வெட்டுக்கிளி, புள்ளிகளுள்ள வெளிப்புற இறக்கைகளுடனும், பறக்கும் போது ஒளிரும் தன்மையுள்ள மஞ்சள் நிறத்தில் மைப்பூச்சுப்போல படிந்திருக்கும் இறக்கைகளையுமுடைய ஒரு அழகிய பூச்சி. ஆனால் அதனுடைய அழகு சிறிது ஏமாற்றக்கூடியதாயிருக்கிறது. இந்தப் பூச்சி பயிர்களை ஆக்கிரமித்து, சுற்றுசூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய திறன் கொண்டது. வெட்டுக்கிளி, கோதுமை, மக்காச்சோளம், மற்றும் பிற தாவரங்கள் அடங்கிய பச்சை நிறமான பகுதிகளை தின்றுவிடும். அவைகள் இந்தத் தாவரங்களிலுள்ள சாறுகளை உறிஞ்சி அவைகளை பயனற்றவைகளாக்கி விடும்.

ஆதாம் மற்றும் ஏவாளின் கதையில், நாம் ஒரு வித்தியாசமான அச்சுறுத்தலைப்பற்றி காண்கிறோம். சர்ப்பமாகிய சாத்தான், இந்த தம்பதியர், தேவனுக்கு கீழ்படியாமலும், அவர்கள் தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிட்டால் தேவர்களைப்போல இருப்பார்கள் என்றும் சொல்லி, ஏமாற்றினான் (ஆதீ. 3:1-7). ஆனால் ஏன் ஒரு சர்ப்பத்திற்கு செவிகொடுக்க வேண்டும்?. அவனுடைய வார்த்தைகள் ஏவாளைக் கவர்ந்ததா அல்லது அவனில் வேறு எதுவும் கவர்ச்சிகரமாக இருந்ததா?. சாத்தான் மிகவும் அழகுள்ளவனாக சிருஷ்டிக்கப்பட்டான்  என்று வேதம் சொல்லுகிறது. (எசே. 28:12). ஆயினும் சாத்தான் தான் ஏவாளைக் கவர்ந்திழுக்க பயன்படுத்திய அதே சோதனையினால் தானும் விழுந்தான். : “நான் உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” (ஏசா. 14:14, எசே. 28:9).

இப்பொழுது சாத்தானுக்கு இருக்கும் எந்த அழுகும் ஏமாற்றத்தான் பயன்படுகிறது (ஆதி. 3:1, யோவா. 8:44, 2 கொரிந்தியர் 11:14). அவன் விழுந்ததைப்போல, மற்றவர்களையும் வளரவிடாதப்படி கீழே இழுக்க பார்க்கிறான். ஆனால் அவனைக்காட்டிலும் வல்லமையுள்ளவர் நம் அருகில் இருக்கிறார். நம் அழகான மீட்பர் இயேசுவிடம் நாம் ஓடலாம்.