கனடா ஜெட் விமானத்தில், கடுமையான இருளில், டாரா விழித்துக் கொண்டாள். அவள் இன்னமும் தன்னுடைய இருக்கை பட்டைகளை அணிந்திருந்தாள். மற்ற பயணிகள் எல்லாரும் வெளியேறிய பின்னர், அந்த விமானத்தை நிறுத்தும் இடத்திற்குக் கொண்டு வரும் வரை, அவள் தூங்கியிருக்கின்றாள். ஏன் அவளை மற்றவர்கள் எழுப்பவில்லை? அவள் எப்படி இங்கே வந்தாள்? அவள் தன்னுடைய மூளையைச் சுற்றியிருந்த நூலாம்படைப் பின்னலை உதறி நினைவுபடுத்த முயற்சித்தாள்.
எதிர் பாராத ஓர் இடத்தில் நீ இருந்திருக்கின்றாயா? உன் இளம்வயதிற்கு இத்தகைய வியாதிவரக் கூடாது, இந்த வியாதிக்கு மருத்துவமும் இல்லை. கடைசியாக நீ எடுத்துக் கொண்ட மருத்துவ சோதனைகள் சிறப்பானவையாக உள்ளன. ஏன் அந்த நிலை நீக்கப் பட்டது? நீ உன்னுடைய திருமண வாழ்வின் மிகச் சிறந்த வருடங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாய். இப்பொழுதோ தனிமையான ஒற்றைப் பெற்றோராக இருக்கின்றாய். பகுதி நேர வேலையே உனக்குண்டு.
நான் எப்படி இங்கு வந்தேன்? “சாம்பலில் உட்கார்ந்து” (யோபு.2:8) யோபுவும் இவ்வாறு ஆச்சரியத்தோடு சிந்தித்திருப்பான். அவன், நொடிப் பொழுதில் தன்னுடைய பிள்ளைகள், செல்வம் மற்றும் சரீர சுகத்தை முற்றிலுமாக இழந்தான். அவன் எப்படி இந்த நிலைக்கு வந்தான் என்பதை அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனாலும், அவற்றை நினைவில் கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருந்தான்.
யோபு தன்னைப் படைத்தவரை நினைத்துப் பார்கின்றான், அவர் எத்தனை நல்லவராக இருந்திருக்கின்றார். அவனுடைய மனைவியிடம் “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம், தீமையையும் பெற வேண்டாமோ?” (வ.10) என்கின்றான். இந்த நல்ல தேவன் உண்மையுள்ளவராய் இருந்ததை யோபு எண்ணிப் பார்க்கின்றான். அவன் புலம்புகின்றான், அவன் பரலோகத்தை நோக்கி கதறுகின்றான். அவன் தன் நம்பிக்கையிலே, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்………..என்றும் நான் அறிந்திருக்கிறேன்”, “நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்” (19:25-26) என்கின்றார். யோபு நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக் கொண்டான், தன்னுடைய கதையின் ஆரம்பத்தையும் முடிவையும் நன்கு நினைவில் வைத்திருந்தான்.
எந்த சூழ்நிலைகள் உன்னை வேதனையிலும் பயத்திலும் தள்ளுகின்றன? நீ என்ன செய்து, புதிய வழியைப் பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் வாழ முடியும்?
அப்பா, நான் ஆச்சரியப்படும் காரியங்கள், உம்மை ஆச்சரியப் படுத்துபவை அல்ல, நீ நல்லவராகவே முன்பும் இருந்தீர், இப்பொழுதும் நல்லவராகவே இருக்கின்றீர்