Archives: நவம்பர் 2020

சமாதானம் பண்ணுகிறவர்கள்

முதலாம் உலக போர் வெடித்தபோது,பிரிட்டிஷ் ஆட்சி நிபுணர் சர். எட்வர்ட் க்ரெய் கூறியது என்னவென்றால் "யுரோப்பிலே  உள்ள விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டன, இனி அவை பிரகாசிப்பதில்லை". க்ரெய் சொன்னது சரிதான். கடைசி போர் முடிந்த பிறகு சுமார் இரண்டு கோடி உயிர்கள் பறிக்கப்பட்டது, அதில் ஒரு கோடி மக்கள் பொது ஜனங்கள். மீதி இருக்கும் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் காயத்துடன் உயிர் பிழைத்தார்கள்.

நம் வாழ்க்கையிலும் பேரழிவுகள் ஏற்படலாம். நம் வீடு, வேலை ஸ்தலம், சபை, நம் வசிக்கும் பகுதிகள் இதைபோல் இருள் நிறைந்து மூடப்படலாம். இதற்காகவே தேவன் உங்களையும் என்னையும் அதன் நடுவில் வைத்து மாற்றம் உண்டு பண்ணும்படி அழைக்கிறார். அவர் தரும் ஞானமானது அந்த மாற்றத்தை ஏற்படுத்த மிகவும் அவசியமானது. இதைக்குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் "பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமும் உள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது"

"நீதி" என்கிற வார்த்தைக்கு அர்த்தம் "நேராக நடப்பது" அல்லது "உறவுகளை சரியாக கைக்கொள்ளுவது". சமாதானம் பண்ணுகிறவர்கள் தனித்துவமானவர்கள். அவர்களுடைய அறுவடையான கனியும் சமாதானமாய் இருக்கிறது. சமாதானம் பண்ணுகிறவர்கள் உடைக்கப்பட்ட உறவுகளை மீட்டுக்  கொள்ளுகிறார்கள். இயேசு சொன்னது போல் " சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத் 5:9)". அவர் ஞானத்தில் சார்ந்திருக்கும் அவர் பிள்ளைகள், அவருடைய சமாதான கருவியாக தேவைப்படும் இடத்தில் வைக்கப்படுகிறார்கள்.

மோதல்களிடம் இருந்து விலகுவது

பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  கல்லறையில் அவருடைய அறிவியல் சொற்பொழிவுகள் ஒன்றையும் குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக தனது நண்பரான ஹென்ரிக் லாரன்சினுடைய "மாறாத அன்பு" என்பதை அவர் கல்லறையின் கல்வெட்டில் எழுதினார்கள். அவருடைய சாந்த குணமும், அவர் மற்றவர்களிடம் சமமாக பழகும் விதத்தையும்  இது நினைவூட்டுகிறது. ஐன்ஸ்டீன் அவரைக்குறித்து "அனைவர்க்கும் ஹென்ரிக் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார், தன்னை மேம்படுத்தும்படி ஏதும் செய்யாமல், தம்மால் முடிந்தவறை மற்றவர்களுக்கு உதவியாக இருக்க பார்த்தார்.

நோபெல் பரிசை வென்ற ஹென்ரிக் ஏற்றத்தாழ்வு இல்லாமல் மற்ற விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து, அரசியல் பாரபட்சம் காணாமல் முதலாம் உலக போர் காலத்தில் வேலை செய்தார். உலக போர் முடிந்த பிறகும் அவர் தம்மை மற்ற விஞ்ஞானிகளுடன் சமரசப்படுத்தி, வேற்றுமையை அகற்றி விஞ்ஞானத்தில் முற்றிலும் தம்மை அர்ப்பணித்தார் என்று ஐன்ஸ்டீன் அவருக்கு சாட்சி கொடுத்திருக்கிறார்.

சபையிலும் நாம் அனைவரும் வேற்றுமை அகற்றி ஒரே மனதாய் சமரசப்படுத்துவது அனைவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். சில சமயங்களில் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் வருவது உண்மை தான், எனினும் நம்மால் முடிந்த வரை சமாதானத்தை கடைபிடிக்க வேண்டும். "சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;" (வச. 26). ஒன்றிணைந்து வாழுவதற்கு "கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்." (வச. 29) 

இறுதியில் பவுல் "சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." (வ 31,32). தேவ சபையை கட்டுவதற்கு நம்மாலே கூடுமான அளவு சர்ச்சைகளை தவிர்த்து விலகியிருப்பது மிகவும் உதவியாக இருக்கும். அதன் மூலம் நாம் தேவனை மகிமை படுத்துகிறோம்.

