கூட்டமாக சுற்றும் வான்கோழிகளை என்னவென்று அழைப்பார்கள் தெரியுமா? அவைகள் “ராஃப்ட்டர்” என்று அழைக்கப்படும்.
ஏன் வான்கோழிகளை குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா ? கடந்த வாரம் எனது விடுமுறையை ஒரு மலை கிராமத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டில் களித்தேன். அந்த வீட்டின் முற்றத்தில் அனுதினமும் உலாவி கொண்டிருந்த வான்கோழிகளை கண்டுகளித்து வந்தேன்.
இதற்கு முன்பதாக வான்கோழிகளை நான் கவனித்தது இல்லை. அவைகள் அந்த முற்றத்தில் கூட்டமாக உலவிக் கொண்டிருக்கும் போது, தங்கள் கால்களால் வேகமாய் மண்ணை தோண்டி அதை கொத்தி கொண்டிருந்தது. அந்த புற்களை பார்க்கும்போது அதில் உணவு ஏதும் இருந்தது போல் தெரியவில்லை. இருப்பினும் அவைகள் மிகவும் ஆர்வமாய் கொத்திக் கொண்டிருந்தன. அந்த கோழிகளை பார்க்கும்போதும் மிகவும் ஆரோக்கியமாகவும் புஷ்டியாகவும் காணப்பட்டது.
அந்த போஷாக்கு நிறைந்த கோழிகளை பார்க்கும்போது இயேசு சொன்ன வார்த்தை ஒன்று எனது நியாபகத்திற்கு வந்தது “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? ” (மத். 6:26). தேவன் அந்த பறவைகளைக் கொண்டு அவர் நமக்கு வைத்திருக்கும் அன்பை நினைவுபடுத்துகிறார். அந்த பறவைகளின் வாழ்க்கை தமக்கு முக்கியமென்றால் நம் வாழ்க்கை அவருக்கு எவ்வளவு முக்கியமாக இருக்கும்?. அதினால் நமது அனுதின தேவைகளை குறித்து நாம் கவலைப்படாமல் அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் முதலாவது தேடும்படி அழைக்கிறார் (வச. 33). இதன் மூலமாக அவர் நமக்காக வைத்திருக்கும் காரியங்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். அந்த சிறிய வான்கோழிகளை அவர் பார்த்துக் கொள்வார் என்றால், நம்மை நிச்சயமாக பார்த்துக்கொள்வார்.
கடைசியாக நீங்கள் மிகவும் வறுத்தப்பட்டுக் கொண்டிருந்த காரியத்தை தேவன் எப்போது உங்களுக்கு வழங்கினார்? அவர் செய்த கடந்த நன்மைகளை நினைப்பதினால் வருங்காலத்தை குறித்த கவலையை எப்படி போக்குகிறது?
தேவனே, சில நேரங்களில் நான் பயத்துடன் என் எதிர்காலத்தை குறித்து கவலைப்படுகிறேன். உம் மீது நம்பிக்கை வைக்க கஷ்டப்படுகிறேன். நீர் என்னை பாதுகாப்பதினால் உமக்கு நன்றி. என் எதிர்கால பயங்களை நான் எடுத்துப்போடும்படி நீர் எனக்கு இதுவரை செய்த நன்மைகளை எனக்கு நினைப்பூட்டும்.