ரமேஷுக்கு இயேசுகிறிஸ்துவைப்பற்றி மற்றவர்களிடம் பகிருவது மிகவும் பிடித்த ஒரு காரியம். தன்னுடன் வேலை செய்பவர்களிடம் தைரியமாக பேசுவார். ஒவ்வொரு மாதமும், ஒரு வார கடைசியில் தன்னுடைய கிராமத்துக்கு சென்று வீடுவீடாக சுவிசேஷ ஊழியம் செய்து வந்தார். அவருடைய உற்சாகம் மற்றவர்களையும் உற்சாக படுத்தியது.
ரமேஷ் தன்னுடைய எல்லா வார விடுமுறைகளிலும் மற்றும் அநேக மாலை வேளைகளிலும் சுவிசேஷத்தை பிரசங்கித்து வந்தார். தன் மனைவியும் குழந்தைகளும் அவர் இல்லாத சமயங்களில் அவரை தேடினார்கள். ரமேஷ் தன் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் போது தேவையில்லாமல் நேரத்தை வீணாக்குகிறார் என்று நினைத்து சோர்வடைந்தார்.அவர் நேரத்தை வீணாய் செலவளிக்காதபடி எப்போதும் முயற்சி செய்தார். அவருக்கு விளையாடவோ அல்லது சிறிய பேச்சுகளுக்கோ இடமில்லை.
மற்றவர்களுக்கு ஏற்பட்ட இந்த இடையூறு காலப்போக்கில் தம்முடைய மனைவியின் உண்மையுள்ள வார்த்தைகள் மூலமாகவும், தன் நண்பர்களின் ஆலோசனையினாலும் மற்றும் சில வித்தியாசமான வசனங்கள் மூலமாய் அவருக்கு உணர்த்தப்பட்டது. நீதிமொழிகள் 30: 24 கூறப்படுகிற அற்பமாக எண்ணப்படுகிற எறும்பு,வெட்டுக்கிளிகள், குழிமுசல்கள் மற்றும் பிரமிப்பூட்டும் விதமாக “தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே” (வச. 28)
இப்படிப்பட்ட சாதாரணமான காரியங்கள் ஏன் வேதாகமத்தில் குறிப்பிட வேண்டும் என ரமேஷ் சிந்தித்தான். அரண்மனையின் சிலந்தியை கவனித்து பார்க்கும் அளவுக்கு நேரம் யாருக்கு இருந்தது?, ஒருவேளை தனது வேலை நேரத்தையும் அதன் இளைப்பாறும் நேரத்தின் முக்கியத்துவத்தை தேவன் உணர்த்தும்படி இதை குறிப்பிட்டு இருக்கலாம் என்று நினைத்தார். சில நேரங்களில் நாம் சிலந்திகளை கவனிப்பதிலும், நம் குழந்தைகளுடன், குடும்பத்துடன் செலவழிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். தேவன் தாமே நமக்கு வேலை செய்வதற்கும், அவருக்கு பணிவிடை செய்வதற்கும், இளைப்பாறுவதற்கும் நேரம் சரியாக ஒதுக்கும்படி ஞானம் தருவராக.
உங்கள் வேலை நேரத்தையும, ஓய்வெடுக்கும் நேரத்தையும் எவ்வாறு சமநிலையாக கையாளுகிறீர்கள்? உங்களுக்கு நெருங்கியவர்களை நீங்கள் அவர்களை நேசிப்பதை சொல்லுவீர்களா?
தேவனே உம் அன்பு என்னை உபயோகமுள்ள வேலைக்காரனாகவும், தேவையுள்ள இளைப்பாறுதலையும் கற்று தருகிறது.