Archives: செப்டம்பர் 2020

இப்போது, பிறகு அடுத்தது

நான் சமீபத்தில் ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டேன். அப்போது பேச்சாளர் அங்கு பட்டம்பெற காத்திருக்கும் இளைஞர்களுக்கு தேவையான சவாலை வழங்கினார். அவர்களுடைய வாழ்க்கையில் “அடுத்து என்ன ?” அடுத்து என்ன தொழில் தொடர போகிறார்கள்? எங்கு பள்ளிக்கூடத்திற்கு அல்லது அடுத்த வேலைக்கு செல்லப்போகிறார்கள் ? என்று எல்லோராலும் கேட்கப்படும் ஒரு காலம் என்பதை குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், இப்போது நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் ? என்ற கேள்வியே மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறினார்.

அவர்களுடைய விசுவாச பயணத்தின் சூழலில், ஒவ்வொரு நாளும் தனக்காக அல்ல, இயேசுவுக்காக வாழ என்ன முடிவுகளை எடுப்பார்கள்?. 

இவருடைய வார்த்தைகள், இப்போது எப்படி வாழவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிற நீதிமொழிகள் புத்தகத்தை நினைப்பூட்டியது. ஊதாரணமாக, இப்பொழுது நேர்மையாக நடக்க வேண்டும் (11:1), இப்பொழுது சரியான நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் (12:26), இப்பொழுது நேர்மையுடன் வாழவேண்டும் (13:6) இப்பொழுது நல்ல தீர்ப்பு சொல்ல வேண்டும் (13:15), இப்பொழுது ஞானமாய் பேச வேண்டும் (14:3).

பரிசுத்த ஆவியின் ஏவுதலால், இப்பொழுது, தேவனுக்காய் வாழ்வது, அடுத்தது சுலபமானது எது என்பது பற்றிய முடிவுகளை எடுக்க உதவுகிறது. “ தேவன் ஞானத்தைத் தருகிறார்: …. அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார், …. அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதைகளை காப்பாற்றுகிறார்” (2:6-8). இப்பொழுது, அவருடைய பிரமாணங்களின்படி வாழ நமக்கு தேவையானதை தேவன் தருவார் மற்றும் அவருடைய கனத்திற்காக அடுத்து நாம் செய்யவேண்டியது என்ன என்பதையும் தேவன் வழிகாட்டுவார்.

மீண்டும் தோல்வியடைந்தது

எனது பிரசங்க நாட்களில் சில ஞாயிறுகளின் காலை நேரங்களை ஒரு தாழ்வான புழுவைப்போல அணுகினேன். அதற்கு முந்தின வாரத்தில், நான் ஒரு நல்ல கணவனாய், தகப்பனாய் மற்றும் நண்பனாய் இருக்கவில்லை. தேவன் என்னை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன் நான் ஒரு சரியான வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது. ஆகவே வரும் வாரத்தில் சிறப்பாக வாழ முயற்சிக்க முடியும் என சபதம் செய்து என் பிரசங்கத்தை  நடத்தினேன்.

அது ஒரு நல்ல அணுகுமுறை அல்ல. கலாத்தியர் 3ம் அதிகாரத்தில. தேவன் தொடர்ந்து இலவச பரிசாக தமது ஆவியை அளித்து நம்மில் வல்லமையாய் கிரியை செய்கிறார் - நாம் எதையோ செய்திருக்கிறோமென்றோ அல்லது அதற்கு தகுதியானவர்கள் என்றோ அல்ல.

ஆபிரகாமின் வாழ்க்கை  அதை நிரூபிக்கிறது. சில நேரங்களில் அவர் ஒரு நல்ல கணவனாக இருக்கவில்லை. உதாரணமாக, இரண்டு முறை தன்னை காப்பாற்றிக்கொள்ள, பொய் சொல்லி,  சாராளின் வாழ்க்கையை ஆபத்தில்  சிக்க வைத்து விட்டார். (ஆதியாகமம் 12:10-20; 20:1-18). இருப்பினும் தன்னுடைய விசுவாசத்தை தேவன் நீதியாக எண்ணினார் (கலா. 3:6). ஆபிரகாம் தன்னுடைய தோல்விகளிலும்  தன்னை தேவனுடைய கரங்களில் ஒப்புக்கொடுத்தார். இதனால் தன்னுடைய வம்சத்தின் மூலம் இந்த உலகத்திற்கே இரட்சிப்பை கொண்டு வர தேவன் அவரை பயன்படுத்தினார்.

தவறாக நடத்துக்கொள்வதற்கு எந்த நியாயத்தீர்ப்பும் இல்லை. நாம் கீழ்படிதலோடு அவரை பின்பற்ற இயேசு நம்மிடத்தில் கேட்கிறார், அதற்கான வழிமுறைகளையும் எற்படுத்தி கொடுக்கிறார். ஒரு கடினமான, மனந்திரும்பாத இதயம், அவர் நமக்காக வைத்திருக்கும் நோக்கங்களுக்கு தடையாக இருக்கும். ஆனால். அவர் நம்மை பயன்படுத்தும் முறை நம்முடைய நீண்ட நல்ல நடத்தை முறையை சார்ந்தது அல்ல. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை பயன்படுத்த தேவனுடை சித்தம் மட்டுமே அடிப்படையானது : இரட்சிக்கப்பட்டு அவருடைய கிருபையில் வளருவதே.  அந்த கிருபைக்காக நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. அது முற்றிலும் இலவசம்.

தேவன் புரிந்துக்கொள்கிறார்

சமீபத்திய நடவடிக்கைக்குப்பிறகு, மாதுரியின் ஏழு வயது மகன் ரோஹித், தனது புதிய பள்ளியில் கூடுதல் வகுப்புகளில் கலந்துக்கொள்ளத் தயாரானப்போது வம்பு செய்தார்.

