‘போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற’ என்ற அர்தத்தைக் கொண்ட அனமார்ஃபிக் கலையின் அற்புதத்தை கண்டுபிடித்தேன். முதலில் சீரற்ற பகுதிகளின் வகைப்படுத்தலாக தோன்றும் அனமார்ஃபிக் சிற்பம், ஒரு சரியான கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒரு பக்கத்தில் தொடர்ச்சியான செங்குத்தான வரிசையை ஒன்றுசேர்ந்து ஒரு புகழ்பெற்ற தலைவரின் முகத்தை வெளிப்படுத்துகிறது. மற்றொரு பக்கத்தில் கயிற்றின் தொகுப்பு ஒரு யானையின் வெளிப்புற உருவமாக மாறுகிறது. முற்றொரு கலைப்படைப்பான கம்பியில் தொங்கவிடப்பட்ட நூற்றுக்கணக்கான கருப்பு புள்ளிகள், சரியாக பார்க்கும்போது ஒரு பெண்ணின் கண்ணைப் போல் காட்சியளிக்கின்றன. அனமார்ஃபிக் கலையில், அதன் பொருள் வெளிப்படும் வரை அதை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்த்தால் தான் விளங்கும்.

வரலாறு, கவிதை மற்றும் பல ஆயிரக்கணக்கான வசனங்களைக் கொண்ட வேதாகமம் சில நேரங்களில் புரிந்துக் கொள்வது சற்று கடினமாகவே இருக்கிறது.  ஆனால் அதன் அர்த்தத்தை அறிந்துக் கொள்ள வேதவசனமே கற்றுத்தருகிறது. அதை ஒரு அனமார்ஃபிக் சிற்பமாக நடத்தி: வெவ்வேறு கோணங்களிலிருந்து கவனித்துப் பார்த்து ஆழமாக தியானிக்கவும்.

கிறிஸ்துவின் உவமைகள் இந்த வகையில் தான் செயல்படுகின்றன.  அவைகளைக் குறித்து அதிகமாக சிந்திக்க அக்கரை உள்ளவர்கள்  அதன் அர்த்தத்தை “பார்ப்பதற்க்கு கண்களைப்” பெற்றுக்கொள்ளுகிறார்கள். (மத். 13:10-16).  கர்த்தர் புத்தியை தந்தருளும்படியாய் தான் சொல்லுகிற காரியங்களை சிந்தித்துக்கொள்ள பவுல் தீமோத்தேயுவுக்கு கூறினார். (2 தீமோ. 2:7). சங்கீதம் 119ம் அதிகாரத்தை மீண்டும் மீண்டும் படிப்பது –  வேதத்தை தியானிப்பது ஞானத்தையும் புத்தியையும் தரும். அதன் அர்த்தத்தை அறிந்துக்கொள்ள நம் கண்களைத் திறக்கும். (119:18, 97-99).

ஒரு உவமையை ஒரு வாரத்திற்கு தியானிப்பதும் ஒரு சுவிசேஷ புத்தகத்தை ஒரு அமர்விலேயே வாசிப்பதும் எப்படி இருக்கும் ? ஒரு வசனத்தை எல்லா கோணங்களிலிருந்தும் வாசிக்க நேரத்தை செலவிடுங்கள். ஆழமாய் தியானிக்கவும். வேதத்தை வாசிப்பதன் மூலமாக அல்ல, வேதத்தை தியானிப்பதின் மூலமாகவே நமக்கு வேத அறிவு கிடைக்கும்.

தேவனே, நாங்கள் பார்க்கும்படி எங்களுக்கு கண்களைத் தாரும்.