பாரிஸில் உள்ள பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ் பாலத்தின் கற்பனைக்குறிய ஒவ்வொரு பகுதியிலும் தங்களின் காதலர்களின் ஆயிரக்கணக்கான பெயரின் முதலெழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த கொண்டிப்பூட்டுகளைக் கண்டு ஆச்சரியத்துடன் நின்றேன். சீன் ஆற்றின் நடப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் பாலம் முழுவதும், ஒரு ஜோடியின் “என்றென்றைக்கும்” என்ற உறுதிமொழியினால் காதலர்களின் அடையாளமான இந்தப் பூட்டுகளால் மூழ்கியிருந்தது. 2014ம் ஆண்டு இந்தப் பூட்டுகள் அதிர்ச்சியூட்டும் 50 டன் எடை கொண்டு, பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததால், இந்தப் பூட்டுக்களை அகற்றவேண்டியிருந்தது.
அன்பு பாதுகாப்பானது என்ற உறுதி வேண்டி மனிதன் எவ்வளவாய் ஏங்குகிறான் என்பதை இந்த ஏராளமான காதல் பூட்டுகள் சுட்டிக்காட்டுகிறது. உன்னதப்பாட்டு, பழைய ஏற்பாட்டில் ஒரு புத்தகம், இரண்டு காதலர்களுக்கிடையே ஒரு உரையாடலைச் சித்தரிக்கிறது. அந்தப் பெண் பாதுகாப்பான அன்பிற்காக ஏங்குவதை “நீர் உம்மடைய இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்” (உன்ன. 8:6) என்று கேட்கிறாள்.
உன்னதப்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற நீடித்த காதல் அன்புக்கான ஏக்கம், புதிய ஏற்பாட்டில் எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் நாம் பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்பட்டிருக்கிறோம் (1:3) என்ற சத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது. மனித அன்பு சிக்கலானதாயிருக்கும் மற்றும் காதல் பூட்டுகளை பாலத்திலிருந்து அகற்றிவிட முடியும் ஆனால் நம்மில் வாசமாயிருக்கிற கிறிஸ்துவின் ஆவி தேவனின் முடிவில்லாத அன்பையும் தன்னுடைய ஒவ்வொரு பிள்ளைக்காக அவர் வைத்திருக்கிற நிரந்திர உறுதியான அன்பையும் நிரூபிக்கிறது.
உங்கள் பரலோகப் பிதாவின் பாதுகாப்பான அன்பை நீங்கள் எவ்வாறு அனுபவித்திருக்கிறீர்கள் ? அவருடைய அன்பு உங்களை வழிநடத்தவும், உற்சாகப்படுத்தவும் எப்படி அனுமதிப்பீர்கள்?
பரலோகப் பிதாவே, மனித அன்பின் பாதுகாப்பு மழுப்பலானதாயிருந்தாலும், என் மீது நீர் வைத்திருக்கிற அன்பு வலுவானது, உறுதியானது மற்றும் நித்தியமானதாயிருப்பதற்காக நன்றி.