நாங்கள் எங்கள் புதிய வீட்டை வாங்கும்போது நிறுவப்பட்ட ஒரு திராட்சை தோட்டத்தையும் அதினோடு சுதந்தரித்துக்கொண்டோம். போதுமான அளவு குடும்பமாக நேரம் செலவளித்து தோட்டத்தை பண்படுத்தவும், நீர்பாய்ச்சவும், அதை பண்படுத்த ஆரம்பித்தோம். இறுதியில் எங்கள் முதல் அறுவடை வந்ததும் ஆர்வத்துடன் ஒரு திராட்சையை பறித்து புசித்தேன். ஏமாற்றமடையும் விதமாய் யாரும் விரும்பாத புளிப்பு நிறைந்த சுவையை உடையதாக இருந்தது. மிகவும் பிரயாசப்பட்டு பராமரித்த தோட்டத்தின் புளிப்பான அறுவடையைக்குறித்து மிகவும் எரிச்சலடைந்தேன்.
ஏசாயா 5ல் தேவனும் இதைபோல் எரிச்சலடைவதை பார்க்கிறோம். இஸ்ரவேல் தேசத்தோடே அவருடைய உறவைக்குறித்து இங்கு விவரிக்கிறது. திராட்சை தோட்டக்காரராக, “அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்”
(ஏசா. 5:2). ஆனால் அவருக்கு திகைப்பூட்டும்படி, அவர் திராட்சை தோட்டமாகிய இஸ்ரவேல் தனது அநீதியும், சுயநலமுமான புளிப்பான பழங்களை தந்தது. தேவன் அந்த தோட்டத்தை அளித்து அதிலே சிலவற்றை மாத்திரம் பிரித்தெடுத்து அவைகளை வெவ்வேறு திசைகளில் சிதரப்பண்ணி, அவைகள் ஒரு நாள் நல்ல கனிகளை தருமென்று எண்ணினர்.
திராட்சைத்தோட்டத்தை மறுபடியும் இயேசு யோவான் சுவிசேஷத்தில் உவமையாக்குவதை பார்க்கிறோம். “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்” (யோவான் 15:5). இதிலே இயேசு, விசுவாசிகளாகிய நாம் கொடியாகவும், திராட்சச்செடியாகிய அவரில் இணைந்திருக்கும்படி நம்மை அழைக்கிறார். நாம் ஜெபத்துடன் ஆவிக்குள்ளவர்களாய் இயேசுவுக்குள் இணைந்திருந்தால் ஆவியின் கனிகளில் முதன்மையும் இனிமையுமான அன்பை நாம் சுலபமாக அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இயேசு கிறிஸ்துவுடன் ஒன்றிணைந்திருப்பது உங்கள் வாழ்க்கையின் அன்பை எவ்வாறு அதிகரிக்கிறது ? அவரில் இணைந்திருப்பதால் பெற்றுக்கொள்ளும் மற்ற ஆசீர்வாதங்கள் யாவை?
இயேசுவே உம்மில் நிலைத்திருப்பதால் நான் என் வாழ்வில் நல்ல கனி தரும்படி செய்வதற்க்காய் நன்றி. உம் சித்தம் என் வாழ்வில் இன்னும் பொழிந்து அன்பென்னும் கனியை அறுவடை செய்யும்.