ஆசிரியராகிய நான் எனது மாணவர்களை கள பயணதிற்காக ஒரு தடை பயிற்சிக்காக ஏற்பாடு செய்திருந்தேன். அங்குள்ள பல விளையாட்டுகளில் ஒன்றாக சுவர் ஏறுவதும் இருந்தது. அணைத்து மாணவர்களும் அதிலே பங்குபெறும்படியாக உற்சாகத்துடன் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு ஏறினார்கள். அந்த எட்டு அடி சுவரை ஏறி சென்ற ஒவ்வொரு மாணவர்களும் பின் வரும் மாணவர்களை பின்னிட்டு பார்க்காதபடிக்கு அந்த கயிற்றின்மேல் முழு நம்பிக்கை வைத்து ஏற ஊக்குவித்தார்கள். ஆனால் அதிலே ஒரு மாணவிக்கு மட்டும் அந்த கயிற்றின்மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் மேலும் நமிக்கையில்லாமல் இருந்தது. “என்னாலே இதை செய்யமுடியாது என்று” நம்பிக்கையில்லாமல் பயத்துடன் கூறினாள். ஆனால் மற்ற மாணவர்கள் அவளை உற்சாகப்படுத்தி ஊக்குவித்ததினால் அவள் அந்த கையிற்றின்மேல் நம்பிக்கை வைத்து வெற்றிகரமாய் ஏறினாள்.
நாம் கடக்க முடியாது என்று நாம் நினைக்கும் பிரச்சினைகள் நமக்கு முன் வரும் போது, அதின் கூடவே சந்தேகங்களை ஏற்படுத்தும் பயமும் பாதுகாப்பற்ற சிந்தனைகளும் வரும். ஆனால் இவைகளின் நடுவே நம்மை திடப்படுத்தும் தேவனுடைய மகிமையும், நன்மையையும், சத்தியமும் பலமான காப்புகவசமாக விசுவாசத்தில் அடங்கும். இந்த நம்பிக்கையின் உறுதி நம் பழைய ஏற்பாட்டின் முன்னோர்களுக்கு தைரியத்தை உண்டாக்கியது. இப்பேர்ப்பட்ட நம்பிக்கை நாம் சிறிய நுணுக்கமான காரியங்கள் மேல் கவனம் செலுத்தாமல் தேவனுடைய நித்திய திட்டத்தைப்பற்றி சிந்திக்க கற்பிக்கிறது (எபி 11:1-13, 39). வரும் காலங்களில் நாம் பிரச்சனைகளை சந்திக்கும் விதத்தை மாற்றிக்கொண்டு, நமக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட மேலான நித்திய கண்ணோட்டத்தில் காண்போம்
(வச. 13-16). அடிக்கடி நாம் இதைப் போன்ற சூழ்நிலைகளை தனியாக சந்திக்கும்போது முழு நம்பிக்கையோடு ஆர்வத்துடன் அவரை தேடுவோம்.
வாழ்வின் கடினமான பாதைகளையும், செங்குத்தான படிகளை கடக்கும்போது தேவன் நம்மை விடுவிப்பார் என்கிற நம்பிக்கை நமக்கு அற்றுப்போகலாம். ஆனால் அவரோ எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்கிற நிச்சயத்தோடு, விசுவாசமாகிய பலத்த கயிற்றை பிடித்துக்கொள்வோம். கடக்க முடியாதென்று நினைத்த பிரெச்சனைகளை கடக்கலாம்.
சாத்தியமில்லாத காரியங்களை எப்படி தைரியமாக எதிர்கொள்ளலாம் ? அந்த காரியங்களை வெற்றிகரமாக முடித்தபின் எப்படி உணருவீர்கள்?
தேவனே, எங்களின் விசுவாசத்தின் ஆரம்பமும் முடிவுமாய் நீர் இருப்பதற்கு நன்றி, ஏனெனில் அதுவே எங்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் உம் மேல் முழு நம்பிக்கை வைக்கும்படி செய்கிறது.