நான் சமீபத்தில் ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டேன். அப்போது பேச்சாளர் அங்கு பட்டம்பெற காத்திருக்கும் இளைஞர்களுக்கு தேவையான சவாலை வழங்கினார். அவர்களுடைய வாழ்க்கையில் “அடுத்து என்ன ?” அடுத்து என்ன தொழில் தொடர போகிறார்கள்? எங்கு பள்ளிக்கூடத்திற்கு அல்லது அடுத்த வேலைக்கு செல்லப்போகிறார்கள் ? என்று எல்லோராலும் கேட்கப்படும் ஒரு காலம் என்பதை குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், இப்போது நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் ? என்ற கேள்வியே மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறினார்.
அவர்களுடைய விசுவாச பயணத்தின் சூழலில், ஒவ்வொரு நாளும் தனக்காக அல்ல, இயேசுவுக்காக வாழ என்ன முடிவுகளை எடுப்பார்கள்?.
இவருடைய வார்த்தைகள், இப்போது எப்படி வாழவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிற நீதிமொழிகள் புத்தகத்தை நினைப்பூட்டியது. ஊதாரணமாக, இப்பொழுது நேர்மையாக நடக்க வேண்டும் (11:1), இப்பொழுது சரியான நண்பர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் (12:26), இப்பொழுது நேர்மையுடன் வாழவேண்டும் (13:6) இப்பொழுது நல்ல தீர்ப்பு சொல்ல வேண்டும் (13:15), இப்பொழுது ஞானமாய் பேச வேண்டும் (14:3).
பரிசுத்த ஆவியின் ஏவுதலால், இப்பொழுது, தேவனுக்காய் வாழ்வது, அடுத்தது சுலபமானது எது என்பது பற்றிய முடிவுகளை எடுக்க உதவுகிறது. “ தேவன் ஞானத்தைத் தருகிறார்: …. அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார், …. அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதைகளை காப்பாற்றுகிறார்” (2:6-8). இப்பொழுது, அவருடைய பிரமாணங்களின்படி வாழ நமக்கு தேவையானதை தேவன் தருவார் மற்றும் அவருடைய கனத்திற்காக அடுத்து நாம் செய்யவேண்டியது என்ன என்பதையும் தேவன் வழிகாட்டுவார்.
தேவனை கனப்படுத்த இப்போது நீங்கள் உங்கள் வழிகளில் என்ன மாற்றங்கள் செய்யப்படவேண்டியிருக்கிறது?. இதை செய்வதற்கு நீங்கள் எப்படி தேவனின் வழிநடத்துதலையும் அதிகாரத்தையும் தேடுவீர்கள்
பரலோகப் பிதாவே, என்னுடைய வாழ்க்கையில் இன்றைக்கான உம்முடைய வழிநடத்துதலுக்காக நன்றி. என்னை பாதுகாத்து, உமக்கு பிரியமாயும் மற்றும் உம்மை வெளிப்படுத்தவும் வாழ ஞானத்தைத் தாரும்.
ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றி இன்னும் அதிகமாய் அறிந்துக்கொள்ள christianuniversity.org/sf212 என்ற தளத்தை பார்வையிடவும்.