துணிச்சலான முடிவு

ஜான் ஹார்ப்பரும் தனது ஆறு வயது மகளும் டைட்டானிக் கப்பலில் அடி எடுத்து வைக்கும் போது என்ன நிகழப்போகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஹார்ப்பர் இயேசுவில் அன்புகூருவதிலும், மற்றவர்களுக்கு அவர் அன்பை அறிவிப்பதிலும் ஆர்வமாயிருந்தார். கப்பல் பனிப்பாறையை மோதியவுடன் தனது மகளை ஒரு உயிர்காப்பு படகின் மீது ஏற்றி விட்டு தம்மால் முடிந்தவறை மற்றவர்களை காப்பாற்ற சென்றார். மிதவைச்சட்டையை (லைப் ஜாக்கெட்) மற்றவர்களுக்கு கொடுக்கும் போது "பெண்களையும், குழந்தைகளையும், இரட்சிக்க படாதவர்களையும் படகில் ஏற்றுங்கள் " என்று கூச்சலிட்டுக் கொண்டே சென்றார். ஹார்ப்பர் தம் கடைசி மூச்சு வரை இயேசுவை பற்றி பகிர்ந்து தம் மூச்சை விட்டார்.

இதே  போல் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் ஒருவர் நாம் நித்தியமாய் வாழும்படி தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். இது அவர் ஒரு நாளில் எடுத்த முடிவல்ல. அவர் நம் பாவங்களுக்கு பரிகாரமாக மரிப்பது அவரது லட்சியமாக இருந்தது. யூத தலைவர்களிடம் அவர் பேசும்போது "ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்" (வச. 10:11,15,17,18) என்று பலமுறை கூறினார். இவைகளை அவர் சொன்னது மாத்திரம் அல்லாமல் அதன்படி வாழ்ந்து சிலுவையில் கொடூரமான மரணத்தை ஏற்றுக் கொண்டார். பரிசேயருக்கும், ஜான் ஹர்பெர்க்கும், நமக்கும் "ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (வ.10) என்றார்.

தவறான நம்பிக்கை

சில வருடங்களுக்கு முன்பு எனது மருத்துவர் என்னுடைய உடலின் நிலையை பார்த்து நான் அனுதினமும் உடற்பயிற்சி செய்து எனது உணவு முறையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது வார்த்தைகளின்படி நான் தொடர்ந்து பின்பற்றி வந்தேன். அதின் பலனாக  எனது இடையும் கொழுப்புச்சத்தும் நன்றாக குறைந்து வந்தது. ஆனால்  அதோடு கூட எனது சுய பெருமையும் அதிகரித்தது. மற்றவர்களுடைய சாப்பாடு குறைபாடுகளை பார்த்து அவர்களை தாழ்வாக எண்ணத் தொடங்கினேன்.

நற்பலனை தரும் ஒரு காரியத்தை நாம் கற்றுக் கொண்டதின் நிமித்தம் நம்மை அறியாமலே மற்றவர்களை குறைவாக சிந்திக்க தொடங்குகிறோம். இதினிமித்தம் நம்மை குறித்து பெருமை படுகிறோம். மனித இயல்பானது நாம் நினைத்ததை நன்மையென்றும், அதை நியாயப்படுத்துவதும் வழக்கம் என்று தோன்றுகிறது .

பிலிபியர்களுக்கு பவுல் இந்த செயலை குறித்து எச்சரித்திருக்கிறார். அங்குள்ள பலர் தங்கள் கலாச்சாரத்தை குறித்தும், அவர்கள் மதத்தை குறித்தும், ஜாதியை குறித்தும் பெருமை பாராட்டி கொண்டிருந்தார்கள். பவுலோ தனக்கு பெருமை பாராட்ட பல விஷயங்கள் உண்டென்று "மாம்சத்தின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம் "(வ. 4). எனினும் தேவனை அறிகிற அறிவுக்கு ஒப்பாக குடும்ப பெருமைகளையும் பாரம்பரியத்தையும் அவர் குப்பை என்று எண்ணினார். இயேசுவே நமக்கு விடுதலையும், மீட்பும் அவரைப்போல் மாறவும் பெலன் தருகிறார். எந்த பெருமையும் நமக்கு தேவையில்லை.

பெருமை தவறானது, அதிலும் பொய்யான காரியத்தின் மேல் பெருமை கொள்வதும், நம்பிக்கை வைப்பது அதை விட பரிதபிக்கக்கூடியது. தவறான நம்பிக்கையிலிருந்து வெளியே வந்து நமக்காய் தம்மை கொடுத்த தேவனிடம் நாம் ஐக்கியம் கொள்வோம்.