நான் ஒரு புதிய நாட்டிற்கு இடம்பெயர்ந்த போது என்னுடைய முதல் அனுபவம் சற்றே விரும்பத்தகாத ஒன்றாக இருந்தது. அன்று என் கணவர் பிரசங்கம் செய்யவிருந்த சிறிய ஆலயத்திலே ஒரு இடம் கண்டுபிடித்து நான் அமர்ந்தபொழுது வயதான ஒரு நபர் சற்றே முரடாக என்னை “தள்ளி உட்காரு” என்றார். அவருடைய மனைவி என்னிடம் மன்னிப்பு கேட்டு, அந்த இடம் அவர்கள் எப்போதும் உட்காரும் இடம் என்று எனக்கு விளக்கினார்கள். முந்திய காலத்தில் சபையார் தங்களுக்கு வேண்டிய இடத்தை ஆலயத்தில் வாடகைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்றுஅறிந்தேன். இந்த பழக்கம் ஆலயத்திற்கு வருமானம் தருவது மட்டுமல்லாமல் ஒருவர் இடத்தை இன்னொருவர் எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்தது. இந்த மனப்பான்மை தெளிவாக சில தசாப்தங்களுக்கு இன்னும் பரவி இருந்தது.
நான் பார்த்த இவ்வித கலாச்சார முறைகளுக்கு மாறாக, தேவன் எப்படி இஸ்ரவேலரை அந்நியர்களை வரவேற்க அறிவுறுத்தினார் என்று நான் பிறகு யோசித்தேன். தம்முடைய ஜனங்கள் செழித்து வாழ்வதற்கு வழிமுறைகளைச் கூறியபின் அந்நியரை வரவேற்க அவர்களுக்கு நினைவூட்டினார் ஏனென்றால் அவர்களும் ஒரு காலத்தில் அந்நியராக இருந்தவர்கள் தான். அவர்கள் அந்நியரை கனிவாக நடத்துவது மட்டுமன்றி அவர்களை நேசிக்கவும் கூட தேவன் கட்டளையிட்டார. தேவன் அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவளுக்கு கொடுத்தார் அவ்விடத்தில் இருந்த மற்றவர்களையும் அவர்கள் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்
நீங்கள் அந்நியரை உங்கள் மத்தியில் சந்தித்தால் , தேவனுடைய அன்பை அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள தடையாய் இருக்கும் கலாச்சார பழக்கங்களை வெளிப்படுத்துமாறு அவரை கேளுங்கள்.
மக்களை நம்முடைய வீடுகளுக்கும் ஆலயங்களுக்கும் வரவழைப்பது ஏன் முக்கியம் ? இந்த காரியத்தில் உங்களுக்கு சவாலாகவும் வெகுமதியாகவும் இருப்பது என்ன?
பிதாவாகியதேவனே, நீர் என்னை ஒவ்வொருநாளும்நேசிப்பதால் உம் கரங்களை விரித்து என்னை வரவேற்கின்றீர். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உம்மடைய அன்பை எனக்குத் தாரும்.