சாராவுக்கு அவளுடைய மூட்டுக்கள் இடம்பெயறும் ஒரு அரிய நிலை உள்ளது. இதனால் அவள் நகர்வதற்கு மின்சார சக்கர நாற்காலியை சார்ந்திருக்க வேண்டியிருந்தது.

சமீபத்தில் ஒரு கூட்டத்திறுகு செல்லும் வழியில், சாரா தன்னுடைய சக்கர நாற்காலியினால் ரயில் நிலையத்திறுகுச் சென்றாள். ஆனால் அங்கு லிஃப்ட் (மின்தூக்கி) உடைந்திருப்பதைக் கண்டாள். மீண்டும், நடைமேடைக்குச் செல்ல வழியில்லாததால், நாற்பது நிமிடங்கள் பிரயாண தூரத்தில் இருக்கும் மற்றொரு ரயில் நிலையத்திற்கு டாக்ஸியில் செல்ல அவளுக்கு கூறப்பட்டது. டாக்ஸி அழைக்கப்பட்டது ஆனால் வரவில்லை. சாரா பிரயாணப்படுவதை விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றாள்.

துரதிர்ஷ்டவசமாக, சாராவுக்கு இது வழக்கமாக நிகழக்கூடியதொன்றாக இருந்தது. உடைந்த லிஃப்டுகள் அவள் ரயில் ஏற தடையாயிருந்தது, மறக்கப்பட்ட வளைவுகளால் அவள் ரயிலிலிருந்து கீழே இறங்க முடியாமல் போய் விடுகிறது. சில நேரங்களில், சாராவுக்கு உதவி தேவைப்படுவதால் ரயில்வே ஊழியர்களுக்கு அவள் ஒரு தொல்லையாகிவிடுகிறாள். அனேக நேரங்களில் அவளுக்கு அழுகையே வந்துவிடும்போல் இருந்தது.

மனித உறவுகளை ஆளும் அனேக வேதாகம சட்டங்கங்களில் “உன்னில் நீ அன்புகூறுவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக” என்பதே பிரதானமானது. (லேவி. 19:18, ரோம. 13:8-10). இப்படிப்பட்ட அன்பு நம்மை பொய், திருட்டு மற்றும் வஞ்சனை செய்வதிலிருந்து தடுக்கிறதுமல்லாமல் (லேவி. 19:11,14), நாம் செயல்படுவதையே மாற்றிவிடுகிறது.  ஊழியர்களை நியாயமான முறையில் நடத்த வேண்டும் (வச. 13). ஏழைகளுக்கு தாராளமாகக் கொடுக்க வேண்டும்(வ 9-10).  சாராவின் விஷயத்தில், லிஃப்டை சரிசெய்து, வளைவுகளை வெளியே இழுத்து விடுபவர்கள், பொறுத்தமற்ற வேலையை செய்யவில்லை மாறாக மற்றவர்களுக்கு முக்கியமான சேவை செய்கிறார்கள்.

வேலையை ஊதியத்திற்காகவோ அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காகவோ செய்வதாகக் கருதினால், மற்றவர்கள் எரிச்சலூட்டுவதாகவே நினைப்போம். நம்முடைய வேலைகளை அன்பு செலுத்துவதற்கான வாய்ப்பாக கருதினால், நம்முடைய அன்றாட பணிகள் புனித நிறுவனமாக மாறிவிடும்.