கர்நாடகா மாநிலத்தில், பாறை நிறைந்த ஒரு சிறிய பகுதியை நானும் என்னுடைய கணவனும் பார்வையிட்ட போது, ஒரு வறண்ட பாறையில் மலர்ந்திருந்த சூரிய காந்தி மலரைப் பார்த்தேன். அவ்விடத்தில் முட்களைக் கொண்ட கள்ளிச் செடிகளும், களைகளுமே வளர்கின்றன. இந்த சூரியகாந்தி செடி வீடுகளில் வளரும் மற்றவற்றைப் போல உயரமாக வளர்ந்திருக்கவில்லை. ஆனால் அந்த மலரின் பிரகாசம் என்னை மகிழ்ச்சியாக்கியது.
ஒரு வறண்ட நிலப் பரப்பில் காணப்பட்ட எதிர் பாராதபிரகாசம், இயேசுவின் விசுவாசிகளின் வாழ்வும் வெறுமையாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் இருப்பதை நினைவுபடுத்தியது. பிரச்சனைகள் மேற்கொள்ள முடியாதவைகளாக காணப்படலாம். சங்கீதக்காரனின் கதறலைப் போன்று, நம்முடைய ஜெபங்களும் செவிகொடுக்கப் படாதவைகளாக காணப்படலாம். “கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்” (சங். 86:1) என்கின்றார். அவரைப் போல நாமும் மகிழ்ச்சிக்காக ஏங்கிக் கொண்டிருக்கலாம் (வ.4).
நாம் ஆராதிக்கும் தேவன் உண்மையுள்ளவர் என்று தாவீது வெளிப்படுத்துகின்றார், “ஆண்டவரே நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும்…………கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்” (வ.5) என்கின்றார். நீர் பதிலளிக்கின்ற தேவன் (வ.7).
சில வேளைகளில், வறண்ட பகுதியில், தேவன் ஒரு சூரியகாந்தி மலரை அனுப்புகின்றார். ஊக்கம் தரும் வார்த்தையை நண்பன் மூலம் அனுப்புகின்றார், அல்லது ஆறுதலான வேத வார்த்தையைத் தருகின்றார், நம்பிக்கையுடைய சிறிய நடைகளோடு, நாம் முன்னோக்கிச் செல்ல அழகிய சூரிய உதயத்தைத் தருகின்றார். நம்முடைய கஷ்டங்களிலிருந்து தேவன் நம்மை விடுவிப்பதை நாம் அநுபவிக்க காத்திருக்கும் போது, நாமும் சங்கீதக் காரனோடு சேர்ந்து, “தேவரீர் மகத்துவமுள்ளவரும், அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்” (வ.10) என்று தெரிவிப்போம்.
என்னென்ன கடினமான இடங்களிலிருந்து தேவன் உன்னை விடுவித்துள்ளார்? அப்படிப்பட்ட வேளைகளில், அதனைக் கடந்து செல்வதற்கு உதவியாக ஏதேனும் “உற்சாகமளிக்கும் சந்தர்ப்பங்களை” நீ அனுபவித்தாயா?
அன்புள்ள தேவனே, நீர் மனதுருக்கமும் கிருபையும் உள்ளவராய் இருப்பதால் உமக்கு நன்றி கூறுகின்றேன். கடந்த நாட்களில் நீர் உண்மையுள்ளவராய் என் ஜெபத்தைக் கேட்டு பதிலளித்தீர், இன்னமும் பதிலளிப்பீர் என்பதை நான் நினைவில் வைத்துக் கொள்ள எனக்கு உதவியருளும்.