கடும் எதிர்வினை
கடினமான வார்த்தைகள் நம்மை புண்படுத்தும். விருதுகள் பெற்ற நூலாசிரியாகிய என்னுடைய நண்பர் ஒருவர் விமர்சனங்களுக்கு எப்படி பதில் அளிப்பது என்று போராடிக் கொண்டிருந்தார் . அவருடைய புதிய நூல் ஐந்து நட்சத்திர மதிப்பெண்கள் பெற்று அவருக்கு புதியதொரு விருது பெற்றிருந்தது. ஆனால் மிகவும் மதிக்கப்படும் பத்திரிகை ஒன்று அந்த நூல் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது என்று புகழ்ந்தாலும் அதை கடினமாக விமர்சித்தது. அவர் மற்ற நண்பர்களிடம் "எப்படி இதற்கு பதில் அளிப்பது?" என்று கேட்டார்.
ஒருத்தர் கூறினார் “விட்டுவிடு”. நானும் என்னுடைய பத்திரிக்கை எழுதும் அனுபவங்களிலிருந்து இப்படியான குறை கூறும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து எழுத வேண்டும்மென்று சில அறிவுரைகளைச் கூறினேன்.
இறுதியில், மிக சிறந்த அறிவுரைகளை கொடுக்க கூடிய வேதாகமம், கடுமையான விமர்சனங்களுக்கு எப்படி பதில் அளிப்பது என்பதை பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்க முனைந்தேன். யாக்கோபின் புத்தகம் இவ்வாறு அறிவுரைக்கிறது ,” யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்” (1:19). அப்போஸ்தலர் பவுல் “ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்” (ரோம. 12:16) என்று ஆலோசனை தருகிறார்
நீதிமொழிகள் புத்தகத்தில் ஒரு முழு அதிகாரமே சச்சரவுகளுக்கு எப்படி பதில் அளிப்பதென்று கூடுதல் ஞானத்தை வழங்குகிறது : “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்”(15:1). “நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். (15:18). “கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்” (15:32). இவ்வித ஞானத்தை மனதில் கொண்டு, என் நண்பனைபோல, தேவனுடைய ஒத்தாசையால் நம் நாவுகளை அடக்குவோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஞானம் அறிவுறுத்துவது “கர்த்தருக்குப் பயப்படு” ஏனென்றால் “மேன்மைக்கு முன்னானது தாழ்மை” (15:33).
பிடிவாத குணம்
டாக்டர் சியூஸ் இன் ஒரு விசித்திரமான கதைகளில் வடக்கே போகும் கோடாரி தெற்க்கே போகும் கோடரி ஒரு சம புல்வெளியில் சந்திப்பதை பற்றி சொல்கிறார். இரண்டும் நேருக்கு நேர் சந்திக்கும் போது இரு கோடாரியும் ஒதுங்கிப்போவதாக இல்லை. முதலாவது கோடாரி கோபத்துடன் “உலகமே நின்றாலும் நான் நகரப்போவதில்லை என்று ஆணை இடுகிறது. (ஆனால் உலகம் குழப்பமடையாமல் முன் நகருகிறது; அவர்களை சுற்றி ஒரு நெடுஞ்சாலை உருவாக்குகிறது)
இந்த கதை மனிதனுடைய துல்லிய குணத்தை நன்றாக விளக்குகிறது. ‘நாம்தான் சரி’ என்ற ஒரு உணர்வு நமக்குள் இருக்கிறது. நமக்கு கேடு வரும் என்றாலும் அந்த உணர்வை விடுவதற்க்கு நமக்கு மனதில்லை.
ஆனால் நல்ல வேளை, இறைவன் கடினமான இதயங்களை மென்மை படுத்துகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் இதை அறிந்திருந்தார். பிலிப்பிய சபையிலே இருவருக்கு சச்சரவு வந்தபோது பவுல் அவர்களுக்கு அறிவுரை சொல்கிறார் (பிலிப்பியர் 4:2): “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” (பிலிப்பியர் 2:5). பின்னர்; “சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்ட என் உடன்வேலையாட்களாகிய அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி” (பிலிப்பியர் 4:3) என வேண்டிக்கொண்டார். சமாதானம் அடைவதும், ஞானம் உள்ள நடு பாதையை தேர்ந்தெடுப்பதும் ஒரு கூட்டு முயற்சி போல.
