மக்கள் மறந்துவிடுவார்கள்
ஒரு பெண் தன் போதகரிடம் சென்று "ஏன் எப்போதும் ஒரே காரியத்தை குறித்து உபதேசம் செய்து வருகிறார்?" என்று கேட்டாள். அதற்க்கு அவர் "மக்கள் மறந்துவிடுவார்கள்" என்று பதிலளித்தார் .
நாம் மறப்பதற்கு அநேக காரணங்கள் உண்டு - காலம் கடந்துபோவதினால், வயதாகுவதினால், அல்லது அதிக வேலைநிமித்தமாக கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக மற்றவர்களின் பெயர், தேதிகள், முக்கியமான சில தகவல்கள் என்று பல உண்டு. எனது கணவர் அடிக்கடி சொல்வதுண்டு "புதிதாக ஒன்றை நியாபகம் வைத்துகொள்ள வேண்டுமானால், பழையதை ஒன்றை மனதிலிருந்து எடுத்துப்போட வேண்டியதாய் இருக்கிறது".
அந்த போதகர் சொன்னது சரிதான் "ஜனங்கள் மறந்துவிடுவார்கள்". முக்கியமாக தேவன் நமக்கு செய்த காரியங்களை இஸ்ரவேல் மக்களை போல நாமும் மறந்து விடுகிறோம். தேவன் அவர்களுக்கு செய்த பல அற்புதங்களை கண்டும், காலப்போக்கில் தேவன் அவர்களுக்கு அதை நினைவுபடுத்த வேண்டியதாய் இருந்தது. உபாகமம் 8ல் தேவன் அவர்களை தனிமைப்படுத்தி தங்களை பாதுகாத்து வந்ததினால் முழுமையாய் அவரில் சார்ந்திருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறது. வனாந்தரத்தில் அவர்களை பசியினால் சோதித்து மன்னாவை தந்து, அவர்களின் வஸ்திரங்கள் பழையதாய் போகாதபடிக்கு, சர்பங்களுக்கும் தேள்களுக்கும் தப்புவித்து, பாறையிலிருந்து தண்ணீர் தந்தது என அவர் செய்த காரியங்கள் அனைத்தையும் இந்த அதிகாரத்தில் அவர் நினைவுபடுத்தினார்.
தேவனுடைய "உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது" (சங். 100:5) . நம் இனி மறக்கும் சூழ்நிலையில் காணப்பட்டால் இதுவரை அவர் நம் ஜெபங்களுக்கு பதிலளித்ததை நினைவு கூறுவோம். அது முழுமையாக அவர் நமக்களித்த நன்மைகளையும், வாக்குத்தத்தங்களையும் நினைவுபடுத்தும்.
முடிவுகளை தேவனிடம் விட்டு விடுங்கள்
சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கல்லூரியின் கால்பந்து வீரர்களுக்கு இயேசுவைபற்றி பிரசங்கிக்கும்படியாக அழைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் பொதுவாக கொஞ்சம் முரட்டு சுபாவம் உள்ளவர்கள் என்று அனைவரும் அறிவார்கள். அதின் நிமித்தமாக கூட எனது நண்பரையும் அழைத்து சென்றேன். நான் அங்கு அழைக்கப்பட்ட நாளிலே அவர்கள் தங்கள் கோப்பையை வென்ற நாளாக இருந்தது. அதினால் நாங்கள் கூடியிருந்த அறை முழுவதும் ஆரவாரமும் கொண்டாட்டமும் நிறைந்திருந்தது. இதன் நடுவில் மாணவ தலைவன் எழுந்து " கடவுளைக்குறித்து இருவர் உங்களிடம் பகிரும்படி வந்திருக்கிறார்கள்" என்று அறிமுகப்படுத்தினார்.
நடுக்கத்துடன் எழுந்துபோய் தேவ அன்பை குறித்து பகிர துடங்கினேன். மெய்மறந்த ஆர்வத்துடன் அனைவரும் கவனித்தார்கள். முடிவில் சில வெளிப்படையான நேரடி கேள்விகள் என்னிடம் கேட்டார்கள்.நாளடைவில் அங்கு வேதபாடம் நடத்தும்படி தேவன் எங்களை வழிநடத்தினார். அதினிமாதமாக பலர் அங்கு இரட்சிக்கப்பட்டார்கள்.
இதைக்குறித்து நினைக்கும்போது "சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்" (லூக். 10:18) என்கிற வசனம் நினைவுக்கு வந்தது. சமயங்களில் நான் முகம் குப்புற விழுந்து தேவனை அவ்வாறு பணிந்து கொண்டேன்.
