1800ன் பிற்பகுதியில், அமெரிக்காவின் ஒரு பாலைவனத்தில் சவாரி செய்யும்போது, ஜிம் வைட் ஒரு விசித்திரமான மேகம் வானத்தை நோக்கி சூழன்றதைக் கண்டார். அது காட்டுத்தீ என சந்தேகித்து, மாடு மேய்க்கும் இளைஞான ஜிம், அந்தத் தீ வரும் இடத்தை நோக்கி சென்றபோது, தரையில் ஒரு துளையிலிருந்து வெளியேறும் வெளவ்வால்களின் திரள்கூட்டம் என்பதைக் அறிந்துக் கொண்டார். ஜிம் கண்ட இந்த மகத்தான மற்றும் கண்கவர் அமைப்பு, பின்னர் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தளமாக மாறியது.
ஒரு மத்திய கிழக்கு பாலைவனத்தில் மோசே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது, அவரது கவனத்தை ஈர்த்த ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தார் – ஒரு முட்செடி அக்கினியினால் ஜுவாலித்து எரிந்தும் வெந்து போகாமல் இருந்தது (யாத். 3:2). தேவனே முட்செடியிலிருந்து பேசினது, மோசே தான் முன்பு கண்ட காட்சியிலும் மகத்தான ஒன்றாக உணர்ந்தார். தேவன் மோசேயை நோக்கி “நான் உன் பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனாயிருக்கிறேன்”
(வச. 6) என்றார். தேவன், ஒரு அடிமைப்படுத்தப்பட்ட மக்களை சுதந்திரத்திற்கு நேராக வழி நடத்தி அவர்கள் தன்னுடைய பிள்ளைகள் என்ற உண்மையான அடையாளத்தைக் காட்டினார் (வச. 10).
அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் “பூமியில் உள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” (ஆதி. 12:3) என்று தேவன் ஆபிரகாமுக்கு வாக்கு பண்ணியிருந்தார். எகிப்திலிருந்து இஸ்ரவேலரின் பயணம் – அந்த ஆசீர்வாதத்தின் ஒரு படிதான் – ஆபிரகாமின் சந்ததியான மேசியா மூலமாக தன்னுடைய சிருஷ்டிப்பை மீட்க தேவனின் திட்டமாகும்.
தேவன் இந்த மீட்பை எல்லோருக்கும் வழங்குவதால், இன்று நாம் அந்த ஆசீர்வாதத்தின் பலன்களை அனுபவிக்கலாம். இந்த முழு உலகத்தின் பாவத்திற்காக கிறிஸ்து மரிக்கும்படியாக உலகத்தில் வந்தார். அவரை விசுவாசிப்பதால், நாமும் ஜீவனுள்ள தேவனின் பிள்ளைகளாகிறோம்.
எந்த ஆச்சர்யமான விஷயங்கள் நீங்கள் தேவனை அறிந்துக்கொள்ள உதவினது?. அவருடைய பிள்ளைகளில் நீங்கள் ஒருவர் என்ற அறிவில், நீங்கள் எப்படி வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்?.
தேவனே, உம்முடைய மகா வல்லமையையும், பரிசுத்தத்தையும், பிரசன்னத்தையும் மீறி நான் உம்மை அணுகும்படியாக நீர் இருப்பதால் நன்றி.