சில நேரங்களில் நாம் உறுதியாக இருக்க வேண்டியதுதான். ஆனால் கிறிஸ்துவினுடைய அணுகுமுறை, விட்டுக்கொடுக்காத மனப்பான்மையை விட மிக வித்தியாசமாகவே இருக்கும். வாழ்க்கையில் பல காரியங்களுக்காக நாம் சண்டை போட அவசியமே இல்லை. சின்னஞ் சிறு காரியங்களுக்காக நாம் மற்றவர்களோடு மோதிக்கொள்வோமானால் ஒருவரையொருவர் அழித்துக்கொள்வோம் (கலாத்தியர் 5:15)
நாம் நம்முடைய பெருமையை சற்று விழுங்கி, ஞான அறிவுரைபடி நடந்தால் ஒற்றுமையாக வாழலாம்.
நாம் ஒரு பொருட்டா?
சில காலங்களாக நான் ஒரு இள வயதான மனிதனிடம் கடிதங்கள் பரிமாறிக் கொண்டு இருந்தேன். விசுவாசத்தை பற்றி ஆழமாக சிந்திப்பவன். ஒருமுறை அவன் எழுதினான்: “நாம் வரலாற்றின் காலவரிசையில் இவ்வளவு சிறியவர்களாக இருக்கிறோமே! நாம் ஒரு பொருட்டா?”
இஸ்ரவேலுடைய தீர்க்கதரிசியான மோசே இந்த கேள்வியை ஒத்துக் கொள்வார்: “எங்கள் ஆயுசுநாட்கள் சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்” (சங்கீதம் 90:10). நம்முடைய குறுகிய வாழ்க்கையானது நம்மை வருத்தத்திற்குள்ளாக்கி, நாம் ஒரு பொருட்டா என்று எண்ணச் செய்யும்.
ஆம், நாம் ஒரு பொருட்டு தான். ஏனென்றால் நாம் தேவனால் ஆழமாக, நித்தியமாக நேசிக்கப் படுகிறோம். மோசே இந்த சங்கீதத்தில் ஜெபிக்கிறார்: “எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்” (சங்கீதம் 90:14). நாம் முக்கியம் தான், ஏனென்றால் நாம் இறைவனுக்கு கருத்தாக இருக்கிறோம்.
மற்றும், மற்றவர்களுக்கு நாம் தேவனின் அன்பை காண்பிக்க கூடியவர்களாக இருக்கிறது, நாம் ஒரு பொருட்டு தான் என்று வெளிப்படுத்துகிறது. நம்முடைய வாழ்க்கை குறுகியதாக இருந்தாலும் அது அர்த்தமற்றது அல்ல; தேவனின் அன்பை நாம் மற்றவருக்கு வைத்து போகக்கூடும். இந்த உலகில் நாம் நன்றாக சம்பாதித்து, ஓய்வு பெற்று சுகமாக வாழ்வதற்காக அல்ல. தேவனுடைய அன்பின் மூலம் அவரை மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவே.
இன்னுமாக, இந்த வாழ்வு ஒரு குமிழி போல் இருந்தாலும், நாம் நித்திய வாசிகள். இயேசு மரித்ததிலிருந்து எழுந்ததினால் நாமும் நிச்சயமாக நித்தியத்தில் வாழ்வோம். ஆகவே தான் மோசே “காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்” என்று வரியினால் நம்மை ஊக்குவித்தார். அந்த ‘காலையிலே’ நாம் எப்பொழுதும் வாழ்வோம். அன்பு கூறுவோம். அன்பினால் மூழ்கடிக்கப்படுவோம். இந்த காரியம் நாம் முக்கியம் தான் என்று உணர்த்தவில்லை என்றால் வேறு என்னதான் அப்படி செய்ய கூடும்?
மீண்டும் நீ அவளைக் காண்பாய்
ஒரு நாற்காலியை இழுத்து ஜாக்கி (ஜாகுடியே) படுக்கையின் பக்கத்தில் நான் அமர்ந்தபோது அந்த அறை மங்கலும் நிசப்தமுமாய் இருந்தது. மூன்று வருடங்களாக புற்று நோயுடன் போராடும் முன்னதாக ஜாக்கி மிகவும் துடிதுடிப்பான பெண். அந்த காட்சியை என் மனக்கண்ணால் பார்க்க முடிந்தது: மலர்ந்த முகம், புன்னகை ததும்பும் தோற்றம். இப்பொழுதோ அவள் அசையாமலும பேசாமலும் அந்த மருத்துவ மனையில் படுத்திருந்தாள்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சில வேத பகுதிகளை வாசிக்க நான் முடிவு செய்தேன். என்னுடைய வேதாகமத்தை எடுத்து 1 கொரிந்தியர் நிருபத்தில் ஒரு பகுதியை வாசிக்க ஆரம்பித்தேன்.
