ஒரு கடல் உயிரியலாளர் நீந்திக்கொண்டிருக்கும்போது, ஒரு 50,000 பவுண்ட் கொண்ட திமிங்கலம் திடீரென தோன்றி அவளை தன் துடுப்பின் கீழ் சொருகிக்கொண்டது. அந்தப் பெண் தன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தாள். ஆனால் மெதுவாக வட்டமடித்து நீந்திய அந்தத் திமிங்கலம் அவளை விடுவித்தது. பிறகு தான் ஒரு சுறா அந்தப் பகுதியை விட்டு வெளியேறியதைப் பார்த்தாள். அந்தத் திமிங்கலம் அவளை ஆபத்திலிருந்து பாதுகாத்ததாக நம்பினாள்.

அபாயம் நிறைந்த இந்த உலகத்தில், மற்றவர்களை கவனிக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆனால் மற்றொருவருக்காக நான் உண்மையிலேயே பொறுப்பேற்க வேண்டுமா? என நீங்கள் கேட்கலாம். அல்லது காயீனைப்போல “என் சகோதரனுக்கு நான் காவலாளியா” (ஆதி. 4:9) என்று கேட்கலாம். பழைய ஏற்பாட்டின் மற்ற பகுதிகள் இடிமுழக்கத்தைப்போல எதிரொலித்து பதிலளிக்கிறது. ஆம். ஆதாம் எப்படி தோட்டத்தை கவனித்துக்கொண்டாரோ அப்படியே காயீனும் ஆபேலை கவனித்துக்கொண்டிருக்க வேண்டும். இஸ்ரவேல் பாதிக்கப்படக்கூடியவர்களை கவனித்து ஏழைகளை காக்க வேண்டியிருந்தது. ஆனாலும் அவர்கள் மக்களை சுரண்டி, ஏழைகளை ஒடுக்கி, தங்களைப்போல பிறனையும் நேசிக்க வேண்டும் என்ற அழைப்பை கைவிட்டு, நேர்மாறான காரியங்களைச் செய்தார்கள் (ஏசா. 3:14-15).

ஆனாலும், காயீன் ஆபேல் நிகழ்ச்சியில், தேவன் அவனை துரத்திவிட்ட பிறகும், அவனை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார் (ஆதி. 4:15-16). காயீன் ஆபேலுக்கு என்ன செய்திருக்க வேண்டுமோ அதை தேவன் காயீனுக்கு செய்தார். தேவன், இயேசுவாய் வந்து நமக்கு செய்யவெண்டியதின் ஒரு அழகான அடையாளமாயிருந்தது.

இயேசு நம்மை அவருடைய கவனிப்பில் வைத்துக்கொள்கிறார். நாமும் போய் மற்றவர்களுக்கு அப்படியே செய்ய பலப்படுத்துகிறார்.