சந்திரனை வட்டமிட்ட முதல் விண்வெளி பயணத்தை ஃபிராங்க் போர்மேன் நடத்திச் சென்றார். அவருக்கு அது திருப்திகரமாய் இல்லை. போய் வருவதற்கு இரண்டு நாட்கள் எடுத்தது. ஃபிராங்குக்கு பயண நோய் வந்ததினால் இதை கைவிட்டுவிட்டார். முப்பது நிமிடங்கள் எடை இல்லாமல் இருந்தது நன்றாகவே இருந்தது என்று அவர் கூறினார். பிறகு அதற்கு பழக்கப்பட்டுவிட்டார். அருகில் சென்ற போது நிலவு மங்கியிருப்பதையும் குழி குழியாய் இருப்பதையும் கண்டார். அவரது குழுவினர் சாம்பல் நிற தரிசு நிலத்தை படமெடுத்த பின்னர் சலித்துவிட்டனர்.
இதற்கு துன்பு வேறு யாரும் போகாத இடத்திற்கு ஃபிராங்க் சென்றார். அது போதாததாயிருந்தது. இந்த உலகத்திற்கு வெளியே நடந்த அனுபவத்தால் அவர் விரைவில் சோர்வடைந்ததால் இந்த விஷயத்தில் நமக்கு இருக்கும் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த பூமிக்குரிய எந்த அனுபவமும் நமக்கு இறுதியான மகிழ்ச்சியைத் தர முடியாது என்று பிரசங்கியை எழுதியவர் கவனித்தார். “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை. கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை” (1:8). நாம் பரவசத்தின் தருணங்களை உணரலாம் ஆனால் அந்த உற்சாகம் தொய்ந்துப்போய் அடுத்த உணர்ச்சியூட்டும் காரியத்தை நாடுகிறோம்.
சந்திரனுக்குப் பின்னால் இருளிலிருந்து பூமி எழுவதைக் கண்ட காட்சி, ஃபிராங்கிற்கு ஒரு மகிழ்ச்சியான தருணமாயிருந்தது. நீல மற்றும் வெள்ளை சுழல் பளிங்கு போல நம் உலகம் சூரிய ஒளியில் பிரகாசித்தது. அதே போல உண்மையான மகிழ்ச்சி நம்மேல் பிரகாசிக்கும் குமாரன் – நம்முடைய ஜீவன், நம் வாழ்வின் மூலாதாரணம், அன்பு, மற்றும் அழகிற்கு இறுதி ஆதாரமயிருக்கிற இயேசுவிடமிருந்து வருகிறது. நம்முடைய ஆழ்ந்த திருப்தி இந்த உலகத்தின் வெளியிலிருந்து வருகிறது. நம்முடைய பிரச்சனை? நாம் இங்கிருந்து சந்திரனுக்கு செல்லலாம், ஆனாலும் நாம் வெகு தூரம் செல்லவில்லை.
நீங்கள் எப்பொழுது அதிக மகிழ்ச்சியாக உணர்ந்திருக்கிறீர்கள்? அது ஏன் நிரந்தரமானதாக இல்லை.? அதனுடைய சிறிதுகால தன்மையிலிருந்து நீங்கள் எதைக் கற்றுக்கொள்ளுகிறீர்கள்?
இயேசுவே, உம்முடைய அன்பின் ஒளியை என் மேல் பிரகாசிக்கப் பண்ணும்.