பதினேழாம் நூற்றாண்டில் மார்ட்டின் ரிங்கிட், ஜெர்மனியிலுள்ள சாக்சனி மாநிலத்தில் போதகராய் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக பணியாற்றி வந்தார். அப்போது ஜெர்மனி முழுவதும் போர் நடந்து வந்தது, அதோடு கூட கொள்ளை நோயும் பரவி கொண்டு வந்தது. அந்த வருடமே அவர் மனைவி அடக்க ஆராதனையை சேர்த்து கிட்டத்தட்ட நான்காயிரம் ஆராதனைகளை நடத்திவைத்தார். பஞ்சத்தின் மிகுதியால் அவர் குடும்பத்திற்கு ஆகாரமும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் அவர் விசுவாசத்தில் உறுதியாய் தரித்திருந்து தேவனுக்கு விடாமல் நன்றி கூறி பிரபல ஆங்கில பாடலான “Now thank we all our God” இயற்றினார்.
தேவனுடைய பிள்ளைகள் எப்போதும் துதி செலுத்தி சோர்வான நேரத்திலோ, எதிராளி அவர்களை கொடுக்கும் போது, எப்போதும் நன்றி செலுத்த வேண்டும் என்று ஏசாயா கூறியதற்கு ரின்கார்ட் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. தேவ நாமத்தை துதித்து அவர் நாமத்தை பிரஸ்தாபம் பண்ணினார்கள் (வச. 4).
நம்மை சுற்றி நன்மைகள் நடக்கும் போது, நமக்கு உண்ண உணவு இருக்கும் போது தேவனுக்கு நன்றி சொல்வது கடினம் அல்ல. ஆனால் நம் நெருங்கிய உறவு நம்மை விட்டு பிரிந்திருக்கும் போதும் நமக்கு உண்ண உணவு இல்லாமல் இருக்கும் போதும் தேவனுக்கு நன்றி செலுத்த முடியுமா?
நாமும் போதகர் ரின்கார்டுடன் சேர்ந்து நம் இருதயத்தை ஒன்றிணைத்து தேவனுக்கு துதிகள் செலுத்தி அவரை கீர்த்தனம் பண்ணுவோம். பூமியெங்கும் அவர் நாமம் அறியப்படக்கடவது (வச. 5).
சிக்கல்களும், பிரச்சனைகளும் வரும்போது அவருக்கு எப்படி நன்றி சொல்வது ? தேவன் தம் பரிசுத்த ஆவி மூலம் எவ்வாறு அச்சூழ்நிலைகளில் அசைவாடுகிறார்?
தகப்பனே, என் வாழ்வில் நீர் செய்த நன்மைகளுக்காக நன்றி. உம் அன்பு முடிவில்லாதது.