ஒரு இளம் பள்ளி மாணவன் தனது ஓட்ட பந்தயத்திற்கு தன்னை தயார் படுத்தி கொண்டிருக்கும் வேளையில். அவனது வீடு தீவிபத்தினால் நாசமானது. அதினிமித்தம் அவனால் அந்த பந்தயத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அவன் இந்த பந்தயத்தில் பங்கு பெறாததினால் அவனுடைய நாலு வருடபயிற்சி வீணாக போய்விட்டது. அதுமட்டுமல்ல இதில் பங்கு பெறவில்லையென்றால் அடுத்த கட்டமான மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்குபெற முடியாது.
மாவட்ட உடற்பயிற்சி கழகம் அந்த மாணவனின் நிலைமையை கேள்விப்பட்டு, ஆலோசனை செய்து அவனுக்கென்று தனியாக ஒரு தேர்ச்சி ஒட்டப்பந்தயத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் இந்த தேர்ச்சியானது சற்று கடினமான மைதானத்தில் ஓடவேண்டியதாய் இருந்தது. அதுமாத்திரமல்ல தன்னுடைய ஓட்டப்பந்தய காலணி தீயில் அழிந்துபோனதால் சாதாரண காலணிகளை கொண்டு ஓடவேண்டியதாய் இருந்தது. ஆச்சரியப்படும் விதமாய் பந்தயநாளிலே அவனோடுகூட ஓடும் நபர்கள் ஒரு புதிய ஓட்டப்பந்தய காலணிகளை அவங்கென்று கொடுத்தார்கள்.
அந்த போட்டியாளர்களுக்கு காலணிகளை எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அவனுக்கு காலனி இல்லாததை அவர்களுக்கு ஆதாயமாக எடுத்திறுக்கலாம். ஆனால் அவர்களோ அன்போடு உதவிசெய்தார்கள். பவுல் நம்மையும் அதைபோல் தயவென்னும் நற்குணம் உடையவர்களாய் “அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்” (கலா 5:13) என்று வலியுறுத்துகிறார். நாம் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல் இருக்கும்படி பரிசுத்த ஆவியை சார்ந்திருப்போமானால் நம்மை சுற்றியிருப்பவர்களிடம் அன்பாய் இருக்கலாம்.
ஆவியின் கனிகளை உபயோகித்து மற்றவர்களை எப்படி உபசரிக்கலாம்? உங்களை சுற்றி இருக்கும் நபர்கள்மேல் எப்படி அன்புகூரலாம்?
அன்பின் தேவனே, எனது ஆசை எப்போதும் என்னை குறித்ததாகவே இருக்கிறது. உமக்காய் மற்றவர்களுக்கு அன்புடன் உதவும்படியாக என்னை மாற்றும்.