டாக்டர் சியூஸ் இன் ஒரு விசித்திரமான கதைகளில் வடக்கே போகும் கோடாரி தெற்க்கே போகும் கோடரி ஒரு சம புல்வெளியில் சந்திப்பதை பற்றி சொல்கிறார். இரண்டும் நேருக்கு நேர் சந்திக்கும் போது இரு கோடாரியும் ஒதுங்கிப்போவதாக இல்லை. முதலாவது கோடாரி கோபத்துடன் “உலகமே நின்றாலும் நான் நகரப்போவதில்லை என்று ஆணை இடுகிறது. (ஆனால் உலகம் குழப்பமடையாமல் முன் நகருகிறது; அவர்களை சுற்றி ஒரு நெடுஞ்சாலை உருவாக்குகிறது)
இந்த கதை மனிதனுடைய துல்லிய குணத்தை நன்றாக விளக்குகிறது. ‘நாம்தான் சரி’ என்ற ஒரு உணர்வு நமக்குள் இருக்கிறது. நமக்கு கேடு வரும் என்றாலும் அந்த உணர்வை விடுவதற்க்கு நமக்கு மனதில்லை.
ஆனால் நல்ல வேளை, இறைவன் கடினமான இதயங்களை மென்மை படுத்துகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் இதை அறிந்திருந்தார். பிலிப்பிய சபையிலே இருவருக்கு சச்சரவு வந்தபோது பவுல் அவர்களுக்கு அறிவுரை சொல்கிறார் (பிலிப்பியர் 4:2): “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” (பிலிப்பியர் 2:5). பின்னர்; “சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்ட என் உடன்வேலையாட்களாகிய அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி” (பிலிப்பியர் 4:3) என வேண்டிக்கொண்டார். சமாதானம் அடைவதும், ஞானம் உள்ள நடு பாதையை தேர்ந்தெடுப்பதும் ஒரு கூட்டு முயற்சி போல.
சில நேரங்களில் நாம் உறுதியாக இருக்க வேண்டியதுதான். ஆனால் கிறிஸ்துவினுடைய அணுகுமுறை, விட்டுக்கொடுக்காத மனப்பான்மையை விட மிக வித்தியாசமாகவே இருக்கும். வாழ்க்கையில் பல காரியங்களுக்காக நாம் சண்டை போட அவசியமே இல்லை. சின்னஞ் சிறு காரியங்களுக்காக நாம் மற்றவர்களோடு மோதிக்கொள்வோமானால் ஒருவரையொருவர் அழித்துக்கொள்வோம் (கலாத்தியர் 5:15)
நாம் நம்முடைய பெருமையை சற்று விழுங்கி, ஞான அறிவுரைபடி நடந்தால் ஒற்றுமையாக வாழலாம்.
நீ இப்போது என்ன காரியங்களுக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறாய்? சிநேகிதர்களின் ஞானமான அறிவுரைகளால் அவற்றை எப்படி தீர்க்கலாம்?
தேவனே, என்னுடைய் கல்லான கடினமான இருதயத்தை மென்மை படுத்தி நான் மற்றவர்களோடு ஒற்றுமையாக இருக்க கிருபை செய்யும். ஞான அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள உதவும்.