முதிர்வயதுள்ள ராணுவ வீரர் ஒருவர் இருந்தார். அவர் மிகவும் கடின இருதயமுள்ளவர். ஒரு நாள் அவர் நண்பர் அவர் மேல் அக்கறை கொண்டு அவருடைய ஆவிக்குரிய நம்பிக்கையை குறித்து விசாரித்தார். வெறுப்புடன் “அந்த தேவனுக்கு என்னை போல் ஒருவனுக்கு இடம் இருக்காது” என்று சலிப்புடன் கூறினார்.
ஆனால் தேவனோ கடின இருதயம் உள்ளவர்களுக்கும், குற்ற இருதயம் உள்ளவர்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும் இடம் ஒதுக்கி அவர் சமூகத்துக்குள் வந்து சேர்ந்து செழிக்கும் படி அழைக்கிறார். இயேசு தம் சீடர்களை தேர்ந்தெடுக்கும் போது இதை நாம் பார்க்கிறோம். எருசலேம் மக்களால் ஒதுக்கப்பட்ட கலிலேய மீனவர்களை தெரிந்தெடுத்தார், ஏழைகளிடம் இருந்து வரி வசூலித்த மத்தேயுவை தெரிந்தெடுத்தார். ரோம அரசாங்கத்தை எதிர்த்து அமைக்கப்பட்ட ஒரு இயக்கத்தில் இருந்த சீமோனை தெரிந்தெடுத்தார்.
சீமோனை நாம் தனிப்பட்ட முறையில் அறியவில்லை என்றாலும், ரோமருக்கு எதிரான இயக்கத்தில் இருந்தபடியால், இஸ்ரவேலராய் இருந்தும் ரோமர்களுடன் ஆலோசனை செய்து தம் சொந்த மக்களிடமே வரி வசூலித்து வந்த மத்தேயு போன்ற தேசத்துரோகிகளை அவர்கள் பகைத்தார்கள். . இருப்பினும் இயேசு சீமோனையும், மத்தேயுவையும் அழைத்து அவர்களை தம்மோடு சேர்த்துக் கொண்டார்.
நாம் யாரையும் கெட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கக்கூடாது. இயேசு அவர் வார்த்தைகளில் “நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்” (லுக் 5:32). நம்மைப்போல் கடின இருதயமுள்ளவர்களுக்கு அவரிடம் அதிகமாகவே இடம் இருக்கிறது.
தங்கள் வாழ்க்கையை தேவனிடம் அர்ப்பணிக்க மாட்டார்கள் என்று யாரை நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு தேவன் யார் என்றும், தேவன் அவர்களுக்கு வைத்திருக்கும் இடத்தையும் எப்படி அறிமுக படுத்துவீர்கள்?
அன்பின் தேவனே, உம் மேல் விசுவாசம் வைக்கும் யாவருக்கும் உம் இரட்சிப்பை இலவசமாக தருவதற்கு நன்றி.