மாற்றம் கடினமானது என்று அவள் புரிந்துக்கொண்டதை சொல்லி அவனை மாதுரி ஊக்குவித்தாள். ஆனால் ஒரு காலையில் ரோஹித்தின் அவனை மீறிய நடத்தை எரிச்சலூட்டுவதாக இருந்தது. மாதுரி இரக்கத்துடன் “எது உன்னை தொந்தரவு செய்கிறது மகனே? என்று கேட்டாள்.

ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு “எனக்கு தெரியவில்லை அம்மா. எனக்கு பல உணர்வுகள் உள்ளன” என்று ரோஹித் கூறினான்.

அவனை ஆறுதல் படுத்தும்போது மாதுரியின் இருதயம் கனத்தது. அவனுக்கு உதவ வேண்டி இந்த காரியம் அவருக்கும் கடினமானதாக இருக்கிறது என்பதை பகிர்ந்துக்கொண்டார். அவர்களுடைய விரக்தியை புரிந்துக்கொள்ளவோ, குரல் கொடுக்கவோ முடியாத நேரத்திலும், எல்லாவற்றிலும் தேவன் அருகிலிருப்பார் என்று உறுதியளித்தார். “பள்ளி ஆரம்பிக்கும் முன் உன் தோழர்களைப் சந்திப்போம்” என்று கூறினாள். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு அதிகமான உணர்வுகள் இருந்தாலும் தேவன் அதைப் புரிந்துக்கொள்ளுகிறார் என்ற நன்றியறிதலோடு அவர்கள் திட்டமிட்டார்கள்.

சங்கீதம் 147ஐ எழுதினவர் தன்னுடைய விசுவாச பயணம் முழுவதும் பெரும் உணர்ச்சிகளை அனுபவித்தார். எல்லாம் அறிந்தவர், எல்லோரையும் பராமரிப்பவர், உடல் மற்றும் உணர்ச்சிகளால் ஏற்பட்ட காயத்ததை ஆற்றுகிறவர் - இவரைப் துதிப்பதால் வரும் நன்மைகளை அறிந்துக்கொண்டார். (வச. 1-6). அவர்களுக்கு தேவன் வழங்கும் வழிகளுக்காகவும், தமக்கு பயந்து தமது கிருபைக்கு காத்திருக்கிறவர்கள் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார் (வ 11) என்றும் அவரைத் துதித்தார்

எப்போதும் மாறும் நம்முடைய உணர்ச்சிகளை புரிந்துக்கொள்ள நாம் போராடும்போது, நாம் தனிமையாக அல்லது ஊக்கமில்லாமல் இருப்பதாக உணர வேண்டியதில்லை. என்றும் மாறாத தேவனின் நிபந்தனையற்ற அன்பிலும், வரம்பற்ற புரிதலிலும் நாம் சார்ந்துக்கொள்ளலாம்.

பேசுங்கள்

“அதோ அந்த மனிதர்! அதோ அந்த மனிதர்!” பானு, உணவகத்தில் வெலை செய்யும் சக ஊழியர்களிடம் கூச்சலிட்டார். வெவ்வேறு சூழ்நிலைகளில் அவளை சந்தித்த மெல்வின் என்பவரைப் பற்றி குறிப்பிட்டாள். அவர் தன்னுடைய தேவாலயத்தின் புல்வெளியை பராமரித்துக்கொண்டிருக்கும்போது, விபச்சாரி போல் காணப்பட்ட ஒரு பெண்ணிடம் உரையாடலை துடங்கும்படியாக பரிசுத்த ஆவியானவர் ஏவினார். அவர் அந்தப் பெண்ணை ஆலயத்திற்கு வர அழைத்தப்போது அவளிடமிருந்து வந்த பதில் “நான் என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என்று தெரியுமா ?. நான் அங்கு வருவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.” என்பதே.  மேல்வின் இயேசுவின் அன்பைப் பற்றியும் அவளுடைய வாழ்க்கையை தேவன் மாற்ற வல்லமையுள்ளவர் என்றும் கூறியபோது அவள் கண்களில் இருந்து கண்ணீர் முகத்தில் வடிந்தது. இப்போது, அநேக வாரங்களுக்குப் பிறகு, பானு ஒரு புதிய சூழலில், இயேசு வாழ்க்கையையே மாற்ற வல்லவர் என்ற உயிருள்ள ஆதாரமாக வேலைப்பார்த்துக்கொணடிருக்கிறாள்.

விசுவாசிகளை ஜெபம் செய்ய ஊக்குவிக்கும்படி பரிசுத்த பவுல் இருமடங்கு வேண்டுகோள் வடுத்திருக்கிறார்

“கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக் குறித்துப் பேச வேண்டியபிரகாரமாய்ப் பேசி, இதை வெளிப்படுத்துவதற்கு,  திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்”. (கொலோசெயர் 4:3,4).

இயேசுவுக்காக தைரியமாகவும், தெளிவாகவும் பேசுவதற்கான வாய்ப்புகளுக்காக நீங்கள் ஜெபித்திருக்கிறீர்களா ? என்ன ஒரு பொருத்தமான பிரார்த்தனை. ! இப்படிப்பட்ட ஜெபம் மெல்வினைப் போன்ற அவரது சீஷர்களை எதிர்பாராத இடங்களில் மற்றும் எதிர்பாராத நபர்களிடம் பேச வழிவகுக்கும். இயேசுவுக்காக பேசுவது சங்கடமாக இருக்கும் ஆனால் அதன் வெகுமதிகள் - மாற்றப்பட்ட வாழ்க்கை – நம் வாழ்க்கை நலக்குறைவுகளை ஈடுசெய்ய ஒரு வழியாகிறது.