உங்களிடத்திலிருக்கிற அனைத்தையும் கொடுங்கள்
ஸ்கேலிங் (அளவிடுதல்) : இது உடற்பயிற்சி உலகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொல், யார் வேண்டுமானாலும் பங்குக்கொள்ள அனுமதிக்கும் சொல். உதாரணத்திற்கு புஷ்அப் (தண்டால்)ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சி என்றால் நீங்கள் ஒரே வரிசையில் பத்து முறை செய்ய முடியும் ஆனால் எனக்கு நான்கு முறை தான் செய்ய முடியும். அந்த நேரத்தில் என்னைடைய உடற்தகுதிக்கு ஏற்ப என்னுடைய பயிற்றுவிப்பாளர் என்னை புஷ்அப் அளவிடுதலை அதிகப்படுத்த ஊக்குவிப்பார். நாம் எல்லோரும் ஒரே அளவிடுதலில் இல்லை ஆனால் ஒரே திசையில் நாம் செல்ல முடியும். “உன்னுடைய புஷ்அப்புகளை உன் முழு பெலத்தோடு செய். மற்றவர்களோடு உன்னை ஒப்பிடாதே. உன்னுடைய அசைவுகளை அளவீடு செய். உன்னால் முடிந்ததை தொடர்ந்து செய், ஏழு முறை செய்யும்போதும் அல்லது ஒரு நாளில் பத்து முறை செய்யும்போது அது உனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருக்கும”; என்று அவர் கூறுவார்.
கொடுப்பதை குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் “உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7) என்று கூறுகிறார். ஆனால் அவர் கொரிந்து பட்டணத்தின் விசுவாசிகளுக்கும் நமக்கும் அளித்த ஊக்கம் - அளவீடுகளில் மாறுபாடாகும். அவனவன் தன் மனதில் நியமித்தப்படியே கொடுக்கக்கடவன். (வச. 7). நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு கொடுக்கும் நிலைகளில் காணப்படுகிறோம் மற்றும் சில நேரங்களில் அந்த நிலைகள் காலத்திற்கேற்றவாறு மாறுபடும். ஓப்பிடுதலினால் எந்த பயனுமில்லை ஆனால் அணுகுமுறை பயனுள்ளது. நீங்கள் எங்கு இருந்தாலும் அதற்கேற்றவாறு தாராளமாகக் கொடுங்கள் (வச. 6). இப்படிப்பட்ட மகிழ்ச்சியாக கொடுக்கும் நடைமுறை நம்முடைய ஒவ்வொரு வழியும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையுடன் செறிவூட்டப்படுவதாகவும் வாக்குபண்ணியிருக்கிறார். இது “தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க” உதவுகிறது.
வேலை மீது இரக்கம்
என் தோழி அனிதா, ஒரு கணக்கியல் நிறுவனத்தின் ஊதியத்தை கணக்கிடுகிறார். இது ஒரு நேரடியான வேலையாக கருதப்படலாம், ஆனால் முதலாளிகள் தங்கள் தகவல்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னரே சமர்ப்பிக்கின்றனர். ஊழியர்கள் தாமதமின்றி தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள, அனிதா பெரும்பாலும் நீண்ட நேரம் வேலை செய்தார். மளிகைப் பொருட்களை வாங்குவதற்கும், மருந்துகளை வாங்குவதற்கும், வீட்டுவசதிகளுக்கு செலவிடவும் இந்த பணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பங்ளை கருத்தில் கொண்டு அனிதா இப்படி செய்கிறார்.
அனிதாவுடைய இரக்கமுள்ள அணுகுமுறை எனக்கு இயேசுவை சுட்டிக்காட்டுகிறது. உலகத்தில், சில நேரங்களில், இயேசு தனக்கு சிரமமாக இருக்கும் போதும்கூட ஊழியம் செய்தார். உதாரணமாக, யோவான் ஸ்நானகன் கொல்லப்பட்ட செய்தியை கேட்ட பிறகு, இயேசு சற்று தனியாக இருக்க விரும்பி படவில் ஏறி தனிமைப்படுத்தப்பட்ட இடத்தை தேடி போனார் (மத். 14:13). ஒருவேளை அவருக்கு தன்னுடைய உறவினரான யோவானுக்காக துக்கப்படவும், அந்த துக்கத்திலும் அவர் ஜெபிக்கவும் தேவைப்பட்டிருந்தது.
ஒரே ஒரு சிக்கல் இருந்தது. திரளான ஜனங்கள் அவருக்கு பின்னே அங்கு போனார்கள். இந்த மக்களுக்கு அனேக சரீர தேவைகள் இருந்தது. அவர்களை அனுப்பி விடுவது மிகவும் எளிதானதாக இருந்திருக்கும் ஆனால் இயேசு அங்கே வந்து அவர்களைப் பார்த்தபொழுது, அவர்கள் மேல் மனதுருகி அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவாகளை சொஸ்தமாக்கினார் (வச. 14).
இந்த உலகத்தில், இயேசுவினுடைய ஊழியத்தின் அழைப்பு மக்களுக்கு உபதேசிப்பதும் வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குவதும் ஒரு பாகமாயிருந்தாலும், அவருடைய பச்சாதாபம், அவர் தன்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதை பாதித்திருந்தது. தேவன் தாமே, நம்முடைய வாழ்க்கையில் அவருடைய இரக்கத்தை அடையாளம்கண்டுக்கொள்ள உதவி செய்து அதையே நாம் மற்றவர்களுக்கும் செய்ய பெலத்தைத் தருவாராக.
