சில வருடங்களுக்கு முன்பு எனது மருத்துவர் என்னுடைய உடலின் நிலையை பார்த்து நான் அனுதினமும் உடற்பயிற்சி செய்து எனது உணவு முறையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது வார்த்தைகளின்படி நான் தொடர்ந்து பின்பற்றி வந்தேன். அதின் பலனாக  எனது இடையும் கொழுப்புச்சத்தும் நன்றாக குறைந்து வந்தது. ஆனால்  அதோடு கூட எனது சுய பெருமையும் அதிகரித்தது. மற்றவர்களுடைய சாப்பாடு குறைபாடுகளை பார்த்து அவர்களை தாழ்வாக எண்ணத் தொடங்கினேன்.

நற்பலனை தரும் ஒரு காரியத்தை நாம் கற்றுக் கொண்டதின் நிமித்தம் நம்மை அறியாமலே மற்றவர்களை குறைவாக சிந்திக்க தொடங்குகிறோம். இதினிமித்தம் நம்மை குறித்து பெருமை படுகிறோம். மனித இயல்பானது நாம் நினைத்ததை நன்மையென்றும், அதை நியாயப்படுத்துவதும் வழக்கம் என்று தோன்றுகிறது .

பிலிபியர்களுக்கு பவுல் இந்த செயலை குறித்து எச்சரித்திருக்கிறார். அங்குள்ள பலர் தங்கள் கலாச்சாரத்தை குறித்தும், அவர்கள் மதத்தை குறித்தும், ஜாதியை குறித்தும் பெருமை பாராட்டி கொண்டிருந்தார்கள். பவுலோ தனக்கு பெருமை பாராட்ட பல விஷயங்கள் உண்டென்று “மாம்சத்தின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டுமானால் நானும் வைக்கலாம் “(வ. 4). எனினும் தேவனை அறிகிற அறிவுக்கு ஒப்பாக குடும்ப பெருமைகளையும் பாரம்பரியத்தையும் அவர் குப்பை என்று எண்ணினார். இயேசுவே நமக்கு விடுதலையும், மீட்பும் அவரைப்போல் மாறவும் பெலன் தருகிறார். எந்த பெருமையும் நமக்கு தேவையில்லை.

பெருமை தவறானது, அதிலும் பொய்யான காரியத்தின் மேல் பெருமை கொள்வதும், நம்பிக்கை வைப்பது அதை விட பரிதபிக்கக்கூடியது. தவறான நம்பிக்கையிலிருந்து வெளியே வந்து நமக்காய் தம்மை கொடுத்த தேவனிடம் நாம் ஐக்கியம் கொள்வோம்.