விடிவதற்கு முன்னே என்னுடைய கணவர் படுக்கையில் இருந்து எழுந்து சமையலறைக்குச் சென்று அங்கே விளக்கை போட்டு அணைத்துக் கொண்டிருந்தார். நான் அவர் என்ன செய்கிறார் என்று யோசித்தேன். அப்பொழுதுதான் முந்தின நாள், நான் அங்கே ஒரு சிலந்தி பூச்சியை கண்டு அலறின கதை ஞாபகம் வந்தது. என் கணவர் என்னுடைய பயத்தை அறிந்து உடனே வந்து அதை எடுத்துவிட்டார். இன்றைக்கு அவர் அதிகாலமே எழுந்திருந்ததின் காரணம் சமையலறையில் நான் பயப்படாமல் உள்ளே போகதக்கத்தாக ஒரு பூச்சியும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவே. அவர் அப்படித்தான்!

 என்னை பற்றிய நினைவாக அவ்விதமாக எழுந்து, என்னுடைய தேவையை அவருடைய தேவைக்கு முன் என் கணவன் வைத்தது, பவுல் சொல்லுகிற அன்பை காட்டுகிறது. எபேசியருக்கு அவர் எழுதின காரியம்: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” (எபேசியர் 5:25,27) இன்னுமாக பவுல் சொல்லுவது: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்”. (எபேசியர் 5:28). கிறிஸ்துவுடைய அன்பு மற்றவர்களின் தேவையை முன் வைத்ததை தழுவி தான் கணவனின் அன்பையும் சித்தரிக்கிறார் பவுல்.

என்னுடைய பயம் என்  கணவருக்கு தெரியும். அதனால் அவர் என்னுடைய தேவையை முன் வைத்தார். இந்த மாதிரியே நாமும் தியாகமாக முன் வந்து,  பயம், மன அழுத்தம், கவலை  வெட்கம் போன்றவைகளை மற்றவர் வாழ்வினின்று அகற்றி, அவர்களுக்கு உதவலாமே..