லூக்கா 10-ஆம் அதிகாரத்தில், சீஷர்கள் தங்கள் ஊழிய பனியின் சாதனைகளை குறித்து இயேசுவிடம் வந்து அறிக்கையிட்டார்கள். அவர்கள் முழுமையாக பல ஆத்துமாக்கள் ராஜ்யத்தின் ரகசியத்தை அறிந்தார்கள், பல அசுத்த ஆவிகள் துரத்தப்பட்டது, நோய்கள் குணமாக்கப்பட்டது. ஆனால் இவைகளை இயேசுவிடம் அவர்கள் சொல்லும்போது இதற்கு மாறாக பதிலளித்தார் "ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்" (வச. 20).
நாமும் சமயத்தில் வெற்றியினால் சந்தோஷப்பட்டு தோல்வியினால் மனங்கசந்து போகிறோம். தேவன் நமக்கென்று நியமித்த பணியை தொடர்ந்து செய்து அதன் முடிவை அவரிடத்தில் ஒப்புக்கொடுப்போம். உங்கள் பெயர் அவர் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
இனிமையான அறுவடை
நாங்கள் எங்கள் புதிய வீட்டை வாங்கும்போது நிறுவப்பட்ட ஒரு திராட்சை தோட்டத்தையும் அதினோடு சுதந்தரித்துக்கொண்டோம். போதுமான அளவு குடும்பமாக நேரம் செலவளித்து தோட்டத்தை பண்படுத்தவும், நீர்பாய்ச்சவும், அதை பண்படுத்த ஆரம்பித்தோம். இறுதியில் எங்கள் முதல் அறுவடை வந்ததும் ஆர்வத்துடன் ஒரு திராட்சையை பறித்து புசித்தேன். ஏமாற்றமடையும் விதமாய் யாரும் விரும்பாத புளிப்பு நிறைந்த சுவையை உடையதாக இருந்தது. மிகவும் பிரயாசப்பட்டு பராமரித்த தோட்டத்தின் புளிப்பான அறுவடையைக்குறித்து மிகவும் எரிச்சலடைந்தேன்.
ஏசாயா 5ல் தேவனும் இதைபோல் எரிச்சலடைவதை பார்க்கிறோம். இஸ்ரவேல் தேசத்தோடே அவருடைய உறவைக்குறித்து இங்கு விவரிக்கிறது. திராட்சை தோட்டக்காரராக, "அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்"
(ஏசா. 5:2). ஆனால் அவருக்கு திகைப்பூட்டும்படி, அவர் திராட்சை தோட்டமாகிய இஸ்ரவேல் தனது அநீதியும், சுயநலமுமான புளிப்பான பழங்களை தந்தது. தேவன் அந்த தோட்டத்தை அளித்து அதிலே சிலவற்றை மாத்திரம் பிரித்தெடுத்து அவைகளை வெவ்வேறு திசைகளில் சிதரப்பண்ணி, அவைகள் ஒரு நாள் நல்ல கனிகளை தருமென்று எண்ணினர்.
திராட்சைத்தோட்டத்தை மறுபடியும் இயேசு யோவான் சுவிசேஷத்தில் உவமையாக்குவதை பார்க்கிறோம். "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்" (யோவான் 15:5). இதிலே இயேசு, விசுவாசிகளாகிய நாம் கொடியாகவும், திராட்சச்செடியாகிய அவரில் இணைந்திருக்கும்படி நம்மை அழைக்கிறார். நாம் ஜெபத்துடன் ஆவிக்குள்ளவர்களாய் இயேசுவுக்குள் இணைந்திருந்தால் ஆவியின் கனிகளில் முதன்மையும் இனிமையுமான அன்பை நாம் சுலபமாக அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வீட்டை இடித்து போடுங்கள்
அமெரிக்காவில், இடிமான பணியிலுள்ள நபர்கள் ஒரு தவறான வீட்டை இடித்துப்போட்டார்கள். விசாரணையில் அருகிலுள்ள வீட்டின் சொந்தக்காரர் தனது வீடு இடிக்கப்படாமல் காப்பாற்றுவதற்காக தன் முகவரியை பக்கத்து வீட்டில் மாற்றிவிட்டார் என்பது தெரியவந்தது.
