டோனி ரிநாயுடோ வேர்ல்ட் விஷன் ஆஸ்திரேலியாவின் “மரங்களுடன் மெல்ல பேசுபவர்” அழைக்கப்பட்டார். அவர் ஒரு மிஷனரியாகவும், வேளாண்மை விஞ்ஞானியாகவும் பணியாற்றி வந்தார். 30 வருடமாக இயேசுகிறிஸ்துவை பற்றி பகிருவதிலும், அழிந்துவரும் காடுகளான ஆப்பிரிக்காவின் சாஹில் என்கிற சஹாராவின் தெற்கே உள்ளவைகளை காப்பதில் தம்மை ஈடுபடுத்திவந்தார்.
காலப்போக்கில் புதர் செடிகள் உறங்கும் மரங்கள் என்று ரிநாயுடோ கண்டுபிடித்தபின்பு, அப்புதர்களை பயன்படுத்தவும், அதை சுத்தம்பணி நீர்பாய்ச்ச ஆரம்பித்தார். இவரின் இச்செயல் மூலம் பல்லாயிரம் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டார்கள். அந்த புதர்களை காப்பதின் மூலம் மணல் அரிப்பினால் அவர்களின் அழியும் விவசாய நிலங்கள் காக்கப்பட்டன. இதன் விளைவாக நைகரிலுள்ள விவசாயிகள் தங்கள் வருமானத்தை இரு மடங்கு அதிகரித்தார்கள். அதுமாத்திரம் அல்ல ஒரு வருடத்தில் 23 லட்சம் மக்களுக்கு அதிகமாக ஆகாரம் அளிக்க முடிந்தது.
இந்த விவசாயத்தை சிருஷ்டித்த இயேசு, இதே போன்ற விவசாய தந்திரோபாயங்களை பற்றி யோவான் 15ல் ” நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்” என்றுகூறுகிறார்
நம் ஆத்துமா உலர்ந்து போகாத படி தேவன் அனுதினமும் சுத்திகரிக்கிறார். வசனம் சொல்லுகிறதுபோல் அவருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருந்தாள் “அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1: 3). அவருக்குள் நாம் ஆழமாய் நடப்பட்டால் நம் வாழ்வு புதுப்பிக்கப்பட்டு பசுமையாயிருக்கும்.
தேவன் உங்கள் ஆத்துமாவின் எந்த பகுதியை எவ்வாறு பண்படுத்தி வருகிறார்? எப்படி தேவனுடைய வார்த்தையில் பிரியமாயிருப்பது?
திராட்சை தோட்டக்காரராகிய எங்கள் தகப்பனே , வளர்ச்சி குறைந்த எங்கள் பாகங்களை உம் பண்படுத்துதலுக்கு அர்பணிக்கிறோம், நீர் அதற்கு நீர்பாய்த்து வறண்ட நிலத்தை பசுமையாகி உம்மிலே எங்களை விருத்தியடைய செய்யும் .