பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லறையில் அவருடைய அறிவியல் சொற்பொழிவுகள் ஒன்றையும் குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக தனது நண்பரான ஹென்ரிக் லாரன்சினுடைய “மாறாத அன்பு” என்பதை அவர் கல்லறையின் கல்வெட்டில் எழுதினார்கள். அவருடைய சாந்த குணமும், அவர் மற்றவர்களிடம் சமமாக பழகும் விதத்தையும் இது நினைவூட்டுகிறது. ஐன்ஸ்டீன் அவரைக்குறித்து “அனைவர்க்கும் ஹென்ரிக் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார், தன்னை மேம்படுத்தும்படி ஏதும் செய்யாமல், தம்மால் முடிந்தவறை மற்றவர்களுக்கு உதவியாக இருக்க பார்த்தார்.
நோபெல் பரிசை வென்ற ஹென்ரிக் ஏற்றத்தாழ்வு இல்லாமல் மற்ற விஞ்ஞானிகளை ஒன்றிணைத்து, அரசியல் பாரபட்சம் காணாமல் முதலாம் உலக போர் காலத்தில் வேலை செய்தார். உலக போர் முடிந்த பிறகும் அவர் தம்மை மற்ற விஞ்ஞானிகளுடன் சமரசப்படுத்தி, வேற்றுமையை அகற்றி விஞ்ஞானத்தில் முற்றிலும் தம்மை அர்ப்பணித்தார் என்று ஐன்ஸ்டீன் அவருக்கு சாட்சி கொடுத்திருக்கிறார்.
சபையிலும் நாம் அனைவரும் வேற்றுமை அகற்றி ஒரே மனதாய் சமரசப்படுத்துவது அனைவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். சில சமயங்களில் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் வருவது உண்மை தான், எனினும் நம்மால் முடிந்த வரை சமாதானத்தை கடைபிடிக்க வேண்டும். “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;” (வச. 26). ஒன்றிணைந்து வாழுவதற்கு “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.” (வச. 29)
இறுதியில் பவுல் “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (வ 31,32). தேவ சபையை கட்டுவதற்கு நம்மாலே கூடுமான அளவு சர்ச்சைகளை தவிர்த்து விலகியிருப்பது மிகவும் உதவியாக இருக்கும். அதன் மூலம் நாம் தேவனை மகிமை படுத்துகிறோம்.
பிரச்சனைகளை சமாளிப்பதை தேவன் நமக்கு எப்படி கற்றுத்தருகிறார்? அவரையும் சபையையும் காணப்படுத்தும்படி நாம் எப்படி பிரச்சனைகளை விட்டு விலக வேண்டும்?
அன்பின் தேவனே, பிரச்சனைகளை கைக்கொள்ளும்படி, உம் பக்கம் திரும்ப எனக்கு ஆலோசனை சொல்லும்.