என் சகோதரன் டேவிட் திடீரென இருதய செயலிழப்பு காரணமாக இறந்த போது, என் வாழ்க்கையைப் பற்றிய முன்னோக்கு, வியக்கத்தக்க முறையில் மாறியது. ஏழு பிள்ளைகளில் டேவ் நான்காவது பிள்ளை ஆனால் எங்களில் அவர்தான் முதலாவது மரித்தார். எதிர்பாராத விதத்தில் இறந்த அவருடைய மரணம் என்னை அதிகம் சிந்திக்க வைத்தது. எங்களுக்கு வயது செல்ல செல்ல எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தில் ஆதாயத்திற்கு பதில் இழப்பையே நாங்கள் சந்திக்க வேண்டுமென்பது வெளிப்பட்டது. அந்த பிரியாவிடை, வணக்கத்தைப் போல பண்பு படுத்தப்படுவதாக இருக்கப் போகிறது.
அறிவுப்பூர்வமாக இவை எதுவுமே ஆச்சர்யமாக இல்லை – இது தான் வாழ்க்கை. ஆனால் இதை உணர்ந்துக்கொள்ளுதல், மூளைக்கு ஒரு மின்னல் ஒளி போன்ற உணர்வாயிருந்தது. இது வாழ்க்கை நமக்கு கொடுக்கும் ஒவ்வொரு கணமும், நேரம் அனுமதிக்கும் எல்லா வாய்ப்புகளுக்கும் ஒரு புதிய, முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. பிரியாவிடையே தேவைப்படாத நாம் மறுபடியும் சந்திக்கும் உண்மைக்கு ஒரு பெரிய மதிப்பு கொடுத்தது.
இந்த உண்மை வெளிப்படுத்தல் 21:3-4 வசனங்களின் மையமாக காண்கிறோம். “தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். தேவன் தாமே அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துப்போயின”.
இன்றைக்கு நாம் ஒருவேளை நீண்ட பிரியாவிடைகளை அனுபவித்துக்கொண்டிருக்கலாம், ஆனால் கிறிஸ்துவின் மரணத்திலும் அவருடைய உயிர்த்தெழுதலிலும் இருக்கிற நம்முடைய நம்பிக்கை, நமக்கு நித்திய வணக்கங்களை வாக்களிக்கிறது.
உங்ளுடைய அன்பிற்குரியவர்களின் இழப்புகளை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?. அவர்களை நீங்கள் மறுபடியும் பார்ப்பீர்கள் என்ற அறிவு உங்களை எப்படி ஆறுதல்படுத்துகிறது?.
தேவனே, நீரே நித்திய ஜீவனைக் கொடுக்கும் ஜீவனுள்ள தேவனாயிருக்கிறதற்காக நன்றி. எங்களுடைய இழப்புகளிலும், துயரங்களிலும் எங்களுடைய நித்திய நம்பிக்கையினால் எங்களை ஆறுதல்படுத்தும்.