எழுத்தாளரான மார்க் ட்வைன் நம் வாழ்க்கையில் எதைப் பார்க்கிறோம் – எப்படி பார்க்கிறோம் – என்பது நம்முடைய அடுத்த அடியில் செய்வதில் மட்டுமல்ல நம்முடைய விதியைக் கூட பாதிக்கும் என்று பரிந்துரைக்கிறார். “உங்களுடைய கற்பனை உங்கள் கவனத்திற்கு அப்பாற்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் கண்களை சார்ந்திருக்க முடியாது” என்று ட்வைன் கூறுகிறார்.
பேதுருவும், யோவானும், நாடோறும் அலங்கார வாசலில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்த சப்பாணியை சந்தித்த போது பார்வையைக் குறித்து பேதுரு பேசினார் (அப். 3:2). அந்த மனிதன் அவர்களிடம் பிச்சை கேட்டபோது பேதுருவும் யோவானும் அந்த மனிதனை உற்றுப்பார்த்து “எங்களை நோக்கிப்பார்” (வச. 4)என்றார்கள்.
அவர் ஏன் அதைச் சொன்னார்? கிறிஸ்துவின் ஸ்தானாதிபதியாய் பேதுரு அந்தப் பிச்சைக்காரன் தன்னுடைய சொந்த வரம்புகளையும், அவனுடைய பணத்தேவைகளையும் பார்ப்பதை நிறுத்த வேண்டுமென்று விரும்பினார். அந்தப் பிச்சைக்காரன் அப்போஸ்தலரைப் பார்த்தபோது தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதின் உண்மையைக் கண்டார்.
பேதுரு அவனைப் பார்த்து “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை. என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீ எழுந்து நட” என்று சொல்லி “வலது கையினால் அவனைப் பிடித்து தூக்கி விட்டான். உடனே அவனுடைய கால்களும், கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்து தேவனைத் துதித்தான்” (வச. 7-8).
என்ன நடந்தது ? அந்த மனிதன் தேவனிடத்தில் விசுவாசம் வைத்தான் (வச. 16). சுவிசேஷகர் சார்ல்ஸ் ஸ்பர்ஜன் “உங்களுடைய கண்கள் அவரை நோக்கிக்கொண்டிருக்கட்டும்” என்று வலியுறுத்தினார். இப்படி செய்யும் போது நாம் தடைகளைப் பார்ப்பதில்லை. நம்முடைய வழிகளைச் செவ்வைப்படுத்தும் தேவனையே நாம் பார்க்கிறோம்.
தேவனையல்லாமல் நீங்கள் யாரை கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள்? மீண்டும் கவனம் செலுத்திய விசுவாசத்துடன், நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக அவரிடம் எதைப் பார்க்கிறீர்கள்?
பரலோகப் பிதாவே, என்னுடைய கண்கள் உம்மை விட்டு விலகும்போது, என்னுடைய கவனத்தை உம்முடைய அளவில்லா வல்லமையின் மேல் செலுத்தவும்.