உங்கள் சுற்றுப்புறத்தில் கிறிஸ்து
அவருடைய ஆலயத்திற்கு அருகாமையில் குறைந்த வருமானம் கொண்ட குடித்தனங்கள் வழியாக போய்க்கொண்டிருந்தபோது, அந்த போதகர் அவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். ஒரு நாள் அங்கே தெருவில் கிடந்த ஒரு மனிதனைப் பார்த்து அவனுக்காக ஜெபிக்க முனையும்போது, அவன் இரண்டு மூன்று நாட்களாக சாப்பிடவில்லை என்று தெரிந்து கொண்டார். அந்த மனிதன் போதகரிடம் சாப்பாட்டிற்காக கொஞ்சம் காசு கேட்டான். இது அந்த சபையிலே வீடற்றவர்களுக்காக ஒரு திட்டம் உருவாக மூலமானது. ஆலயத்தின் ஆதரவு மூலம் சபை மக்கள் உணவு தயாரித்து வீடு இல்லாதவர்களுக்கு நாளைக்கு இரண்டு தரம் விநியோகித்தார்கள். அவ்வப்போது அவர்களை ஆலயத்திற்கும் கூட்டிவந்து ஜெபிப்பார்கள்; அவர்களுக்கு வேலை கிடைக்க உதவுவார்கள்.
இந்தவிதமான அக்கம்பக்கத்தாரை தொடும் திட்டம் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு நியமித்த ஆணைக்கு ஒப்பிடலாம். அவர் சொன்னார்:” வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள்”. (மத். 28:18,19).
அவருடைய பரிசுத்த ஆவி நம்மை யாவரையும் - வீடற்றவர்களையும் கூட - தொட இயக்கு கிறது. என்றாலும் நாம் தனியாக போக வேண்டியதில்லை. இயேசு சொன்னார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’’ (வச. 20).
அந்த போதகர் வீடு இல்லாத ஒரு மனிதன் கூட ஜெபிக்கும்போது இந்த உண்மையை உணர்ந்துகொண்டார். “எங்களுடைய இருதயங்களை நாங்கள் திறந்தபோது சபை மக்கள் எல்லாரும் எங்களோடு கைகோர்த்தார்கள்” என்று அவர் அறிக்கை செய்தார். இவ்விதமான தாக்கம் தான் பார்த்ததிலேயே மிக புனிதமானது என்று உரைத்தார்.
இதில் பாடம் என்ன? நாம் இயேசுவை எங்கும் எடுத்துரைக்க வேண்டும்.
உலகில் என்ன கோளாறு?
“இந்த உலகில் என்ன கோளாறு?” என லண்டன் டைம்ஸ் செய்தித்தாள் இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில் தன்னுடைய வாசகர்களுக்கு ஒரு கேள்வியை எழுப்பியது. இந்த உலகத்தில் என்னதான் கோளாறு?
சரியான கேள்வி அல்லவா? அதற்கு சிலர் சொல்லலாம்: “உனக்கு நேரம் இருக்கிறதா?, சொல்லுகிறேன்”. அது சரியான பதில் தான்; ஏனென்றால் உலகத்தில் மிகுந்த தவறுகள் காணப்படுகின்றன. அந்த செய்தித்தாளுக்கு அநேக பதில்கள் வந்தன; அதில் ஒன்று இரத்தின சுருக்கமாக மின்னியது. மற்றவர்களை பழிக்கும் தன்மைக்கு மாறாக, எழுத்தாளரும், கவிஞரும், தத்துவ ஞானியுமான G.K. செஸ்டர்டன் எழுதின நாலு வார்த்தைகள் மனதை கவர்ந்தன: “அருமை ஆசிரியர்களே நான் தான்”.
இந்த கதை உண்மையோ அல்லவோ என்பதை விவாதிக்கலாம். ஆனால் அந்த பதிலோ உண்மைதான். செஸ்டர்டன் பிறப்பதற்கு நெடுங்காலத்திற்கு முன்னே பவுல் என்று ஒரு அப்போஸ்தலர் இருந்தார். அவர் ஒன்றும் ஒழுக்கத்தின் சிகரம் அல்ல. தன்னுடைய குறைகளை ஒத்துக்கொண்டார்: “முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்” (வச. 13). “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” என்று சொல்லிய பின் “அவர்களில் பிரதான பாவி நான்” என்று அறிக்கையிடுகிறார். பவுலுக்கு உலகத்தில் என்ன கோளாறு என்று நன்றாக தெரியும். அதை எப்படி சரிப்படுத்தலாம் என்றும் அவருக்குத் தெரியும்: “கர்த்தரின் கிருபை” இது எவ்வளவு உண்மை! இந்த நீடித்த உண்மை நம்முடைய கண்களை கிறிஸ்துவினுடைய மீட்பின் அன்பிற்கு நேராக ஏறெடுக்கிறது.
