குடும்ப புராணத்தின் படி, இரண்டு சகோதரர்கள் – ஒருவன் பெயர் பில்லி அடுத்தவன் மெல்வின் – சிறுவர்களாக இருந்தபோது ஒரு சமயம் தங்கள் குடும்பத்தை சார்ந்த பால்பண்ணையில் நின்று கொண்டிருந்தபோது ஆகாயத்தில் ஒரு விமானம் சில எழுத்துக்களை வரைவதை பார்த்தார்கள்; GP என்று அந்த எழுத்துக்களை படித்தனர்.
அந்த எழுத்துக்கள் தங்களுக்கு சொந்த கருத்து ஒன்றை தெரிவிக்கிறது என்று சகோதரர்கள் தீர்மானம் செய்துகொண்டார்கள். ஒருவன் தனக்கு தென்பட்டது GO PREACH – அதாவது “போய் உபதேசம் செய்” என்று புரிந்துக்கொண்டான். மற்றொருவன் அந்த எழுத்துக்கள் GO PLOW அதாவது “போய் உழவுத் தொழில் செய்” என்று புரிந்துக்கொண்டான். பில்லி கிரஹாம் தன் வாழ்க்கையை உபதேசத்திற்காக அர்ப்பணித்து மிகப்பெரிய சுவிசேஷகராக மாறினார். அவருடைய சகோதரன் மெல்வின், தன்னுடைய குடும்ப பண்ணையை வெகு ஆண்டுகளாக உண்மையாக நடத்தினார்.
ஆகாயத்தில் எழுதின எழுத்துக்கள் இருக்கட்டும், பில்லியை ஆண்டவர் உபதேசத்திற்கும் மெல்வினை விவசாயத்திற்கும் அழைத்திருந்தால், அவர்கள் இருவருமே தேவனை தங்கள் தொழில்களின் மூலமாக கனப்படுத்தினார்கள். பில்லி நெடுநாள் பிரசத்தி பெற்ற பிரசங்கியாக இருந்தாலும், அதனால் அவருடைய சகோதரன் உழுவதற்கு பெற்ற அழைப்பை கீழ்படிந்தது அதைவிட முக்கியத்துவம் குறைந்ததல்ல.
தேவன் சிலரை நாம்கூறுவதுபோல முழு நேர ஊழியத்திற்கு அழைப்பதினால்(எபே. 4:11-12) மற்ற வேலைகளிலும் பாத்திரங்களிலும் ஈடுபட்டிருக்கிறவர்கள்குறைந்த முக்கியத்துவம் குறைந்தவேலை செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. இரண்டில் எப்படி இருந்தாலும் “ஒவ்வொரு அவயவமும் தன்தன் கிரியையை செய்யவேண்டும்” என்று பவுல் கூறுகிறார் (எபேசியர் 4:16). அப்படி என்றால் நாம் ஒவ்வொருவரும் நமக்கு கொடுக்கப்பட்ட ஈவுகளால் இயேசுவை மேன்மைப்படுத்த வேண்டும். அப்படி செய்கிறவர்களாயிருந்தால் நாம் உபதேசிக்கிறோமோ அல்லது உழுகிறோமோ, எப்படி இருந்தாலும் இயேசுவுக்காக ஒருவித்தியாசத்தைஉண்டாக்கலாம்.
நம்முடைய ஈவுகளின் மூலமாக நம் தொழில்களில் ஆண்டவரை எப்படி மகிமைப் படுத்தலாம்? மற்றவர்களும் அவ்வாறே இயேசுவுக்கு சேவை செய்யும்படி எப்படி அவர்களை ஊக்குவிக்கலாம்?
தேவனே, நீர் என்னை வைத்திருக்கும் இடத்தில் நான் பயன்பட எனக்கு உதவும். என் வார்த்தைகளும், செயல்களும், தொழில் நெறிமுறைகளும் மற்றவர்களை ஆழமாக பாதிக்க எனக்கு உதவும்.