பிரியாவிடை மற்றும் வணக்கம்
என் சகோதரன் டேவிட் திடீரென இருதய செயலிழப்பு காரணமாக இறந்த போது, என் வாழ்க்கையைப் பற்றிய முன்னோக்கு, வியக்கத்தக்க முறையில் மாறியது. ஏழு பிள்ளைகளில் டேவ் நான்காவது பிள்ளை ஆனால் எங்களில் அவர்தான் முதலாவது மரித்தார். எதிர்பாராத விதத்தில் இறந்த அவருடைய மரணம் என்னை அதிகம் சிந்திக்க வைத்தது. எங்களுக்கு வயது செல்ல செல்ல எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தில் ஆதாயத்திற்கு பதில் இழப்பையே நாங்கள் சந்திக்க வேண்டுமென்பது வெளிப்பட்டது. அந்த பிரியாவிடை, வணக்கத்தைப் போல பண்பு படுத்தப்படுவதாக இருக்கப் போகிறது.
அறிவுப்பூர்வமாக இவை எதுவுமே ஆச்சர்யமாக இல்லை - இது தான் வாழ்க்கை. ஆனால் இதை உணர்ந்துக்கொள்ளுதல், மூளைக்கு ஒரு மின்னல் ஒளி போன்ற உணர்வாயிருந்தது. இது வாழ்க்கை நமக்கு கொடுக்கும் ஒவ்வொரு கணமும், நேரம் அனுமதிக்கும் எல்லா வாய்ப்புகளுக்கும் ஒரு புதிய, முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. பிரியாவிடையே தேவைப்படாத நாம் மறுபடியும் சந்திக்கும் உண்மைக்கு ஒரு பெரிய மதிப்பு கொடுத்தது.
இந்த உண்மை வெளிப்படுத்தல் 21:3-4 வசனங்களின் மையமாக காண்கிறோம். “தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். தேவன் தாமே அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துப்போயின”.
இன்றைக்கு நாம் ஒருவேளை நீண்ட பிரியாவிடைகளை அனுபவித்துக்கொண்டிருக்கலாம், ஆனால் கிறிஸ்துவின் மரணத்திலும் அவருடைய உயிர்த்தெழுதலிலும் இருக்கிற நம்முடைய நம்பிக்கை, நமக்கு நித்திய வணக்கங்களை வாக்களிக்கிறது.
நட்பு துடுப்பு
ஒரு கடல் உயிரியலாளர் நீந்திக்கொண்டிருக்கும்போது, ஒரு 50,000 பவுண்ட் கொண்ட திமிங்கலம் திடீரென தோன்றி அவளை தன் துடுப்பின் கீழ் சொருகிக்கொண்டது. அந்தப் பெண் தன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தாள். ஆனால் மெதுவாக வட்டமடித்து நீந்திய அந்தத் திமிங்கலம் அவளை விடுவித்தது. பிறகு தான் ஒரு சுறா அந்தப் பகுதியை விட்டு வெளியேறியதைப் பார்த்தாள். அந்தத் திமிங்கலம் அவளை ஆபத்திலிருந்து பாதுகாத்ததாக நம்பினாள்.
அபாயம் நிறைந்த இந்த உலகத்தில், மற்றவர்களை கவனிக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆனால் மற்றொருவருக்காக நான் உண்மையிலேயே பொறுப்பேற்க வேண்டுமா? என நீங்கள் கேட்கலாம். அல்லது காயீனைப்போல “என் சகோதரனுக்கு நான் காவலாளியா” (ஆதி. 4:9) என்று கேட்கலாம். பழைய ஏற்பாட்டின் மற்ற பகுதிகள் இடிமுழக்கத்தைப்போல எதிரொலித்து பதிலளிக்கிறது. ஆம். ஆதாம் எப்படி தோட்டத்தை கவனித்துக்கொண்டாரோ அப்படியே காயீனும் ஆபேலை கவனித்துக்கொண்டிருக்க வேண்டும். இஸ்ரவேல் பாதிக்கப்படக்கூடியவர்களை கவனித்து ஏழைகளை காக்க வேண்டியிருந்தது. ஆனாலும் அவர்கள் மக்களை சுரண்டி, ஏழைகளை ஒடுக்கி, தங்களைப்போல பிறனையும் நேசிக்க வேண்டும் என்ற அழைப்பை கைவிட்டு, நேர்மாறான காரியங்களைச் செய்தார்கள் (ஏசா. 3:14-15).
ஆனாலும், காயீன் ஆபேல் நிகழ்ச்சியில், தேவன் அவனை துரத்திவிட்ட பிறகும், அவனை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார் (ஆதி. 4:15-16). காயீன் ஆபேலுக்கு என்ன செய்திருக்க வேண்டுமோ அதை தேவன் காயீனுக்கு செய்தார். தேவன், இயேசுவாய் வந்து நமக்கு செய்யவெண்டியதின் ஒரு அழகான அடையாளமாயிருந்தது.
இயேசு நம்மை அவருடைய கவனிப்பில் வைத்துக்கொள்கிறார். நாமும் போய் மற்றவர்களுக்கு அப்படியே செய்ய பலப்படுத்துகிறார்.