பேரழிவுகள் நிகழும்போது முதல் பதிலளிக்கிறவர்கள் முன்னணியில் இருக்கும்போது அர்பணிப்பையும் தைரியத்தையும் காட்டுகின்றனர். 2001 ம் ஆண்டு நியூ யார்க் நகரத்தின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட போது ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயப்பட்டனர், நானூறுக்கும் மேலான அவசர தொழிலாளர்களும் உயிரிழந்தனர். இப்படி முன்னணியில் இருந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க அரசாங்கம் செப்டெம்பர் 12ம் தேதியை தேசிய ஊக்குவிக்கும் நாளாக நியமித்தது.
ஒரு அரசாங்கம் தேசிய ஊக்க தினத்தை அறிவித்தது தனித்துவமானதாகத் தோன்றலாம், அப்போஸ்தலனாகிய பவுல், ஒரு சபையின் வளர்ச்சிக்கும் இது தேவை என்பதை உணர்ந்தார். அவர் மக்கெதோனியாவில் ஒரு பட்டணமான தெசலோனிக்காவில் இருக்கும் இளம் சபையாருக்கு, “திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்” என்று பரிந்துரைத்தார். (1 தெச. 5:14). அவர்கள் துன்புறுத்தத்திலிருந்தாலும் “உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்” (வச. 15) என்று விசுவாசிகளை ஊக்குவித்தார். மனிதர்களாக அவர்கள் விரக்தி, சுயநலம் மற்றும் மோதல்களுக்கு ஆளாக நேரிடும் என்று அவர் அறிந்திருந்தார். தேவனுடைய உதவியும் பலமும் இல்லாவிட்டால் அவர்கள் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்த முடியாது என்றும் அவர் அறிந்திருந்தார்.
இன்று விஷயங்கள் வேறுபட்டவை அல்ல. நாம் எல்லோருக்கும் ஊக்கம் தேவை மற்றும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் நாம் ஊக்கப்படுத்த வேண்டும். ஆனாலும் நாம் நம்முடைய சுயபலத்தால் அதைச் செய்ய முடியாது. அதனால் தான் பவுல் “உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்” (வச. 24) என்று உறுதியளித்து ஊக்கப்படுத்துகிறார். தேவனுடைய உதவியால் நாம் அனுதினமும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்.
ஊக்கமளிக்கும் ஒரு வார்த்தையினால் எப்படி விரக்தியை விரட்டியடிக்க முடியும்?. இன்றைக்கு யாரை நீங்கள் ஊக்குவிப்பீர்கள்?
தேவனே, நீர் என்னை ஒவ்வொரு நாளும் ஊக்கப்படுத்துகிறதற்காக நன்றி. நான் யாரை ஊக்குவிக்க வேண்டும் என்று காட்டும்.