“இந்த உலகில் என்ன கோளாறு?” என லண்டன் டைம்ஸ் செய்தித்தாள் இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில் தன்னுடைய வாசகர்களுக்கு ஒரு கேள்வியை எழுப்பியது. இந்த உலகத்தில் என்னதான் கோளாறு?
சரியான கேள்வி அல்லவா? அதற்கு சிலர் சொல்லலாம்: “உனக்கு நேரம் இருக்கிறதா?, சொல்லுகிறேன்”. அது சரியான பதில் தான்; ஏனென்றால் உலகத்தில் மிகுந்த தவறுகள் காணப்படுகின்றன. அந்த செய்தித்தாளுக்கு அநேக பதில்கள் வந்தன; அதில் ஒன்று இரத்தின சுருக்கமாக மின்னியது. மற்றவர்களை பழிக்கும் தன்மைக்கு மாறாக, எழுத்தாளரும், கவிஞரும், தத்துவ ஞானியுமான G.K. செஸ்டர்டன் எழுதின நாலு வார்த்தைகள் மனதை கவர்ந்தன: “அருமை ஆசிரியர்களே நான் தான்”.
இந்த கதை உண்மையோ அல்லவோ என்பதை விவாதிக்கலாம். ஆனால் அந்த பதிலோ உண்மைதான். செஸ்டர்டன் பிறப்பதற்கு நெடுங்காலத்திற்கு முன்னே பவுல் என்று ஒரு அப்போஸ்தலர் இருந்தார். அவர் ஒன்றும் ஒழுக்கத்தின் சிகரம் அல்ல. தன்னுடைய குறைகளை ஒத்துக்கொண்டார்: “முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்” (வச. 13). “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” என்று சொல்லிய பின் “அவர்களில் பிரதான பாவி நான்” என்று அறிக்கையிடுகிறார். பவுலுக்கு உலகத்தில் என்ன கோளாறு என்று நன்றாக தெரியும். அதை எப்படி சரிப்படுத்தலாம் என்றும் அவருக்குத் தெரியும்: “கர்த்தரின் கிருபை” இது எவ்வளவு உண்மை! இந்த நீடித்த உண்மை நம்முடைய கண்களை கிறிஸ்துவினுடைய மீட்பின் அன்பிற்கு நேராக ஏறெடுக்கிறது.
உலகத்தில் என்ன தவறு? பவுலும் செஸ்டர்டன் – னும் கொடுத்த பதில் உனக்கும் ஒவ்வுமா? அந்த பதிலை சுய வெறுப்புக்குள் நுழையாமல் நீ ஒத்துக் கொள்ள முடியுமா?
ஆண்டவரே பாவியாகிய என்மேல் நீர் கொண்ட நீடிய பொறுமைக்காக உம்மை துதிக்கிறேன். உமக்கே மகிமையும் கனமும் உண்டாவதாக.
கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக அணுக வேண்டிய இணையதளம்: christianuniversity.org/CA101.