ஆனால் இதற்கு எதிர்மாறாக இயேசு தன் சொந்த வீடு இடிக்கப்படும்படியான பணியில் தம்மை அர்பணித்தவராய் இருந்தார். “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்” (வ. 19). இயேசு இந்த வார்த்தைகளை சொன்னதும் அதை கேட்டவர்கள் எவ்வளவு குழப்பம் அடைந்திருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள், குறிப்பாக அவரின் சிஷர்கள். அதை கேட்ட அந்த தலைவர்கள் கோபத்துடன் "இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்" (வச. 20). ஆனால் இயேசுகிறிஸ்து தம் சரீரமாகிய சபையை குறிப்பிடுகிறார் என்று அவர்கள் யாரும் அறியவில்லை.
நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் செய்யும் அக்கிரமங்களுக்காக, அவர் பரிகாரியாகும்பொருட்டு இவ்வுலகத்திற்கு வந்திருந்தார் என்று யாருக்கும் புரியவில்லை.
"மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால்" (வச. 25) என்கிற வசனத்தின் நிமித்தமாக நம்மைவிட தனிப்பட்டமுறையில் அவர் நம்மை நன்றாக அறிந்திருந்தார். அவர் அற்புதங்களை பார்த்து அவரை விசுவாசித்த மனிதர்களை அவர் நம்பி இணங்கவில்லை. அன்று முதல் இன்று வரை அவர் அன்பும் நன்மைகளும் நமக்கு புரியும்படியாக பொறுமையாக வெளிப்படுத்திவருகிறார். சிலநேரங்களில் நாமும் அவர் சொல்லும்போது அவரை புரிந்து கொள்வதில்லை.
நோக்கத்துடன் இளைப்பாறுவது
ரமேஷுக்கு இயேசுகிறிஸ்துவைப்பற்றி மற்றவர்களிடம் பகிருவது மிகவும் பிடித்த ஒரு காரியம். தன்னுடன் வேலை செய்பவர்களிடம் தைரியமாக பேசுவார். ஒவ்வொரு மாதமும், ஒரு வார கடைசியில் தன்னுடைய கிராமத்துக்கு சென்று வீடுவீடாக சுவிசேஷ ஊழியம் செய்து வந்தார். அவருடைய உற்சாகம் மற்றவர்களையும் உற்சாக படுத்தியது.
ரமேஷ் தன்னுடைய எல்லா வார விடுமுறைகளிலும் மற்றும் அநேக மாலை வேளைகளிலும் சுவிசேஷத்தை பிரசங்கித்து வந்தார். தன் மனைவியும் குழந்தைகளும் அவர் இல்லாத சமயங்களில் அவரை தேடினார்கள். ரமேஷ் தன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் போது தேவையில்லாமல் நேரத்தை வீணாக்குகிறார் என்று நினைத்து சோர்வடைந்தார்.அவர் நேரத்தை வீணாய் செலவளிக்காதபடி எப்போதும் முயற்சி செய்தார். அவருக்கு விளையாடவோ அல்லது சிறிய பேச்சுகளுக்கோ இடமில்லை.
மற்றவர்களுக்கு ஏற்பட்ட இந்த இடையூறு காலப்போக்கில் தம்முடைய மனைவியின் உண்மையுள்ள வார்த்தைகள் மூலமாகவும், தன் நண்பர்களின் ஆலோசனையினாலும் மற்றும் சில வித்தியாசமான வசனங்கள் மூலமாய் அவருக்கு உணர்த்தப்பட்டது. நீதிமொழிகள் 30: 24 கூறப்படுகிற அற்பமாக எண்ணப்படுகிற எறும்பு,வெட்டுக்கிளிகள், குழிமுசல்கள் மற்றும் பிரமிப்பூட்டும் விதமாக "தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே" (வச. 28)
இப்படிப்பட்ட சாதாரணமான காரியங்கள் ஏன் வேதாகமத்தில் குறிப்பிட வேண்டும் என ரமேஷ் சிந்தித்தான். அரண்மனையின் சிலந்தியை கவனித்து பார்க்கும் அளவுக்கு நேரம் யாருக்கு இருந்தது?, ஒருவேளை தனது வேலை நேரத்தையும் அதன் இளைப்பாறும் நேரத்தின் முக்கியத்துவத்தை தேவன் உணர்த்தும்படி இதை குறிப்பிட்டு இருக்கலாம் என்று நினைத்தார். சில நேரங்களில் நாம் சிலந்திகளை கவனிப்பதிலும், நம் குழந்தைகளுடன், குடும்பத்துடன் செலவழிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். தேவன் தாமே நமக்கு வேலை செய்வதற்கும், அவருக்கு பணிவிடை செய்வதற்கும், இளைப்பாறுவதற்கும் நேரம் சரியாக ஒதுக்கும்படி ஞானம் தருவராக.