அமெரிக்காவில், இடிமான பணியிலுள்ள நபர்கள் ஒரு தவறான வீட்டை இடித்துப்போட்டார்கள். விசாரணையில் அருகிலுள்ள வீட்டின் சொந்தக்காரர் தனது வீடு இடிக்கப்படாமல் காப்பாற்றுவதற்காக தன் முகவரியை பக்கத்து வீட்டில் மாற்றிவிட்டார் என்பது தெரியவந்தது. 

ஆனால் இதற்கு எதிர்மாறாக இயேசு தன் சொந்த வீடு இடிக்கப்படும்படியான பணியில் தம்மை அர்பணித்தவராய் இருந்தார். “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்” (வ. 19). இயேசு இந்த வார்த்தைகளை சொன்னதும் அதை கேட்டவர்கள் எவ்வளவு குழப்பம் அடைந்திருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள், குறிப்பாக அவரின் சிஷர்கள். அதை கேட்ட அந்த தலைவர்கள் கோபத்துடன் “இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்” (வச. 20). ஆனால் இயேசுகிறிஸ்து தம் சரீரமாகிய சபையை குறிப்பிடுகிறார் என்று அவர்கள் யாரும் அறியவில்லை.

நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் செய்யும் அக்கிரமங்களுக்காக, அவர் பரிகாரியாகும்பொருட்டு இவ்வுலகத்திற்கு வந்திருந்தார் என்று யாருக்கும் புரியவில்லை.

“மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால்” (வச. 25) என்கிற வசனத்தின் நிமித்தமாக நம்மைவிட தனிப்பட்டமுறையில் அவர் நம்மை நன்றாக அறிந்திருந்தார். அவர் அற்புதங்களை பார்த்து அவரை விசுவாசித்த மனிதர்களை அவர் நம்பி இணங்கவில்லை. அன்று முதல் இன்று வரை அவர் அன்பும் நன்மைகளும் நமக்கு புரியும்படியாக பொறுமையாக வெளிப்படுத்திவருகிறார். சிலநேரங்களில் நாமும் அவர் சொல்லும்போது அவரை புரிந்து கொள்வதில்லை.