.

ஒரு வேளை உணவு

ஆஷ்ட்டன் மற்றும் ஆஸ்டின் சாமுவேல்சன் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்கிற வாஞ்சையுடன் தங்கள் கல்லூரி படிப்பை முடித்தார்கள். இருப்பினும் சபையின் பாரம்பரிய ஊழியத்துக்கு அழைப்பு இன்னும் வரவில்லை என்று இருவரும் உணர்ந்தார்கள். ஆனாலும் உலகத்துக்கு உதவி செய்ய என்ன தடை என்று தேவன் தந்த அறிவையும்,திறன்களையும் கொண்டு பசியினால் வாடும் குழந்தைகளுக்கு உதவ இருவரும் பிரயாசப்பட ஆரம்பித்தார்கள்.

2014ஆம் ஆண்டில் ஒரு உணவகத்தை திறந்தார்கள். அது  மற்ற உணவகத்தை போலில்லாமல் "ஒன்று வாங்கினால், ஒன்று கொடுக்கப்படும் " என்கிற தத்துவத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டது. விற்கும் ஒவ்வொரு  உணவிலிருந்து ஒரு பங்கு அந்த குழந்தைகளுக்கென்று வழங்கப்படும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள அக்குழந்தைகளுக்கு சத்துள்ள ஆகாரம் அளிப்பதற்கு நன்கொடையாக  அந்த தொகை கொடுக்கப்படுகிறது.  

"ஒரு வேளை உணவு" என்கிற அடிப்படையில் பசியாயிருக்கும் குழந்தைகளின் வறுமையை போக்குவதில் பங்குள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பதே இருவரின் இலக்காயிருந்தது.

மத்தேயு 10'ல் மறைவாக்கப்பட்ட  எந்த உவமையையும் இயேசு கூறவில்லை, மிக வெளிப்படையாக தேவபக்தியைக்குறித்து - வார்த்தைகளினால்லல்ல செயல்களினாலே உறுதியாக்கப்படும் என்று போதிக்கிறார் (வச. 37-42). 

சிறியவர்களுக்கு கொடுப்பதே அந்த சாமுவேல் சகோதரர்களுக்கு நோக்கமாயிருக்கிறது. இதுவும் பக்திக்கேதுவான ஒரு செயலாக  கருதப்படுகிறது. சிறியவர்களுக்கு என்று குறிப்பிடும்போது அது வயதுக்குட்பட்டதல்ல. இவ்வுலகம் சிறியதாய் பார்க்கும் எந்த ஆத்துமாவுக்காகவும் நாம் கொடுக்கும்படி கிறிஸ்து நம்மை அழைக்கிறார். பொருளாதாரத்தில் குறைபாடுள்ளவர்கள், கைதிகள், அகதிகள் என்று உலகம் குறையாய் பார்க்கும் எல்லா மனிதர்களுக்கு கொடுக்கும்படி நம்மை அழைக்கிறார். எதை கொடுக்கும்படி அழைக்கிறார் ? ஒரு கலசம் தண்ணீர் இதில் சேருமானால், ஒரு வேளை  உணவும் இதில் உள்ளடங்கும்.