பிறகு நான் வெளியே வந்து என்னுடைய வாகனத்தில் தனிமையிலே உணர்ச்சிவசமாக சில நேரங்கள் செலவிட்ட பிறகு, எனக்கு ஒரு காரியம் மனதிற்கு வந்தது, அது என் கண்ணீரை குறைத்தது. அதாவது நான் அவளை மறுபடியும் பார்ப்பேன். என்னுடைய வருத்தத்தின் மிகுதியில் இறப்பு என்பது விசுவாசிகளுக்கு ஒரு தற்காலிகம் மட்டுமே (1 கொரிந்தியர் 15:21-22) என்பதை மறந்துவிட்டேன். நான் ஜாக்கியை மீண்டும் சந்திப்பேன் என்று அறிவேன் ஏனென்றால் எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட இயேசு மறித்து உயிர்த்தெழுந்தார் என்று நாங்கள் நம்பினோம். இயேசு மரித்தோரிலிருந்து எழுந்து உயிர்த்தெழுந்ததினால் மரணம் விசுவாசிகளை பிரிக்கும் வல்லமையை இழந்துவிட்டது. நாம் இறந்த பின்பு மோட்சத்தில் தேவனோடு, எல்லா ஆவிக்குள்ளான சகோதர சகோதரிகளோடு நித்திய காலமாக இருப்போம்.
இயேசு இன்றைக்கும் உயிரோடு இருக்கிறதினாலே, அவரை விசுவாசிப்பவர்கள் இழப்பிலும் துக்கத்திலும் கூட நம்பிக்கையுடையவர்களாய் இருப்பார்கள். மரணம் சிலுவையில் ஜெயமாக விழுங்கப்பட்டது.
முடிவிலிருந்து துவங்கு
நான் சிறுவனாக இருக்கும்பது “நீ பெரியவனாகும் போது யாராக இருக்க விரும்புகிறாய்” என்று அநேகர் கேட்பார்கள். ஒவ்வொரு முறையும் என் பதில் மாறும்: மருத்துவர், தீயணைப்பு படையினர், ஊழியக்காரர், விஞ்ஞானி அல்லது தொலைக்காட்சி நடிகர். இப்பொழுது நான்கு குழந்தைகளுக்கு தகப்பனாகியபின், இவ்விதமான கேள்வி எவ்வளவு கடினமாக காணப்படும் என்று நான் உணருகிறேன். சில சமயங்களில் “நீ எதிலே சிறந்து விளங்குவாய் என்று எனக்கு தெரியும்” என்று பிள்ளைகளிடத்தில் சொல்லத்தோன்றும். அவ்வப்போது பிள்ளைகள் தங்களை காண்பதற்கு மேலாகவே, பெற்றோர்கள் அவர்களில் காண்கிறார்கள்.
இது பவுல், தான் அன்புகூர்ந்து நேசித்த பிலிப்பிய சபை விசுவாசிகளிலே (பிலிப்பியர் 1:3) காண்பதிற்க்கு ஒப்பிடலாம். எல்லாம் கடந்த பின்பு அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், என்று அவர்கள் கடை நிலைமையை அறிந்திருந்தார். ஏனெனில் வேதம் கதையின் இறுதியில் ஒரு அருமையான காட்சியை காண்பிக்கிறது: உயிர்த்தெழுதலும், எல்லா காரியங்களும் புதுப்பிக்கப்படுதலும் ( 1 கொரிந்தியர் 15, வெளிப்படுத்தின விஷேசம் 21 ஐ பார்க்க). பின்னுமாக இந்த கதையை எழுதியவர் யார் என்றும் அது சொல்லுகிறது.
சிறைச்சாலையிலிருந்து பிலிப்பியருக்கு பவுல் எழுதிய இந்த நிருபத்தின் முதல் வரிகள்: “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்” (பிலிப்பியர் 1:5) என்று பிலிப்பியருக்கு நினைவுபடுத்துகிறார்.
உங்களில் நல்ல வேலையை தொடங்கிய இயேசு அதை முடித்திடுவார். ‘முடிப்பது’ என்பது மிக முக்கியமான ஒரு வார்த்தை. ஏனென்றால் இறைவன் எதையும் அரைகுறையாக விடுவதில்லை.