என்னுடைய பேத்திகள் இருவரும் தங்கள் பள்ளியில் “ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்” என்கிற நாடகத்தில் நடிப்பதின் நிமித்தம் மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்டார்கள். இருவரின் நோக்கமெல்லாம் அதின் கதாநாயகியான ஆலிஸாக நடிக்க வேண்டும் என்பது தான். ஆனால் நாடகத்தில் ஓரமாக பூக்களாக நிற்கும்படியாக அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இருப்பினும் இருவரும் தங்கள் தோழிக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர்களுடைய நண்பர்களுக்காக சந்தோஷப்படுவதிலும் அதில் மற்றவர்களிடம் பகிருவதிலும் மிகவும் ஆனந்தமடைந்தார்கள்.
சபையான சரீரத்தில் நாம் மற்றவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. ஒவ்வொரு சபையிலும் முக்கிய அங்கத்தினராக நியமிக்கப்பட்ட சிலர் உண்டு. ஆனால் அந்த சபைக்கும் பூக்களாய் சிறிய மற்றும் முக்கியமான பங்கை செய்பவர்கள் மிகவும் அவசியமாக தேவை. நமக்கு பிடித்த பங்கு மற்றவர்களுக்கு கிடைத்தால் அவர்களை ஊக்குவித்து, நமக்கு தேவன் தந்த பங்கை ஆர்வத்துடன் நிறைவேற்றுவோம்.
மற்றவர்களை ஊக்குவித்து உதவிசெய்வதும் தேவன் மேல் அன்பு செலுத்தும் ஒரு வழி. எபிரெயர் 6:10ல் சொல்வது போல் “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே”. தேவன் தந்த எந்த பரிசும் மிகவும் முக்கியமானது: “அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்” (1 பேது. 4:10).
சபையாக மற்றவர்களை ஊக்குவிப்பதிலும், தேவன் அருளிய வரத்தின்படி அவரவர் தன் வேலையை விடாமுயற்சியுடன் செய்யும் ஒரு சபையை சற்று நினைத்துப் பாருங்கள். அதுவே மிகவும் சந்தோஷம் நிறைந்ததாகவும், உற்சாகமூட்டும் சபையாக இருக்கும்.
நீங்கள் எதிர்பார்த்த வேலையோ, ஒரு பதவியோ, சிறிய பணியோ மற்ற யாருக்காவது கிடைத்ததுண்டா ? இருப்பினும் நீங்கள் அவர்களுக்கு உதவியது உண்டா ? மற்றவர்களுக்கு உதவி செய்யும்படி தேவன் நமக்களித்த பணிக்காக அவருக்கு நன்றி சொல்வது ஏன் நன்மையாக இருக்கிறது?
சர்வ வல்லமையுள்ளவரே, மற்றவர்களுடைய பணியில் நான் என் கண்களை வைக்காதபடி, உம்முடைய பரிசுத்த அழைப்பின்படி நான் உம்மை சேவிக்க உதவி செய்யும். உமக்காய் ஊழியம் செய்யும் மற்றவர்களை நான் ஊக்குவிக்கும்படி கிருபை தாரும்.