தங்க தழும்புகள்
நெதர்லாந்து நாட்டில் ஆடைகளை வடிவமைக்கும் ஒரு குழுவினர் துணிகளை ‘மிளிர வைக்கும் கூட்டு வேலை’ என்று ஒரு பணிமனை நடத்தினர். இது உடைந்த ஒரு பீங்கான், தங்கம் வைத்து சரி செய்யப்படும் ஜப்பானிய நுட்பமான கிண்ட்சுகி முறையை தழுவியது. இந்த முறையில் சரி செய்யப்பட்ட இடத்தை மறைப்பதை விட அதை வெளிப்படுத்துவது பிரதானம். அதில் பங்கு பெறுகிறவர்கள் அவர்களுக்கு விருப்பமான ஆனால் கிழிந்த ஆடைகளை கொண்டு வந்து தங்கத்தை வைத்து சரி செய்ய அழைக்கப்படுவார்கள். அப்படி செய்யும்போது அந்த இடம் தங்க தழும்பாக மிளிரும்.
இந்த வழியில் கிழிந்த இடங்கள் முன்னிலைப் படுத்தப்படுகிறது. ஒருவேளை இதுதான் “தன்னுடைய பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்” என்று பவுல் சொன்னதோ? மிக உயர்ந்த வெளிப்பாடுகள் அவருக்கு கிடைத்தபோதிலும் அவை களைப் பற்றி அவர் தன்னை உயர்த்தவில்லை
(2 கொரி. 12: 7) அவை அதனால் பெருமையோ அகந்தையோ அடையாதபடிக்கு “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்கிறார். (2 கொரி. 12:7)
அவர் சொன்னது என்னவென்று யாருக்கும் தெரியாது: மன அழுத்தமோ, மலேரியாவோ, துன்புறுத்தப்படுதலோ, வேறு ஏதோ. என்னவென்றாலும் அதை எடுத்துவிட ஆண்டவனை வேண்டிக் கொண்டார். ஆனால் இறைவன்
"என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் (வச. 9) என்று சொல்லிவிட்டார்.
விரிசல்களும், கிழிஞ்தவைகளும் ஆடை வடிவமைப்பு செய்கிறவர்களால் எப்படி அழகாக மாற்றப்படுகிறதோ அவ்விதமே நாம் வாழ்க்கையிலும் வலிமையற்ற உடைந்த பகுதிகள் இறைவனுடைய மகிமையும் வல்லமையும் வெளிப்பட மாறலாம். அவர் நம்மை ஒன்றாகக் கூட்டி, நம்மை மாற்றி, நம்முடைய பலவீனத்தை மிக அழகாக வடிவமைக்கிறார்.
வெறுப்பை விட வலிமையானது
அவரது தாயார் ஷரோண்டா (Sharonda) வின் சோகமான மரணத்தின் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கிறிஸ் (Chris) கிருபை நிறைந்த, வல்லமை வாய்ந்த இந்த வார்த்தைகளை சொல்ல முடிந்தது: “அன்பு வெறுப்பை விட வலிமையானது”. இன்னும் எட்டு பேரோடு கூட அவனுடைய தாயார் அமெரிக்காவில் தெற்கு கரொலைனா மாகாணத்தில் சார்ல்ஸ்டன் நகரில் புதன் தோறும் நடைபெறும் வேத பாடத்தில் பங்கு பெற்றுக்கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டார். இந்த தருணத்தில் இவ்வித அருமையான வார்த்தைகள் அவனுடைய இருதயத்திலிருந்தும் வாயிலிருந்தும் வெளிவரும்படி அந்த இளைஞனுடைய வாழ்க்கையை யார் வடிவமைத்தது? கிறிஸ், இயேசுவை விசுவாசிப்பவர், அவருடைய தாயார் அனைவரையும் முழு மனதுடன்” நேசித்தவர்.
லூக்கா 23: 26-49 நிரபராதி இயேசுவும், கூட 2 குற்றவாளிகளும் சிலுவையில் அறையப்படும் காட்சிக்கு நம்மை கொண்டு போகிறது (வ 32,33). அங்கே கேட்கும் பெருமூச்சு, திணறல்களின் சத்தத்திற்கு மத்தியில் இயேசுவின் குரல் கேட்கிறது:” பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (வ 34) அன்பையே எதிரொலித்த ஒருவரையே அந்த மதபோதகர்கள் தங்களுடைய வெறுப்பினால் சிலுவையில் அறைந்தார்கள். அந்த வேதனைகள் மத்தியிலும் இயேசுவின் அன்பு வெற்றி சிறந்தது.
நீயோ அல்லது உனக்கு அருமையானவர்களோ இவ்விதமாக வெறுப்பு, கசப்பு, தீங்கிற்கு இலக்காகி இருக்கிறார்களா? உங்களுடைய துயரங்கள் ஜெபிக்க உங்களை ஊக்குவிப்பதாக; இயேசுவை பின்பற்றின கிறிஸ்-ன் உதாரணத்தை போலவே ஆவியின் வல்லமையினாலே அன்பின் மூலமாக வெறுப்பை மேற்கொள்ளுங்கள்.